மீண்டும் சிபி300ஆர் பைக்கை கொண்டுவருகிறதா ஹோண்டா? ராயல் என்பீல்டுக்கு தொடரும் நெருக்கடி!!

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் 350சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் சமீபத்தில் சிபி350 மற்றும் சிபி350 ஆர்எஸ் பைக்குகள் மூலம் ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் நுழைந்தது.

மீண்டும் சிபி300ஆர் பைக்கை கொண்டுவருகிறதா ஹோண்டா? ராயல் என்பீல்டுக்கு தொடரும் நெருக்கடி!!

ஹோண்டாவின் பிக்விங் டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த சிபி350 இரட்டை பைக்குகளுக்கு கணிசமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர். இருப்பினும் பிக்விங் டீலர்ஷிப்களில் முதலாவதாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட சிபி300ஆர் அளவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மீண்டும் சிபி300ஆர் பைக்கை கொண்டுவருகிறதா ஹோண்டா? ராயல் என்பீல்டுக்கு தொடரும் நெருக்கடி!!

அதன் விற்பனை இவற்றை காட்டிலும் சிறப்பானதாக இருந்தது. ஆனால் 2020 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்த புதிய மாசு உமிழ்வு விதியின் காரணமாக சிபி300ஆர் பைக்கின் விற்பனையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஹோண்டா நிறுவனத்திற்கு ஏற்பட்டது.

மீண்டும் சிபி300ஆர் பைக்கை கொண்டுவருகிறதா ஹோண்டா? ராயல் என்பீல்டுக்கு தொடரும் நெருக்கடி!!

ஆனால் தற்போது மீண்டும் பிஎஸ்6 அப்டேட் என்ஜின் உடன் சிபி300ஆர் பைக் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 8 சிபி300ஆர் பைக்குகளை ஹோண்டா டூவீலர்ஸ் நிறுவனம் டீலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

மீண்டும் சிபி300ஆர் பைக்கை கொண்டுவருகிறதா ஹோண்டா? ராயல் என்பீல்டுக்கு தொடரும் நெருக்கடி!!

ஹைனெஸ் சிபி350 பைக்கின் மூலமாக ஹோண்டா பிக்விங் டீலர்ஷிப்கள் மக்களிடையே கவனத்தை பெற்று வருகின்றன. இதனுடன் பிஎஸ்6 சிபி300ஆர் பைக்கும் இணைந்தால் பிக்விங் டீலர்ஷிப்களின் பலம் மேலும் அதிகரிக்கும்.

மீண்டும் சிபி300ஆர் பைக்கை கொண்டுவருகிறதா ஹோண்டா? ராயல் என்பீல்டுக்கு தொடரும் நெருக்கடி!!

புதிய சிபி300ஆர் பைக்கில் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட 286சிசி, லிக்யுடு-கூல்டு, டிஒஎச்சி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. பிஎஸ்4 வெர்சனில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 31.4 பிஎச்பி மற்றும் 27.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது.

மீண்டும் சிபி300ஆர் பைக்கை கொண்டுவருகிறதா ஹோண்டா? ராயல் என்பீல்டுக்கு தொடரும் நெருக்கடி!!

இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட உள்ளது. மேலும் இந்த பைக்கில் மென்மையான என்ஜினின் இயக்கத்திற்காக கவுண்டர் பேலன்ஸ் ஷாஃப்ட் வழங்கப்படுகிறது. சஸ்பென்ஷனிற்கு 41மிமீ-இல் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கை முன்பக்கத்திலும், ப்ரோ-லிங் சிங்கிள் ஷாக்கை பின்பக்கத்திலும் இந்த பைக் பெறுகிறது.

மீண்டும் சிபி300ஆர் பைக்கை கொண்டுவருகிறதா ஹோண்டா? ராயல் என்பீல்டுக்கு தொடரும் நெருக்கடி!!

ப்ரேக்கிங் பணியினை கவனிக்க 296மிமீ மற்றும் 220மிமீ-இல் டிஸ்க்குகள் இரட்டை-சேனல் ஏபிஎஸ் உடன் பொருத்தப்படுகின்றன. தோற்றத்தை பொறுத்தவரையில், ஹோண்டா சிபி1000ஆர் பைக்கை அடிப்படையாக கொண்டு சிபி300ஆர் வடிவமைக்கப்பட்டது.

மீண்டும் சிபி300ஆர் பைக்கை கொண்டுவருகிறதா ஹோண்டா? ராயல் என்பீல்டுக்கு தொடரும் நெருக்கடி!!

ஹோண்டாவின் மோட்டார்சைக்கிள் வரிசையில் சிபி350 பைக்குகளுக்கு முன்னதாக நிலைநிறுத்தப்பட உள்ள சிபி300ஆர் இந்தியாவில் சிகேடி முறையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிஎஸ்4 வெர்சன் ரூ.2.42 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

மீண்டும் சிபி300ஆர் பைக்கை கொண்டுவருகிறதா ஹோண்டா? ராயல் என்பீல்டுக்கு தொடரும் நெருக்கடி!!

அதன்பின் ஏகப்பட்ட விலை உயர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளதால் பிஎஸ்6 சிபி300ஆர் பைக்கின் விலையை ரூ.2.5 லட்சத்திற்கும் அதிகமாகவே எதிர்பார்க்க முடியும். 2.5 - 3 லட்சத்தில் கேடிஎம் ட்யூக் 250/ 390, பிஎம்டபிள்யூ ஜி310ஆர் உள்ளிட்ட பைக்குகள் விற்பனையில் உள்ளன.

Most Read Articles

English summary
BS6 Honda CB300R India Launch Expected Soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X