விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்!! உறுதிப்படுத்திய பிஎம்டபிள்யூ...

ஆர் 1250ஜிஎஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் அதன் சமுக வலைத்தள பக்கங்களில் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்!! உறுதிப்படுத்திய பிஎம்டபிள்யூ...

பிஎம்டபிள்யூ பிராண்டில் இருந்து விரைவில் இந்திய சந்தைக்கு வரவுள்ள பிஎஸ்6-க்கு இணக்கமான ஆர் 1250ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் ஸ்டாண்டர்ட் & அட்வென்ச்சர் என இரு விதமான வெர்சன்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்!! உறுதிப்படுத்திய பிஎம்டபிள்யூ...

யூரோ5-இணக்கமான (கிட்டத்தட்ட இந்தியாவின் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையானது) பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் பைக் ஏற்கனவே சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ளது.

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்!! உறுதிப்படுத்திய பிஎம்டபிள்யூ...

அத்தகைய வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள ஆர் 1250ஜிஎஸ் பைக்கில் யூரோ5-இணக்கமான 1,254சிசி, ஏர்/ஆயில்-கூல்டு, தட்டையான-இரட்டை என்ஜின், பிஎம்டபிள்யூவின் ஷிஃப்ட்காம் தொழிற்நுட்பத்துடன் பொருத்தப்படுகிறது.

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்!! உறுதிப்படுத்திய பிஎம்டபிள்யூ...

அதிகப்பட்சமாக 7,750 ஆர்பிஎம்-இல் 134 பிஎச்பி மற்றும் 6,250 ஆர்பிஎம்-இல் 142 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியது. இதே அளவிலான ஆற்றலை தான் இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஆர் 1250ஜிஎஸ் பைக்கும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் என தெரிகிறது.

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்!! உறுதிப்படுத்திய பிஎம்டபிள்யூ...

முழு எல்இடி விளக்கு, ப்ளூடூத் இணைப்பு பெற்ற டிஎஃப்டி வண்ண திரை, டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் ப்ரோ, ஈக்கோ, சாலை & மழை என மூன்று விதமான மோட்கள், ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்டவை இந்த பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக்கின் சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்!! உறுதிப்படுத்திய பிஎம்டபிள்யூ...

இவற்றுடன் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், ஹீட்டட் இருக்கைகள், (டைனாமிக், டைனாமிக் ப்ரோ, எண்டூரோ மற்றும் எண்டூரோ ப்ரோ) என்ற நான்கு ரைடிங் ப்ரோ மோட்கள், தானியங்கி ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், டைனாமிக் ப்ரேக் உதவி மற்றும் என்ஜின் ப்ரேக் கண்ட்ரோலையும் ஆர் 1250ஜிஎஸ் பைக்குடன் வாடிக்கையாளர்கள் கூடுதல் தேர்வாக பெறலாம்.

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்!! உறுதிப்படுத்திய பிஎம்டபிள்யூ...

அட்வென்ச்சர் பைக் என்பதால் கரடு முரடான பாதைகளுக்கு ஏற்ப பைக்கில் பேனல்கள் அதிகளவில் வழங்கப்படுவதில்லை. சமச்சீரற்ற வடிவில் ஹெட்லைட்டை பெறும் இந்த பிஎம்டபிள்யூ பைக்கின் முன்பக்கம் கொக்கின் தலை வடிவில் வடிவமைக்கப்படுகிறது.

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்!! உறுதிப்படுத்திய பிஎம்டபிள்யூ...

முன்பக்கத்தில் எதிர்காற்றை தடுக்கும் விதத்தில் பொருத்தப்படுகின்ற கண்ணாடியின் உயரத்தை இந்த பைக்கில் மாற்ற முடியும். பிஎம்டபிள்யூ ஆர் 1250ஜிஎஸ் பைக்கில் பெட்ரோல் டேங்க் சற்று பெரியதாகவும், இருக்கை பிளவுப்பட்ட தோற்றத்திலும் வழங்கப்படுகிறது.

Most Read Articles

English summary
BMW R 1250 GS BS6 to be launched in India soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X