புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் முதல் விளம்பர வீடியோ வெளீயீடு!! ராயல் என்பீல்டிற்கு ஆரம்பமாகும் தலைவலி

சமீபத்தில் ஐரோப்பாவில் வெளியீடு செய்யப்பட்ட பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 மோட்டார்சைக்கிளின் முதல் டிவிசி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. டிவிசி எனப்படும் இந்த தொலைக்காட்சி கமர்ஷியல் வீடியோவினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் முதல் விளம்பர வீடியோ வெளீயீடு!! ராயல் என்பீல்டிற்கு ஆரம்பமாகும் தலைவலி

மஹிந்திரா க்ரூப்பில் ஓர் அங்கமாக வகிக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்களுக்கான உரிமையை கடந்த 2016இல் ரூ.28 கோடியில் பெற்றது. அதனை தொடர்ந்து இந்த 2021 டிசம்பர் மாத துவக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் மோட்டார்சைக்கிள் வெளியீடு செய்யப்பட்டது.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் முதல் விளம்பர வீடியோ வெளீயீடு!! ராயல் என்பீல்டிற்கு ஆரம்பமாகும் தலைவலி

யுகே-வில் நடைபெற்ற மோட்டார்சைக்கிள் கண்காட்சி ஒன்றின் மூலம் வெளியீடு செய்யப்பட்ட புதிய கோல்டு ஸ்டார் 650 பைக் இங்கிலாந்தில் தயாரிக்கப்படுவது மட்டுமின்றி, அங்கே தான் முதலாவதாக விற்பனைக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் தான் தற்போது இந்த பிஎஸ்ஏ பைக்கின் முதல் டிவிசி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே காணலாம்.

இந்த வீடியோவில் பெரும்பான்மையான பகுதிகளில் பைக்கின் ரைடிங் சூழல் தான் ஹைலைட்டாக காட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் பைக்கின் என்ஜின் உள்பட சில பாகங்கள் அருகாமையில் காட்டப்பட்டுள்ளன. இறுதியில் #மீண்டும்பிஎஸ்ஏ என்ற ஹேஸ்டேக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுதான், பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் சர்வதேச சந்தைக்கு ஒன்றும் புதியது கிடையாது.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் முதல் விளம்பர வீடியோ வெளீயீடு!! ராயல் என்பீல்டிற்கு ஆரம்பமாகும் தலைவலி

1938இல் இருந்து 1963 வரையில் முதல் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்பட்டது. 350சிசி -500சிசி ரேஞ்சிலான என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த மோட்டார்சைக்கிளின் பழமையான கிளாசிக் தோற்றம் புதிய கோல்டு ஸ்டார் 650 பைக்கிலும் தொடரப்பட்டுள்ளது. இருப்பினும் தற்கால இளம் தலைமுறையினரை கவரும் வகையில் மாடர்ன் தொடுதல்கள் பைக்கை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் முதல் விளம்பர வீடியோ வெளீயீடு!! ராயல் என்பீல்டிற்கு ஆரம்பமாகும் தலைவலி

அதேபோல் ஆற்றமிக்க 650சிசி என்ஜின் புதிய மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. இரட்டை தொட்டில் சட்டகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்களுடன், பராம்பரியமான வட்ட வடிவில் ஹெட்லேம்ப் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பின்பக்கத்திலும் எல்இடி டெயில்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் முதல் விளம்பர வீடியோ வெளீயீடு!! ராயல் என்பீல்டிற்கு ஆரம்பமாகும் தலைவலி

ஹேண்டில்பார் அகலமானதாக வழங்கப்பட்டிருக்க, அகலமான ஃபெண்டர்களுடன் பெட்ரோல் டேங்க் புதிய கோல்டு ஸ்டார் 650 பைக்கில் கண்ணீர்த்துளி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்போக்டு சக்கரங்களில் பைரெல்லி பாண்டோம் ஸ்போர்ட்ஸ்காம்ப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இருக்கை அமைப்பு பிளவுப்படாமால் ஒற்றை-துண்டாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் முதல் விளம்பர வீடியோ வெளீயீடு!! ராயல் என்பீல்டிற்கு ஆரம்பமாகும் தலைவலி

பளபளப்பிற்காக க்ரோம் தொடுதல்கள் ஹெட்லேம்ப் அமைப்பு, பெட்ரோல் டேங்க் மற்றும் எக்ஸாஸ்ட் குழாய்கள் என பைக்கை சுற்றிலும் கொடுக்கப்பட்டுள்ளன. அனலாக் வேகமானி மற்றும் டச்சோமீட்டர் உடன் இரட்டை-பேட் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் திரையை புதிய கோல்டு ஸ்டார் 650 ஏற்றுள்ளது. மேலும், இந்த பைக்கை பார்க்கும்போது உங்களுக்கு ட்ரையம்ப்பின் பொன்னேவில்லே பைக்குகளும் ஞாபகத்திற்கு வந்து செல்லலாம்.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் முதல் விளம்பர வீடியோ வெளீயீடு!! ராயல் என்பீல்டிற்கு ஆரம்பமாகும் தலைவலி

இன்சிக்னியா சிவப்பு, சில்வர், மிட்நைட் கருப்பு, ஹைலேண்ட் பச்சை மற்றும் சில்வர் ஷீன் (மரபு எடிசன்) என்கிற நிறத்தேர்வுகளில் வெளியீடு செய்யப்பட்டுள்ள புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் எடை 213 கிலோவாகவும், வீல்பேஸ் 1,425மிமீ ஆகவும், இருக்கையின் உயரம் 780மிமீ ஆகவும் மற்றும் பெட்ரோல் டேங்க் 12 லிட்டர் கொள்ளளவிலும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் முதல் விளம்பர வீடியோ வெளீயீடு!! ராயல் என்பீல்டிற்கு ஆரம்பமாகும் தலைவலி

இந்த பைக்கின் 652சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 45 எச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம்-இல் 55 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனுக்கு முன் & பின்பக்கத்தில் 41மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க் & இரட்டை ஷாக் அப்சார்பர்களும், பிரேக்கிங் பணியினை கவனிக்க ப்ரெம்போ காலிபர்கள் மற்றும் வழக்கமான இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் இரு சக்கரங்களிலும் சிங்கிள் டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் முதல் விளம்பர வீடியோ வெளீயீடு!! ராயல் என்பீல்டிற்கு ஆரம்பமாகும் தலைவலி

இந்திய சந்தையில் புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவது குறித்து தற்போதுவரையில் எந்தவொரு அறிவிப்பையும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் சமீபத்தில் பிஎஸ்ஏ 650சிசி பைக் ஒன்று சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டிருந்தது. ஒருவேளை இந்தியாவில் தயாரித்து இந்த பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிளை வெளிநாடுகளுக்கு கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்யலாம்.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் முதல் விளம்பர வீடியோ வெளீயீடு!! ராயல் என்பீல்டிற்கு ஆரம்பமாகும் தலைவலி

யுகே வில் விரைவில் விற்பனையை துவங்கவுள்ள 2022 பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கிற்கு விற்பனையில் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ், கவாஸாகி டபிள்யூ800 மற்றும் டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்வின் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன. இந்தியாவில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டால், இது ராயல் என்பீல்டிற்கு தலைவலியாக அமையக்கூடும்.

Most Read Articles

English summary
Bsa released first official television video commercial for new gold star 650
Story first published: Monday, December 13, 2021, 23:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X