Just In
- 1 hr ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 1 hr ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 3 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- News
இறக்கும் முன்னர் கொரோனா விழிப்புணர்வு.. இறந்த பின் விவேக் மக்களுக்கு சொல்லும் அறிவுரை "இதுதான்!"
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பார்த்த உடன் வாங்க தூண்டும்... இரு புதிய ஸ்கூட்டர்களை வெளியீடு செய்த பிரபல நிறுவனம்... எந்த நிறுவனம் தெரியுமா?
பார்த்த உடன் வாங்கு தூண்டக் கூடிய ஸ்டைல் கொண்ட இருசக்கர வாகனங்களை பிரபல நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அது எந்த நிறுவனம் என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

சொகுசு வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பிஎம்டபிள்யூ, பிஎம்டபிள்யூ மோட்டாராட் எனும் பெயரில் பிரீமியம் தர இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது. இந்த பிராண்ட் பெயரில் நிருவனம் இரு புதுமுக ஸ்கூட்டர்களை வெளியீடு செய்துள்ளது. இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

சி400 எக்ஸ் மற்றும் சி400 ஜிடி ஆகிய இரு மாடல் ஸ்கூட்டரை நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இவ்விரு ஸ்கூட்டர்களையும் புதிய தொழில்நுட்பங்களின் வாயிலாக நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதனால், புதிய ஸ்டைல் மற்றும் நிற தேர்வில் இவ்விரு வாகனங்களும் காட்சியளிக்கின்றன.

இரு ஸ்கூட்டர்களும் மூன்று விதமான நிற தேர்வில் கிடைக்கும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டும். இதுதவிர இந்த ஸ்கூட்டர்களில் யூரோ 5 மாசு உமிழ்வு தரத்திற்கு ஏற்ற எஞ்ஜின்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது ஆகும்.

இந்த தரத்திலான சிங்கிள் சிலிண்டர் கொண்ட எஞ்ஜினையே சி400 எக்ஸ் மற்றும் சி400 ஜிடி ஆகிய இரு ஸ்கூட்டர்களிலும் நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 33.5 பிஎச்பியை 7,500 ஆர்பிஎம்மிலும், 35 என்எம் டார்க்ககை 5,750 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றிலும் திறன் கொண்டது.

சிவிடி கியர்பாக்ஸ் வாயிலாக இந்த எஞ்ஜின் இயங்கும் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 139 கிமீ வேகம் ஆகும். நம் நாட்டில் தற்போது விற்பனைக்கு கிடைக்கும் பைக்குகளைக் காட்டிலும் அதிக செயல் திறன் மிக்க ஸ்கூட்டர் இது என்பதை இந்த அதி-வேகத்திறன் வெளிக்காட்டுகின்றது.

ஸ்கூட்டர் அதி திறனை வெளிப்படுத்தக் கூடிய வாகனம் என்பதால் இதில் சற்று கூடுதலான பாதுகாப்பு திறன்களையும் பிஎம்டபிள்யூ சேர்த்துள்ளது. அந்தவகையில், ஏஎஸ்சி எனப்படக் கூடிய தானியங்கி ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதி இதில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், காலிபர்களுடன் கூடிய இரு டிஸ்க் பிரேக்குகள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இதுதவிர, பெரிய ஸ்டோரேஜ் வசதி, ஸ்டோரேஜ் பெட்டியை எளிதில் காணும் வகையில் எல்இடி மின் விளக்கு, யுஎஸ்பி சார்ஜர் (12வோல்ட் மின்சார வசதிக் கொண்டது), பெரிய அளவிலான திரை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

மேலே கூறப்பட்ட சிறப்பு அம்சங்களே இரு ஸ்கூட்டர்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. இது தவிர சில தனித்துவமான அம்சங்களையும் இந்த ஸ்கூட்டர்களில் நம்மால் காண முடிகின்றது. இவற்றின் விலை பற்றிய தகவலை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த தகவலை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்ந்து, நடப்பாண்டின் இறுதிக்குள் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துவிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது இவற்றின் வெளியீடு சம்பவம் அமைந்துள்ளது. ஆனால், இதன் இந்திய வருகை சந்தேகமே. இதற்கான அறிகுறிகள் சிறிதளவும் தென்படவில்லை.