பேட்டரி இல்லாமல் இ-ஸ்கூட்டரை விற்க உள்ளூர் நிறுவனம் திட்டம்! விலை ரொம்ப கம்மியா இருக்கே?

ஓலா (Ola Electric) மின்சார ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்க வேண்டும் என்பதற்காக உள் நாட்டு மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பேட்டரி இல்லாமல் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

பேட்டரி இல்லாமல் இ-ஸ்கூட்டரை விற்க உள்ளூர் நிறுவனம் திட்டம்! விலையை கம்மி பண்ண செம்ம பிளான்! ஓலாவிற்கு டஃப் கொடுக்கணுமாம்!

Image Courtesy: IANS

உள் நாட்டை மையமாகக் கொண்டு மின் வாகன உற்பத்தி நிறுவனம் பவுன்ஸ் (Bounce). இந்நிறுவனம் தற்போது சந்தையில் அதிகரித்து வரும் போட்டியைக் கருத்தில் கொண்டு, மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் தனது மின்சார இருசக்கர வாகனத்தை மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

பேட்டரி இல்லாமல் இ-ஸ்கூட்டரை விற்க உள்ளூர் நிறுவனம் திட்டம்! விலையை கம்மி பண்ண செம்ம பிளான்! ஓலாவிற்கு டஃப் கொடுக்கணுமாம்!

இதனடிப்படையில், பேட்டரியில்லாமல் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் கொடுக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதனால் பல மடங்கு அதன் மின்சார இருசக்கர வாகனத்தின் விலை குறையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில், பேட்டரி பொருத்தப்பட்ட தேர்விலும் தனது இருசக்கர வாகனம் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேட்டரி இல்லாமல் இ-ஸ்கூட்டரை விற்க உள்ளூர் நிறுவனம் திட்டம்! விலையை கம்மி பண்ண செம்ம பிளான்! ஓலாவிற்கு டஃப் கொடுக்கணுமாம்!

நிறுவனம் மிக சமீபத்தில் ஐஏஎன்ஸ்-க்கு அளித்த தகவலின்படி, இன்னும் சில தினங்களில் தனது இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. பவுன்ஸ் இன்ஃபினிட்டி (Bounce Infinity) எனும் பெயரிலேயே அப்புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த வாகனத்திற்கான புக்கிங் பணிகள் வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

பேட்டரி இல்லாமல் இ-ஸ்கூட்டரை விற்க உள்ளூர் நிறுவனம் திட்டம்! விலையை கம்மி பண்ண செம்ம பிளான்! ஓலாவிற்கு டஃப் கொடுக்கணுமாம்!

இதைத் தொடர்ந்து, பவுன்ஸ் இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளை ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. பேட்டரி இல்லாமல் இ-ஸ்கூட்டரை வழங்க இருப்பதாக நிறுவனம் முடிவெடுத்திருப்பதால், அந்த வாகனம் ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

பேட்டரி இல்லாமல் இ-ஸ்கூட்டரை விற்க உள்ளூர் நிறுவனம் திட்டம்! விலையை கம்மி பண்ண செம்ம பிளான்! ஓலாவிற்கு டஃப் கொடுக்கணுமாம்!

அதே நேரத்தில் பேட்டரியுடன் விற்பனைக்கு வர இருக்கும் இ-ஸ்கூட்டர் ரூ. 70 ஆயிரத்திற்கு விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டும் ஸ்வாப்பபிள் (கழட்டி மாட்டும் பேட்டரி வசதி உடன்) பேட்டரி வசதி உடன் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஆகையால், பேட்டரி இல்லாமல் இ-வாகனத்தை வாங்கினாலும் வெளி சந்தையில் (பேட்டரி வாடகை நிறுவனத்திடம்) இருந்து தேவையான பேட்டரியை பெற்று பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பேட்டரி இல்லாமல் இ-ஸ்கூட்டரை விற்க உள்ளூர் நிறுவனம் திட்டம்! விலையை கம்மி பண்ண செம்ம பிளான்! ஓலாவிற்கு டஃப் கொடுக்கணுமாம்!

பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா (Ola), அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களான ஓலா எஸ்1 (Ola S1) மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) ஆகிய இரு மாடல்களையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றிற்கான புக்கிங் பணிகள் மிக அதிக வேகத்தில் செய்யப்பட்டு வருகின்றன. ஓலா எஸ்1 தேர்விற்கு ரூ. 99,999 என்ற விலையும், ஓலா எஸ்1 ப்ரோவிற்கு ரூ. 1,29,999 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி இல்லாமல் இ-ஸ்கூட்டரை விற்க உள்ளூர் நிறுவனம் திட்டம்! விலையை கம்மி பண்ண செம்ம பிளான்! ஓலாவிற்கு டஃப் கொடுக்கணுமாம்!

இந்த ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியை வழங்கும் நோக்கிலேயே பவுன்ஸ் இன்ஃபினிட்டி நிறுவனம் பேட்டரி இல்லா தேர்வில் தனது இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்க முடிவெடுத்துள்ளது. நிறுவனம் பேட்டரியுடன் விற்பனைக்கு வழங்கும் இ-ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ முதல் 85 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

பேட்டரி இல்லாமல் இ-ஸ்கூட்டரை விற்க உள்ளூர் நிறுவனம் திட்டம்! விலையை கம்மி பண்ண செம்ம பிளான்! ஓலாவிற்கு டஃப் கொடுக்கணுமாம்!

தற்போது மின்சார இருசக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் டிமாண்ட் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் நிறுவனம் பெரும் முதலீட்டை செய்ய திட்டமிட்டிருக்கின்றது. அடுத்த சில வருடங்களில் 100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மிக சமீபத்தில் நிறுவனம் 22 மோட்டார் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை 7 மில்லியன் டாலர்களுக்கு கையகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

பேட்டரி இல்லாமல் இ-ஸ்கூட்டரை விற்க உள்ளூர் நிறுவனம் திட்டம்! விலையை கம்மி பண்ண செம்ம பிளான்! ஓலாவிற்கு டஃப் கொடுக்கணுமாம்!

தொடர்ந்து, நிறுவனம் ஸ்வாப்பபிள் பேட்டரி ஆப்ஷனை தனது ஸ்வாப்பிங் நெட்வொர்க்கின் வாயிலாக வழங்க இருக்கின்றது. இதன் வாயிலாகவே முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. கட்டணத்தின் அடிப்படையில் இங்கு பேட்டரிகள் வழங்கப்படும். இதன் வாயிலாக பெட்ரோல் ஸ்கூட்டர்களைக் காட்டிலும் 40 சதவீதம் கூடுதல் லாபத்தைப் பெற முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேட்டரி இல்லாமல் இ-ஸ்கூட்டரை விற்க உள்ளூர் நிறுவனம் திட்டம்! விலையை கம்மி பண்ண செம்ம பிளான்! ஓலாவிற்கு டஃப் கொடுக்கணுமாம்!

ஓர் மின்சார வாகனத்தின் விலையில் பாதி அல்லது 40 சதவீதம் வரை விலையைக் பேட்டரிகள் கொண்டிருக்கின்றன. எனவேதான், பேட்டரியை நீக்கிவிட்டு குறைந்த விலையில் தனது இருசக்கர வாகனத்தை விற்பனைக்க வழங்க உள்ளூர் நிறுவனமான பவுன்ஸ் இன்ஃபினிட்டி திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Bounce plans to sell an e scooter without battery to give tough competition to ola
Story first published: Saturday, November 13, 2021, 18:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X