Just In
- 23 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
தேனியில் டிடிவி தினகரன் தங்க வீடு பார்க்கும் அமமுகவினர்.. கலக்கத்தில் இரண்டு தலைகள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிஎஸ்6 லியோன்சினோ 500 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இதுவே பெனெல்லியின் 3வது பிஎஸ் 6 தர பைக்!
பிஎஸ் 6 தரத்திலான தனது மூன்றாவது பைக்கை இந்தியாவில் பெனெல்லி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பைக்கின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.

காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு புதிய பிஎஸ் 6 மாசு உமிழ்வு விதியை கடந்த வருடம் நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளை புதிய மாசு உமிழ்வு தரத்திற்கு உயர்த்தின.

பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் முதன்மை வாகனங்களை இத்தரத்திற்கு அப்கிரேட் செய்துவிட்டன. மேலும், தங்களின் புதிய தயாரிப்புகளையும் பிஎஸ்6 தரத்திலேயே அறிமுகம் செய்து வருகின்றன. இந்த நிலையிலேயே, பிரபல பிரீமியம் ரக இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பெனெல்லி, அதன் புதுமுக பிஎஸ் 6 தர லியோன்சினோ 500 மாடல் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிறுவனம், நாட்டில் இத்தரத்தில் அறிமுகப்படுத்தும் மூன்றாவது பிஎஸ்6 தரத்திலான பைக் இதுவே ஆகும். இந்த புதிய பைக்கிற்கு ரூ. 4.60 லட்சம் என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆகையால், ஆன்-ரோடில் கூடுதல் விலையுடன் இது விற்பனைக்குக் கிடைக்கும்.

இதனை புதிய சிவப்பு நிற தேர்விலும் வழங்க இருப்பதாக பெனெல்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு ரூ. 10 ஆயிரம் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. அதாவது வழக்கமான நிற தேர்வுகளைக் காட்டிலும் இச்சிவப்பு நிற பெனெல்லி லியோன்சினோ 500 பிஎஸ்6 பைக் பத்தாயிரம் ரூபாய் அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

ஸ்டைல்:
பிஎஸ்4 மாடலைக் காட்டிலும் பிஎஸ்6 மாடல் லியோன்சினோ பைக் லேசான மாறுபாட்ட தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. இது அதன் நியோ-ரெட்ரோ ஸ்டைலை மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த மாற்றம் பழைய மற்றும் புதிய மாடல்களுக்கு இடையே பெரிய வேறுபாட்டை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

எஞ்ஜின் மற்றும் சேஸிஸ்:
பெனெல்லி லியோன்சினோ 500 பைக்கில் பிஎஸ்6 தரத்திலான எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே இப்பைக்கில் செய்யப்பட்டிருக்கும் மிக பெரிய மாற்றம் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 47.5 எச்பியை 8,000 ஆர்பிஎம்மிலும், 46 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டது.

பிஎஸ்6 தர மாற்றத்தால் இதன் எக்சாஸ்ட் திறனில் லேசான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது. முந்தைய மாடலின் எக்சாஸ்டைக் காட்டிலும் இது குறைந்த மற்றும் நல்ல உணர்வை வழங்கக் கூடிய வெளியேற்றம் சத்தத்தை வழங்குகின்றது. ஆகையால், இதனை சாலையில் இயக்கும் உற்சாகமான இயக்க அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதைத்தொடர்ந்து, சிறந்த சஸ்பென்ஷன் அனுபவத்திற்காக 50மிமீ அளவுள்ள யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்திலும், மோனோஷாக் பின்பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும், சிறந்த பிரேக்கிங் வசதிக்காக 320 மிமீ அளவுள்ள டிஸ்க் முன்பக்கத்திலும், 260 மிமீ அளவுள்ள டிஸ்க் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டிருக்கின்றது.

விலை:
பெனெல்லி நிறுவனம் இந்த சிறப்பு வசதிகள் கொண்ட பிஎஸ்6 லியோன்சினோ பைக்கை ரூ. 10 என்ற முன் தொகையில் புக்கிங் செய்து வருகின்றது. மேலும், இந்த புதிய பைக் பழைய மாடலைக் காட்டிலும் ரூ. 20 ஆயிரம் கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. எனவேதான் இப்பைக்கிற்கு விலை ரூ. 4.60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.