மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் பைக்... வெளியாகியது அதிகாரப்பூர்வ தகவல்!

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் புதுமுக பைக்குகளில் ஒன்றான எஸ் 1000 ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் பைக்... வெளியாகியது அதிகாரப்பூர்வ தகவல்!

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் பிரபலமான இருசக்கர வாகனங்களில் எஸ் 1000 ஆர் மாடலும் ஒன்று. இந்த பைக்கே இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை நிறுவனம் சமூக வலைதளம் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.

மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் பைக்... வெளியாகியது அதிகாரப்பூர்வ தகவல்!

பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் ஓர் நேக்கட் ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிளாகும். எஸ் 1000 ஆர்ஆர் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனே எஸ் 1000 ஆர். புதிய டிசைன் மற்றும் புதிய அம்சங்களுடன் இப்பைக் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் பைக்... வெளியாகியது அதிகாரப்பூர்வ தகவல்!

பைக்கில் இடம் பெற்றிருக்கும் உடல் பேனல்கள், எல்இடி முகப்பு மின் விளக்கு, டிஆர்எல் மின் விளக்குகள் உள்ளிட்டவை அப்கிரேட் செய்யப்பட்டுள்ளன. ஆகையால், புதிய தலைமுறைக்கு ஏற்ற பைக்காக எஸ் 1000 ஆர் காட்சியளிக்கின்றது.

மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் பைக்... வெளியாகியது அதிகாரப்பூர்வ தகவல்!

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் கண் கவர் மற்றும் மனம் கவரும் பைக்காக இது உருவாகியிருக்கின்றது. தொடர்ந்து, முந்தைய மாடலை விட இலகு ரக எடைக் கொண்ட பைக்காகவும் இது உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக ஃப்ளெக்ஸ் ஃப்ரேம் இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் பைக்... வெளியாகியது அதிகாரப்பூர்வ தகவல்!

இதை பயன்படுத்தியதனால் பைக்கின் எடை பல மடங்கு குறைந்திருக்கின்றது. தற்போது பிஎம்டபிள்யூ எஸ்1000 ஆர் பைக்கின் ஒட்டுமொத்த எடையே 199 கிகி ஆகும். இது முந்தைய மாடலை விட 6.5 கிலோ குறைவான எடையாகும். 45மிமீ அளவுள்ள அப்சைடு டவுண் ஃபோர்க் மற்றும் அலுமினியம் ஸ்விங்கார்ம் ஆகியவையே சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் பைக்... வெளியாகியது அதிகாரப்பூர்வ தகவல்!

பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் பைக்கில் 999 சிசி திறன் கொண்ட இன்லைன் 4 சிலிண்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 162 பிஎச்பி பவரை 11,000 ஆர்பிஎம்மிலும், 114 என்எம் டார்க்கை 9,250 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். முந்தைய மாடலைக் காட்டிலும் இது 8 சதவீதம் குறைவான திறனாகும்.

மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் பைக்... வெளியாகியது அதிகாரப்பூர்வ தகவல்!

அதேசமயம், இது 8 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். ஆகையால், கூடுதல் மைலேஜ் கிடைப்பது உறுதி. இத்தகைய திறன் கொண்ட பைக்கையே இந்தியாவில் பிஎம்டபிள்யூ களமிறக்க இருக்கின்றது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிமுகம் தேதிகுறித்த தகவலை வெளியிடவில்லை.

மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் பைக்... வெளியாகியது அதிகாரப்பூர்வ தகவல்!

இருப்பினும், இந்த பைக்கின் வரவை எதிர்நோக்கி பிஎம்டபிள்யூ பைக் பிரியர்கள் காத்துக் கிடக்க தொடங்கியிருக்கின்றனர். எனவே, பைக்கின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி விபரம் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
BMW S 1000 R In India Launch Confirmed. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X