புதிய பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் அட்வென்ச்சர் டூரர் பைக்கின் முக்கிய அம்சங்கள்!

பெனெல்லி நிறுவனம் தனது டிஆர்கே 502எக்ஸ் சாகசப் பயண வகை பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய பைக்கில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்ங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 புதிய பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் அட்வென்ச்சர் டூரர் பைக்கின் முக்கிய அம்சங்கள்!

ஆஃப்ரோடு பயன்பாடு

பெனெல்லி நிறுவனம் பிஎஸ்-6 மாடல்களை கொண்டு வருவதில் தீவிரம் காட்டத் துவங்கி இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் பெனெல்லி தனது டிஆர்கே 502 டூரர் வகை பைக் மாடலை கொண்டு வந்தது. இந்த நிலையில், அதன் அடிப்படையிலான ஆஃப்ரோடு வகை பைக் மாடலாக டிஆர்கே 502எக்ஸ் பைக் மாடலையும் பிஎஸ்-6 எஞ்சினுடன் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

 புதிய பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் அட்வென்ச்சர் டூரர் பைக்கின் முக்கிய அம்சங்கள்!

பிஎஸ்-6 எஞ்சின்

இந்த பைக்கின் மிக முக்கிய அம்சமாக, புதிய பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் பைக்கில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 499சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 46.8 பிஎச்பி பவரையும், 46 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் அட்வென்ச்சர் டூரர் பைக்கின் முக்கிய அம்சங்கள்!

முக்கிய அம்சங்கள்

இந்த பைக்கில் பேக்லிட் எனப்படும் ஒளிரும் வசதியுடன் கூடிய சுவிட்சுகள், அலுமினியம் ஃப்ரேம் நக்குல் கார்டுகள், மறுவடிவமைப்பு பெற்ற புதிய ரியர் வியூ மிரர்கள், பெரிய விண்ட்ஸ்க்ரீன் மற்றும் புதிய ஹேண்டில்பார் க்ரிப் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆரஞ்ச் வண்ண எல்சிடி திரை மற்றும் வெள்ளை வண்ண பின்னணியுடன் அனலாக் டாக்கோமீட்டர் இடம்பெற்றுள்ளது.

 புதிய பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் அட்வென்ச்சர் டூரர் பைக்கின் முக்கிய அம்சங்கள்!

பெரிய பெட்ரோல் டேங்க்

புதிய பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் பைக்கில் 20 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. நீண்ட தூர பயணங்களின்போது இது நிச்சயம் போதுமான பயண தூரத்தை வழங்கும். இந்த பைக்கின் முன்புறத்தில் 19 அங்குல ஸ்போக்ஸ் சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல ஸ்போக்ஸ் சக்கரமும் உள்ளன.

 புதிய பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் அட்வென்ச்சர் டூரர் பைக்கின் முக்கிய அம்சங்கள்!

க்ரவுண்ட் க்ளியரன்ஸ்

இந்த பைக் 220 மிமீ க்ரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வந்துள்ளது. இதனால், எந்த ஒரு சவாலான சாலைகள் மற்றும் நிலபரப்புகளையும் எளிதாக எதிர்கொள்ளும்.

 புதிய பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் அட்வென்ச்சர் டூரர் பைக்கின் முக்கிய அம்சங்கள்!

வண்ணத் தேர்வுகள்

புதிய பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் பைக் மாடலானது மூன்று விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். சாம்பல் வண்ணத் தேர்வுக்கு ரூ.5.19 லட்சம் விலையும், சிவப்பு, வெள்ளை வண்ணத் தேர்வுகளுக்கு ரூ.5.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-4 மாடலைவிட இந்த மாடலின் விலை ரூ.30,000 குறைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

 புதிய பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் அட்வென்ச்சர் டூரர் பைக்கின் முக்கிய அம்சங்கள்!

புக்கிங்

புதிய பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் பைக் மாடலுக்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிலும் புக்கிங் ஏற்கப்படுகிறது. புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவில் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்படும். நடுத்தர வகை ஆஃப்ரோடு பைக் மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இந்த பைக் இருக்கும்.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Here are some key things about all new Benelli TRK 502X adventure tourer bike.
Story first published: Friday, March 19, 2021, 11:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X