பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் சூப்பர் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் சூப்பர் பைக்கின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதனால், இந்த பைக் மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது உறுதியாகி இருக்கிறது.

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் சூப்பர் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகம்!

நேக்கட் ரக சூப்பர் பைக் மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் முக்கிய மாடலாக உள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இந்த பைக் 2021 மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் சூப்பர் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகம்!

இந்த பைக்கில் புதிய வடிவமைப்பில் மாறுதல் செய்யப்பட்ட எல்இடி பகல்நேர விளக்குகள், பெட்ரோல் டேங்க், குவார்ட்டர் ஃபேரிங் பேனல்கள் மற்றும் பின்புற அமைப்புடன் டிசைன் மாற்றங்கள் கண்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் சூப்பர் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகம்!

இந்த பைக்கில் இலகு பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் எடையும் குறைந்துள்ளது இந்த பைக் 199 கிலோ எடை கொண்டதாக மாறி இருக்கிறது. முந்தைய மாடலைவிட 6.5 கிலோ எடை குறைந்துள்ளது. . இதனால், ஓட்டுதல் தரமும், கையாளுமையும் சிறப்பாக மேம்பட்டு இருக்கும்.

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் சூப்பர் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகம்!

இந்த பைக்கிற்கு எம் ஸ்போர்ட் பேக்கேஜும் வழங்கப்படுகிறது. இதில், கார்பன் ஃபைபரிலான உதிரிபாகங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த பாகங்களை பயன்படுத்தினால், இந்த பைக்கின் எடை மேலும் 4.5 கிலோ வரை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் சூப்பர் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகம்!

பழைய மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே எஞ்சின் மேம்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் 998சிசி எஞ்சின் அதிகபட்சமாக 162 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஸ்லிப் - அசிஸ்ட் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் சூப்பர் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகம்!

கியர்பாக்ஸிலும் சில முக்கிய மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. 4வது, 5வது மற்றும் 6வது கியர் ரேஷியாவில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதால், செயல்திறன் மேம்பட்டு இருக்கும். இந்த பைக் 0 - 100 கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும்.

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் சூப்பர் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் பைக்கில் 6.5 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கைப்பிடியில் இருக்கும் சுவிட்சுகள் மூலமாக இதன் மின்னணு கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களை கட்டுப்படுத்த முடியும்.

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் சூப்பர் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகம்!

இந்த பைக்கில் ரெயின், ரோடு, டைனமிக் மற்றும் டைனிக் புரோ ஆகிய ரைடிங் மோடுகள் உள்ளன. 6 ஆக்சிஸ் இனர்ஷியல் மெசெர்மென்ட் யூனிட், ஏபிஎஸ் புரோ, டைனமிக் டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பத்தின்பேரில் பை - டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர் வசதி, கீ லெஸ் என்ட்ரி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய வசதிகளையும் பெற முடியும்.

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் சூப்பர் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகம்!

இந்த பைக்கின் முன்புறத்தில் 45 மிமீ அப்சைடு ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சாப்ரும் உள்ளன. இரண்டு சஸ்பென்ஷன் அமைப்பிலும் அட்ஜெஸ்ட் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் சூப்பர் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் இரண்டு 320 மிமீ விட்டமுடைய டிஸ்க்குகள் மற்றும் 4 பாட் காலிபர் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கிள் பாட் காலிபர் கொண்ட பிரேக் சிஸ்டமும் உள்ளன. 17 அங்குல அலாய் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் சூப்பர் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் பைக் இதன் ரகத்தில் மிகவும் இலகுவான மாடலாக உள்ளது. இந்தியாவில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மற்றும் ட்ரையம்ஃப்ட் ஸ்பீடு டிரிப்பிள் 1200 பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
BMW Motorrad India has teased the S 1000 R ahead of its launch in the Indian market. The Bavarian performance street-naked motorcycle is expected to be launched in the coming days in the country.
Story first published: Saturday, June 5, 2021, 19:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X