மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! எவ்வளவு தெரியுமா?!

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் பைக்குகளின் விலைகளை இந்தியாவில் உயர்த்தியுள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! எவ்வளவு தெரியுமா?!

2021ஆம் ஆண்டை பல தயாரிப்பு நிறுவனங்கள் விலை அதிகரிப்புடன் துவங்கியுள்ளன. ஆண்டுத்தோறும் அதிகரித்துவரும் விலை அதிகரிப்புகளினால் இவ்வாறான நடவடிக்கைகளை பிஎம்டபிள்யூ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! எவ்வளவு தெரியுமா?!

இந்த வகையில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் அதன் ஜி310ஆர் பைக்கின் விலையை ரூ.2.45 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல் மலிவான பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக்கான ஜி310ஜிஎஸ் பைக்கின் விலை ரூ.2.85 லட்சத்தில் இருந்து ரூ.2.9 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! எவ்வளவு தெரியுமா?!

பிஎம்டபிள்யூ 310 இரட்டை பைக்குகளின் விலைகள் ரூ.5,000 அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் ஜி310 இரட்டை பைக்குகளை கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தியது.

மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! எவ்வளவு தெரியுமா?!

எல்இடி டிஆர்எல் உடன் எல்இடி ஹெட்லேம்ப், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ப்ரேக் மற்றும் க்ளட்ச் லிவர்கள் மற்றும் புதிய நிறத்தேர்வுகளை பெற்றுள்ள இந்த பிஎம்டபிள்யூ பைக்குகளில் காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! எவ்வளவு தெரியுமா?!

இவை எல்லாத்தையும் விட சிறப்பம்சமாக பைக்குகளின் விலைகள் ரூ.64,000 அளவில் குறைக்கப்பட்டன. ஜி310 இரட்டை பைக்குகள் பிஎம்டபிள்யூ பிராண்டில் விரைவாக இந்தியாவில் பிரபலமான பைக்குகளாகும். இவற்றின் உதவியுடன் இந்த நிறுவனம் 80 சதவீத வளர்ச்சியை கடந்த ஆண்டில் கண்டிருந்தது.

மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! எவ்வளவு தெரியுமா?!

பிஎஸ்6 பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜிஎஸ் பைக்குகளில் 313சிசி, லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9500 ஆர்பிஎம்-ல் 34 பிஎச்பி மற்றும் 7500 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர்-க்ளட்ச் உடன் இணைக்கப்படுகிறது.

மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! எவ்வளவு தெரியுமா?!

இவற்றுடன் மென்மையான பயணத்திற்கு இந்த பைக்குகள் ரைடு-பை-வயர் தொழிற்நுட்பத்தையும் பெற்று வருகின்றன. இதில் ஜி310ஆர் பைக்கிற்கு கேடிஎம் 390ட்யூக்கும், ஜி310ஜிஎஸ் பைக்கிற்கு கேடிஎம் 390 அட்வென்ச்சரும் போட்டியாக விளங்குகின்றன.

Most Read Articles

English summary
BMW G310R and G310GS gets price hike.
Story first published: Thursday, January 21, 2021, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X