அடேங்கப்பா... ரூ.42 லட்சத்தில் 1000சிசி பிஎம்டபிள்யூ பைக்கா!! புதிய எம் 1000ஆர்ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்

புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எம் 1000ஆர்ஆர் பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலைசுற்ற வைக்கும் இதன் விலை உள்ளிட்ட விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அடேங்கப்பா... ரூ.42 லட்சத்தில் 1000சிசி பிஎம்டபிள்யூ பைக்கா!! புதிய எம் 1000ஆர்ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்

பிஎம்டபிள்யூ எம் 1000ஆர்ஆர் மற்றும் எம் 1000ஆர்ஆர் காம்பெடிஷன் என்ற இரு விதமான வேரியண்ட்களில் இந்த சூப்பர்பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.42 லட்சம் மற்றும் ரூ.45 லட்சமாகும்.

அடேங்கப்பா... ரூ.42 லட்சத்தில் 1000சிசி பிஎம்டபிள்யூ பைக்கா!! புதிய எம் 1000ஆர்ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் முதல் எம் வரிசை பைக் மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய எம் 1000ஆர்ஆர் முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் (CBU) இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

அடேங்கப்பா... ரூ.42 லட்சத்தில் 1000சிசி பிஎம்டபிள்யூ பைக்கா!! புதிய எம் 1000ஆர்ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்

வெள்ளை, ரேசிங் ப்ளூ மெட்டாலிக் மற்றும் ரேசிங் ரெட் என மூன்று நிறங்கள் கலந்த பெயிண்ட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்கை இன்று முதல் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... ரூ.42 லட்சத்தில் 1000சிசி பிஎம்டபிள்யூ பைக்கா!! புதிய எம் 1000ஆர்ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்

அதேநேரம் இந்த 1000சிசி பிஎம்டபிள்யூ பைக்கை பிஎம்டபிள்யூ நிதி சேவைகள் இந்தியா மையங்களின் மூலமாகவும் வாங்கலாம். இந்த சேவை மையங்கள் வாடிக்கையாளர்களுக்கு கஸ்டமைஸ்ட் மற்றும் கவர்ச்சிகரமான நிதி தேர்வுகளை வழங்குகின்றன.

அடேங்கப்பா... ரூ.42 லட்சத்தில் 1000சிசி பிஎம்டபிள்யூ பைக்கா!! புதிய எம் 1000ஆர்ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்

மேலும் இந்த மையங்களின் உதவியுடன் பைக்கை டெலிவிரி எடுப்பதற்கு முன்பாக கடன்களுக்கான அனுமதியையும் பெற முடியும். புதிய பிஎம்டபிள்யூ எம் 1000ஆர்ஆர் பைக்கிற்கு மூன்று வருட/ முடிவிலா கிமீ உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஐந்து வருடங்களாகவும் வாடிக்கையாளர் விரிவுப்படுத்தி கொள்ளலாம்.

அடேங்கப்பா... ரூ.42 லட்சத்தில் 1000சிசி பிஎம்டபிள்யூ பைக்கா!! புதிய எம் 1000ஆர்ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்

வழக்கமான பிஎம்டபிள்யூ எஸ் 1000ஆர்ஆர் பைக்கின் செயல்திறன்மிக்க வேரியண்ட்டாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய எம் 1000ஆர்ஆர் பைக், அதற்கு ஏற்றாற்போல் குறைவான கெர்ப் எடை, மேம்படுத்தப்பட்ட சேசிஸ் மற்றும் மிகவும் ஆற்றல்மிக்க பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் என்ஜினை பெற்று வந்துள்ளது.

அடேங்கப்பா... ரூ.42 லட்சத்தில் 1000சிசி பிஎம்டபிள்யூ பைக்கா!! புதிய எம் 1000ஆர்ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்

முன்பக்கத்தில் புதிய எம் விங்லெட்களுடன் காற்று இயக்கவியலுக்கு மிகவும் ஏற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பிஎம்டபிள்யூ எம் வரிசை பைக் எல்இடி ஹெட்லேம்ப்கள், U-வடிவிலான பக்கவாட்டு விளக்குகள், எம் ப்ரேக்குகள், எம் கார்பன் சக்கரங்கள் மற்றும் 'M' லோகோ உடன் எம் ப்ரேக் காலிபர்கள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

அடேங்கப்பா... ரூ.42 லட்சத்தில் 1000சிசி பிஎம்டபிள்யூ பைக்கா!! புதிய எம் 1000ஆர்ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்

இவற்றுடன் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் வரிசை பைக் என்பதை நிரூப்பிக்கும் வகையிலும், ரூ.42 லட்சத்திற்கும் அதிகமான விலையை நியாயப்படுத்தும் வகையிலும் ஏகப்பட்ட பிரத்யேக ‘எம்' தொழிற்நுட்ப அம்சங்களை பெற்று வந்துள்ள 2021 எம் 1000ஆர்ஆர் பைக்கில் 999சிசி நீர்/ஆயில்-கூல்டு இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... ரூ.42 லட்சத்தில் 1000சிசி பிஎம்டபிள்யூ பைக்கா!! புதிய எம் 1000ஆர்ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்

அதிகப்பட்சமாக 14,500 ஆர்பிஎம்-ல் 212 பிஎச்பி மற்றும் 11,000 ஆர்பிஎம்-ல் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினின் உதவியுடன் இந்த பிஎம்டபிள்யூ பைக்கில் 0-வில் 100kmph வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் எட்டிவிட முடியும். இந்த 1000சிசி பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 306கிமீ என்றால் நம்ப முடிகிறதா.

அடேங்கப்பா... ரூ.42 லட்சத்தில் 1000சிசி பிஎம்டபிள்யூ பைக்கா!! புதிய எம் 1000ஆர்ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்

அதிக பவர் ரேஞ்ச் மற்றும் வெவ்வேறான காம்ஷாஃப்ட் கண்ட்ரோலிற்காக ரீடிசைனிலான இண்டேக் துளைகளை இந்த பைக் பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய எம் 1000ஆர்ஆர் பைக்கில் மழை, சாலை, டைனாமிக் மற்றும் ரேஸ் என்ற நான்கு விதமான ரைடிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
BMW Motorrad India has launched the all-new BMW M 1000 RR – the first M model from BMW Motorrad in India. Available as completely built-up units (CBU), the motorcycles can be booked at all BMW Motorrad India dealerships from today onwards.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X