அறிமுகத்திற்கு தயார்நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்.. என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு?

பெனெல்லி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த பைக் மாடல் ஒன்று விற்பனைக்கான அறிமுகத்தைப் பெறுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறிமுகத்திற்கு தயார் நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்... என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு..?

பெனெல்லி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த பைக் மாடல்களில் டிஆர்கே 502-ம் ஒன்று. இப்பைக்கையே கடந்த காலங்களில் புதுப்பிக்கும் பணியில் பெனெல்லி ஈடுபட்டு வந்தது. தற்போது இப்பணி நிறைவுற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் முழுமையாக தயார் நிலையில் இருக்கும் டிஆர்கே 502 பைக்கின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

அறிமுகத்திற்கு தயார் நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்... என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு..?

இணையத்தில் கசிந்த புகைப்படம் - 1

வெளியாகியிருக்கும் இந்த புகைப்படங்களினால் புதிதாக என்னென்ன சிறப்பு வசதிகளை டிஆர்கே 502 பைக் பெற்றிருக்கின்றது என்கிற விபரங்கள் கணிசமாக தெரிய வந்திருக்கின்றது. இதில் மிக முக்கியமான மாற்றமாக புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் சேர்க்கப்பட்டிருப்பது இருக்கின்றது.

அறிமுகத்திற்கு தயார் நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்... என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு..?

இணையத்தில் கசிந்த புகைப்படம் - 2

இது முன்பு காணப்பட்ட அதே அளவு மற்றும் உருவத்தில் காட்சியளிக்கின்றது. இருப்பினும், இதில் இடம் பெற்றிருக்கும் தகவல் வழங்கும் கருவிகள் லேசான மாற்றத்தைப் பெற்றிருப்பதை உறுதி செய்கின்றன. இது ஓர் டிஜிட்டல் தரத்திலான ஆனலாக் யூனிட்டாகும்.

அறிமுகத்திற்கு தயார் நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்... என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு..?

இதைத் தொடர்ந்து, ஹேண்டில் பாரிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் இடம் பெற்றிருக்கும் பொத்தான்களுக்கு பின் பகுதியில் ஒளிரும் மின் விளக்குகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவை, எளிதில் பொத்தானைக் கையாள உதவும். குறிப்பாக இது இரவு நேரத்தில் பைக்கிற்கு கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

அறிமுகத்திற்கு தயார் நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்... என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு..?

இதையடுத்து மிக சிறப்பான மாற்றங்களாக புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலில் மட்டுகுவார்ட், புதிய நிறம், ஹேண்ட் குவார்ட் மற்றும் கண்ணாடி உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் இப்பைக் பெறவில்லை. தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் இந்தளவு தகவலை மட்டுமே வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அறிமுகத்திற்கு தயார் நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்... என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு..?

பிஎஸ்4 மாடலில் இடம்பெற்றிருந்த அதே 499.6 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு, பாரல்லல் ட்வின் எஞ்ஜினே இதில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த எஞ்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டிருப்பதால் முன்பை விட குறைந்தளவு திறனையே வெளிப்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

அறிமுகத்திற்கு தயார் நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்... என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு..?

விலை மற்றும் எப்போது புதுப்பிக்கப்பட்ட பெனெல்லி டிஆர்கே 502 பைக்கை எதிர்பார்க்கலாம்?

தற்போது வரை இப்பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. அதேசமயம், ஆட்டோ கார் இந்தியா தளம், "நாட்டில் உள்ள பெனெல்லி பைக் விற்பனையாளர்கள் இப்பைக்கின் அறிமுகம் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கிவிடும் என தெரிவித்திருப்பதாக" தகவல் வெளியிட்டுள்ளது.

அறிமுகத்திற்கு தயார் நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்... என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு..?

மேலும், முந்தைய டிஆர்கே 502 மாடலைக் காட்டிலும் புதுப்பித்தலைப் பெற்றிருக்கும் பைக் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரையிலான விலையுயர்வுடன் விற்பனைக்கு வரலாம் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அறிமுகத்திற்கு தயார் நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்... என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு..?

விற்பனையில் இருந்த பிஎஸ்-4 பெனெல்லி டிஆர்கே 502 பைக் ரூ. 5.1 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli's Famous Motorcycle TRK 502 Ready For Launch. Read In Tamil.
Story first published: Tuesday, January 26, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X