பிஎஸ்6 ஆர்3 பைக்கை இந்தியாவில் களமிறக்குகிறதா யமஹா? கசிந்த விபரங்கள்!!

யமஹா நிறுவனம் சில புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இருப்பினும் இந்த ஜப்பானிய மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரபலமான மிடில்-வெய்ட் மோட்டார்சைக்கிளான ஒய்.இசட்.எஃப்-ஆர்3 இன்னமும் பிஎஸ்6 அப்கிரேடை பெறவில்லை.

பிஎஸ்6 ஆர்3 பைக்கை இந்தியாவில் களமிறக்குகிறதா யமஹா? கசிந்த விபரங்கள்!!

சமீபத்தில் யமஹா மோட்டார்சைக்கிள் ஒன்று இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது கிடைத்திருந்த தகவல்களில் இது மறைப்புகளுடன் சோதனை செய்யப்படும் யமஹா ஆர்15 வி4 என செய்திகள் கூறின.

பிஎஸ்6 ஆர்3 பைக்கை இந்தியாவில் களமிறக்குகிறதா யமஹா? கசிந்த விபரங்கள்!!

ஆனால் ஸ்பை படங்களில் பைக் சற்று கூடுதல் அகலமானதாக காட்சியளித்தது. இதனால் அந்த பைக் ஆர்3 மாடலின் பிஎஸ்6 வெர்சனாக இருக்கலாம் என தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சோதனை யமஹா பைக்கில் ஹெட்லேம்ப், ஒய்.இசட்.எஃப்-ஆர்7 பைக்கில் வழங்கப்படுவதை போன்று முன்பக்கத்தில் மத்தியில் பொருத்தப்பட்டு இருந்தது.

பிஎஸ்6 ஆர்3 பைக்கை இந்தியாவில் களமிறக்குகிறதா யமஹா? கசிந்த விபரங்கள்!!

குறிப்பாக பின்பகுதி கிட்டத்தட்ட பிஎஸ்4 ஆர்3 பைக்கை போன்று காட்சியளிக்கிறது. இந்த சோதனை யமஹா பைக்கில் ஓட்டுனர் அமர்ந்து செல்லும் விதத்தை பார்க்கும்போது, பைக்கின் ரைடிங் நிலைப்பாடும் கூடுதல் ஆக்ரோஷமானதாக மாற்றப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

பிஎஸ்6 ஆர்3 பைக்கை இந்தியாவில் களமிறக்குகிறதா யமஹா? கசிந்த விபரங்கள்!!

புதிய டிசைன் மட்டுமின்றி, இரட்டை-சேனல் ஏபிஎஸ் மற்றும் 6-அச்சு ஐஎம்யு சென்சார் உள்ளிட்டவையும் புதிய ஆர்3 பிஎஸ்6 பைக் பெற்றுவரலாம். அதற்காக ஆர்7 பைக்கில் வழங்கப்படும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் அல்லது பவர் மோட்களை புதிய ஆர்3-இல் எதிர்பார்க்க வேண்டாம்.

பிஎஸ்6 ஆர்3 பைக்கை இந்தியாவில் களமிறக்குகிறதா யமஹா? கசிந்த விபரங்கள்!!

2021 யமஹா ஆர்3 பைக்கில் வழக்கமான 321சிசி, லிக்யுடு-கூல்டு, இணையான-இரட்டை-சிலிண்டர் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானதாக கொண்டுவரப்பட உள்ளது. பிஎஸ்4 வெர்சனில் அதிகப்பட்சமாக 10,750 ஆர்பிஎம்-இல் 41 பிஎச்பி மற்றும் 9,000 ஆர்பிஎம்-இல் 29 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

பிஎஸ்6 ஆர்3 பைக்கை இந்தியாவில் களமிறக்குகிறதா யமஹா? கசிந்த விபரங்கள்!!

டைமண்ட் ஃப்ரேமினால் முந்தைய ஆர்3 மாடல் தயாரிக்கப்பட்டது. இதனால் மோட்டார்சைக்கிளில் சமநிலை நன்கு கிடைத்தது. சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டன.

பிஎஸ்6 ஆர்3 பைக்கை இந்தியாவில் களமிறக்குகிறதா யமஹா? கசிந்த விபரங்கள்!!

ப்ரேக்கிங் பணியை கவனிக்க பிஎஸ்4 யமஹா ஆர்3 பைக்கில் 298மிமீ டிஸ்க்கும், பின்பக்கத்தில் 220மிமீ டிஸ்க்கும் இரட்டை-சேனல் ஏபிஎஸ் உடன் வழங்கப்பட்டன. ஆர்3 மாடலின் பிஎஸ்6 வெர்சனும் இந்த இயந்திர பாகங்களை தான் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்6 ஆர்3 பைக்கை இந்தியாவில் களமிறக்குகிறதா யமஹா? கசிந்த விபரங்கள்!!

முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் அப்டேட் செய்யப்பட்ட பெயிண்ட் உடன் 2021 ஆர்3 பைக்கை ஜப்பான் நாட்டு சந்தையில் யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. புதிய பெயிண்ட்களுடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் ஆர்3 பைக்கிற்கு ஜப்பானில் வழங்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 ஆர்3 பைக்கை இந்தியாவில் களமிறக்குகிறதா யமஹா? கசிந்த விபரங்கள்!!

ஆனால் இந்திய சந்தையில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை மட்டுமே ஆர்3 பைக்கிற்கு யமஹா வழங்கும். அதாவது முன்பக்கத்தின் தோற்றம் சற்று மாற்றப்படலாம். இந்தியாவில் யமஹா ஆர்3 பைக்கிற்கு விற்பனையில் போட்டியாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மற்றும் கேடிஎம் ஆர்சி390 பைக்குகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha is looking to launch a couple of new models in India. However, the brand's popular middle-weight offering in the BS4 era, the YZF-R3 is yet to receive a BS6 update.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X