பெனெல்லியின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்... சீனாவில் மோட்டார் கண்காட்சியில் காட்சித்தந்தது!!

பெனெல்லியின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் சீனாவில் நடைபெற்றுவரும் 2021 பீஜிங் மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்கால எலக்ட்ரிக் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பெனெல்லியின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்... சீனாவில் மோட்டார் கண்காட்சியில் காட்சித்தந்தது!!

கியாஞ்சியாங் மோட்டார்சைக்கிள்ஸ், சீனாவில் செயல்பட்டுவரும் இது பெனெல்லியின் முன்னோடி நிறுவனமாகும். மேலும் இந்த முன்னோடி நிறுவனத்தின் சார்பில் தான் முதல் பெனெல்லி எலக்ட்ரிக் பைக் 2021ஆம் ஆண்டிற்கான பீஜிங் மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

‘க்யு.ஜே.7000டி' என்கிற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் பைக் எதிர்காலத்தில் பெனெல்லி பிராண்டில் இருந்து விற்பனைக்கு வெளிவரவுள்ளது. ஏனெனில் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்களின் கையில் தான் உள்ளது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

பெனெல்லியின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்... சீனாவில் மோட்டார் கண்காட்சியில் காட்சித்தந்தது!!

இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் உள்ளிட்ட இயந்திர பாகங்கள் குறித்த விபரங்கள் எதையும் கியாஞ்சியாங் நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. தோற்றத்தை வைத்தும், நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படியும் பார்த்தோமேயானால், இது அதிக செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக கொண்டுவரப்படலாம்.

பெனெல்லியின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்... சீனாவில் மோட்டார் கண்காட்சியில் காட்சித்தந்தது!!

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இதன் எலக்ட்ரிக் மோட்டார் கிட்டத்தட்ட 600சிசி அல்லது அதற்கு மேற்பட்ட சிசி கொண்ட என்ஜினின் தரத்தில் இருக்கும். கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் பைக்கில் மிகவும் கவனிக்கத்தக்க அம்சமாக எலக்ட்ரிக் மோட்டார், பைக்கின் மத்தியில் பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் மோட்டாரின் ஆற்றல் வழக்கமான கியர்பாக்ஸ் மற்றும் செயின் ஃபைனல் ட்ரைவ் மூலமாக பின் சக்கரத்திற்கு செல்லும். சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன.

பெனெல்லியின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்... சீனாவில் மோட்டார் கண்காட்சியில் காட்சித்தந்தது!!

முழு டிஜிட்டல் எல்சிடி திரையானது நெகட்டிவ் திரை உடன் கொடுக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் பைக்காக இருப்பினும் இந்த பைக்கில் பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. முழு ஹெல்மெட்டை வைக்கும் அளவிற்கு இடவசதி கொண்ட இந்த இடத்தில் பொருட்களை வைத்து கொள்ளலாமாம்.

ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளை போன்று தோற்றத்தை கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் பைக்கில் ஹேண்டில்பார் நன்கு உயரத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதியும் பைக்கிற்கு சரியாக மத்தியில் கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த பைக்கில் பயணம் அனுபவம் சிறப்பானதாகவே இருக்கும்.

பெனெல்லியின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்... சீனாவில் மோட்டார் கண்காட்சியில் காட்சித்தந்தது!!

பிளவுப்பட்ட வடிவிலான எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் இருக்கை அமைப்பு என ஒட்டுமொத்தமாக இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் தோற்றம் சீனாவில் விற்பனையில் உள்ள 2021 பெனெல்லி 600ஆர்ஆர் பைக்கை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

இது கான்செப்ட் மாடலே ஆகும். அதனால் இந்த க்யு.ஜே.7000டி வாகனம் விற்பனைக்கு ஏற்ப சற்று மாற்றியமைக்கப்பட்ட பின்னரும் இவ்வாறான தோற்றத்தை தான் கொண்டிருக்கும் என்று நம்மால் உறுதியாக கூற முடியாது. அதேபோல் இந்த கான்செப்ட் மாடல் எப்போது விற்பனை மோட்டார்சைக்கிளாக உருவெடுக்கும் என்பதும் தற்போதைக்கு தெரியவில்லை.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli’s First Electric Motorcycle Previewed At 2021 Beijing Motor Show.
Story first published: Friday, June 4, 2021, 8:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X