Just In
- 2 hrs ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 15 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்திய சந்தையில் பெனெல்லி நிறுவனத்தின் 2வது பிஎஸ்-6 மாடல்... புதிய டிஆர்கே 502 விற்பனைக்கு அறிமுகம்...
பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணக்கமான புதிய பெனெல்லி டிஆர்கே 502 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான பெனெல்லி டிஆர்கே 502 (Benelli TRK 502) இந்தியாவில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தாலியை சேர்ந்த பெனெல்லி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள 2வது பிஎஸ்-6 மாடல் இதுவாகும். இந்திய சந்தையில் பெனெல்லி அறிமுகம் செய்த முதல் பிஎஸ்-6 மாடல் இம்பீரியல் 400 ஆகும்.

கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதமே பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான பெனெல்லி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. மேம்படுத்தப்பட்ட டிஆர்கே 502 மோட்டார்சைக்கிள் மாடலில், பெனெல்லி நிறுவனம் பல்வேறு புதிய வசதிகளை வழங்கியுள்ளது.

இந்த அட்வென்ஜர் டூரர் மோட்டார்சைக்கிள் தற்போது புதிதாக டிசைன் செய்யப்பட்ட ஸ்பிளிட் இருக்கைகளுடன் வருகிறது. இந்த இருக்கைகள் சௌகரியமான பயணத்தை உறுதி செய்கின்றன. அத்துடன் பெனெல்லி டிஆர்கே 502 மோட்டார்சைக்கிளின் பிஎஸ்-6 மாடலில் புதிய ஹேண்ட் கார்டுகள் (hand guards) வழங்கப்பட்டுள்ளன.

இவை ரைடரின் கைகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் அதே நேரத்தில், பைக்கின் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. இதுதவிர பெனெல்லி நிறுவனம் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் ரீ-டிசைன் செய்துள்ளது. அத்துடன் புதிய ரியர்வியூ மிரர்களையும் பெனெல்லி டிஆர்கே 502 பிஎஸ்-6 மாடல் பெற்றுள்ளது.

அவை முன்பை விட தற்போது நீளமாகவும், அகலமாகவும் உள்ளன. அதே சமயம் ஹேண்டில்பார் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெனெல்லி லோகோவும் கொடுக்கப்பட்டுள்ளது. பெனெல்லி டிஆர்கே 502 மோட்டார்சைக்கிளில் அதே 500 சிசி பேரலல்-ட்வின் இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இன்ஜின் தற்போது மிகவும் கடுமையான பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது.

பிஎஸ்-4 மாடலில் இந்த இன்ஜின் என்ன பவர் மற்றும் டார்க் திறனை வழங்கியதோ, அதையேதான் பிஎஸ்-6 மாடலிலும் உருவாக்குகிறது. இதன்படி இந்த இன்ஜின் 8,500 ஆர்பிஎம்மில் 47.5 பிஎஸ் பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 46 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் முன் பகுதியில் 320 மிமீ ட்யூயல் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 260 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 லிட்டர் கொள்ளவு கொண்ட பெரிய எரிபொருள் டேங்க்கை பெனெல்லி டிஆர்கே 502 மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது.

பிஎஸ்-6 பெனெல்லி டிஆர்கே 502 மோட்டார்சைக்கிளின் விலை 4,79,900 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது மெட்டாலிக் டார்க் க்ரே கலர் மாடலின் விலையாகும். அதே சமயம் தூய வெள்ளை மற்றும் பெனெல்லி சிகப்பு நிற மாடல்களின் விலை 4,89,900 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

அத்துடன் இவை அறிமுக சலுகை விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணக்கமான புதிய பெனெல்லி டிஆர்கே 502 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 10,000 ரூபாய் செலுத்தி பெனெல்லி டிஆர்கே 502 மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.