கவலப்படாதீங்க... உறுதியாகியது பிஎம்டபிள்யூவி எம்1000ஆர்ஆர் பைக்கின் வருகை... ரொம்ப நாள் இல்ல!!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் 1000ஆர்ஆர் சூப்பர் பைக்கின் இந்திய வருகை உறுதியாகியுள்ளது. ஆகையால், மிக விரைவில் இவ்வாகனம் விற்பனைக்கு வர இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கவலப்படாதீங்க... உறுதியாகியது பிஎம்டபிள்யூவி எம்1000ஆர்ஆர் பைக்கின் வருகை... ரொம்ப நாள் இல்ல!!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதுமுக பைக் ஒன்று விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம் 1000ஆர்ஆர் பைக்கே மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இத்தகவலை நிறுவனம் சமூக வலைதளத்தின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.

கவலப்படாதீங்க... உறுதியாகியது பிஎம்டபிள்யூவி எம்1000ஆர்ஆர் பைக்கின் வருகை... ரொம்ப நாள் இல்ல!!

எஸ் 1000 ஆர்ஆர் பைக்கை தழுவி உருவாக்கப்பட்ட மாடலே எம் 1000 ஆர்ஆர் பைக். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் உயர் ரக பைக் மாடலாக எஸ் 1000 ஆர்ஆர் மாடல் இருக்கின்றது. ஆகையால், இதைவிட குறைந்த விலையில் எம் 1000 ஆர்ஆர் பைக் இந்தியாவில் களமிறக்கப்படலாம் என யூகிக்கப்படுகின்றது.

கவலப்படாதீங்க... உறுதியாகியது பிஎம்டபிள்யூவி எம்1000ஆர்ஆர் பைக்கின் வருகை... ரொம்ப நாள் இல்ல!!

வாட்டர் கூல்டு, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட எஞ்ஜினையே பிஎம்டபிள்யூ இப்பைக்கில் பயன்படுத்தி வருகின்றது. இது அதிகபட்சமாக 14,500 ஆர்பிஎம்மில் 209 பிஎச்பியையும், 11000 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினில் ஷிஃப்ட்கேம் தொழில்நுட்பத்தை பிஎம்டபிள்யூ பயன்படுத்தியிருக்கின்றது.

கவலப்படாதீங்க... உறுதியாகியது பிஎம்டபிள்யூவி எம்1000ஆர்ஆர் பைக்கின் வருகை... ரொம்ப நாள் இல்ல!!

இந்த எஞ்ஜினையே லேசான திறன் மாற்றங்களுடன் எம் மாடலில் பயன்படுத்தி வருகின்றது பிஎம்டபிள்யூ. இத்துடன், சிறந்த வெளியேற்றத்திற்காக டைட்டானியத்தால் ஆன இலகுரக எக்சாஸ்ட் சிஸ்டமும் இதில் பயன்படுத்தப்பட உள்ளன. தொடர்ந்து, பிற மாடல்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமான உருவத்தைத் தோற்றுவிக்கும் வகையில் ஸ்பெஷல் அணிகலன் மற்றும் ஸ்டிக்கரிங் வேலைகள் செய்யப்பட இருக்கின்றன.

கவலப்படாதீங்க... உறுதியாகியது பிஎம்டபிள்யூவி எம்1000ஆர்ஆர் பைக்கின் வருகை... ரொம்ப நாள் இல்ல!!

ஆகையால், இதன் ஸ்டைல் தனித்துவமான இருக்கும். இந்த தனித்துவமான ஸ்டைலுக்காக புதிய ஸ்டைலான எஞ்ஜின் கவர் பயன்படுத்தப்பட இருக்கின்றது. தொடர்ந்து, காற்றை கழித்துச் செல்லுகின்ற வகையிலான உருவ அமைப்பு, முன் பக்கத்தில் விண்ட் ஸ்கிரீன், கார்பனால் உருவாக்கப்பட்ட பேனல்கள் உள்ளிட்டவை இப்பைக்கில் இடம்பெற இருக்கின்றன.

கவலப்படாதீங்க... உறுதியாகியது பிஎம்டபிள்யூவி எம்1000ஆர்ஆர் பைக்கின் வருகை... ரொம்ப நாள் இல்ல!!

இந்த வசதிகளின் காரணமாக பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் பைக் முழு ஸ்போர்ட்ஸ் திறன் கொண்ட பைக்காக மாறியிருக்கின்றது. இத்துடன், அதிக திறன் கொண்ட இப்பைக்கில் எம் கார்பன் வீல்கள், 6.5 இன்சிலான டிஎஃப்டி திரை மற்றும் ஓபிடி கருவி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

கவலப்படாதீங்க... உறுதியாகியது பிஎம்டபிள்யூவி எம்1000ஆர்ஆர் பைக்கின் வருகை... ரொம்ப நாள் இல்ல!!

இவை பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் பைக்கை பிரீமியம் தர பைக் என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. தொடர்ந்து, யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், இலகு ரக எடைக் கொண்ட பேட்டரி, கைகளுக்கு சூடான உணர்வை வழங்கக் கூடிய ஹேண்டில் கிரிப்புகள் இப்பைக்கில் இடம்பெற இருக்கின்றன.

கவலப்படாதீங்க... உறுதியாகியது பிஎம்டபிள்யூவி எம்1000ஆர்ஆர் பைக்கின் வருகை... ரொம்ப நாள் இல்ல!!

இதுமட்டுமில்லைங்க மழை, சாலை, டைனமிக், ரேஸ் மற்றும் ரேஸ் ப்ரோ1-3 ஆகிய ரைடிங் மோட்களும் இப்பைக்கில் வழங்கப்பட இருக்கின்றன. மேலும், டிராக்சன் கன்ட்ரோல் வீலி கன்ட்ரோல், குறிப்பிட்ட த்ரோட்டில் மோட்கள், எஞ்ஜின் பிரேக்கிங் அட்ஜெஸ்டபிளிட்டி, பைடைரக்சனல் குயிக் ஷிஃப்டர், லான்ச் கன்ட்ரோல், பிட் லேன் லிமிட்டர் மற்றும் ஹில் ஸ்டார்ட் கன்ட்ரோல் போன்ற சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களும் எம் 1000 ஆர்ஆர் பைக்கில் இடம்பெற இருக்கின்றன.

Most Read Articles
English summary
BMW Motorrad Planning To Launch M 1000 RR Soon in India. Read In Tamil.
Story first published: Saturday, March 20, 2021, 20:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X