Just In
- 10 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவிற்கு வர தயாராகும் சீன சிஎஃப்மோட்டோ பிஎஸ்6 பைக்!! கேடிஎம் பைக்குகளுக்குமுன் தாக்கு பிடிக்குமா?
இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்கின் டீசர் வெளிவந்துள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ என்ற பைக் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் 300என்கே பைக்கின் மூலம் நுழைய ஆயத்தமாகி வருகிறது. இதற்கு மத்தியில்தான் தற்போது இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டீசர் படத்தில் பெரிய அளவில் பைக்கை பற்றி எந்த தகவலும் கூறப்படவில்லை. பைக்கின் ஹெட்லைட் மட்டும்தான் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அதுவும் 300என்கே பைக்கின் முந்தைய பிஎஸ்4 வெர்சனையே ஒத்து காணப்படுகிறது.

இதனால் புதிய 300என்கே பைக்கின் தோற்றத்தில் பெரியதாக எந்த மாறுபாட்டையும் பார்க்க முடியாது. பெயிண்ட் மற்றும் கிராஃபிக்ஸில் மட்டுமே தயாரிப்பு நிறுவனம் கை வைத்திருக்கும். ஆனால் நமக்கோ சிஎஃப் மோட்டோ 300என்கே முற்றிலும் புதியது என்பதால், பைக்கே முழுவதுமாக வித்தியாசப்பட்டுதான் தெரியும்.

கேடிஎம், பல்சர் என்எஸ், ஆர்எஸ் பைக்குகளை போன்று இந்த சிஎஃப் மோட்டோ பைக்கும் இரு நிறங்களில் பெயிண்ட் செய்யப்படுகிறது. மேலும் அவற்றைபோல் கூர்மையான பாகங்களை அதிகளவில் கொண்டுள்ள இந்த பைக்கில் இருக்கைகள் பிளவுப்பட்ட வடிவில் வழங்கப்படுகிறது.

ஆனால் சற்று வித்தியாசமாக நம்பர் ப்ளேட் பின்பக்க ஃபெண்டரிலும், எக்ஸாஸ்ட் குழாய் மிகவும் சிறியதாகவும் பொருத்தப்படுகிறது. 300என்கே-வில் விளக்குகள் எல்இடி தரத்திலும், வண்ண டிஎஃப்டி திரை இரு காட்சி மோட்களிலும் வழங்கப்படுகிறது.

பைக்கில் சஸ்பென்ஷன் பணியை தலைக்கீழான முன்பக்க ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் கவனிக்கின்றன. ப்ரேக்கிற்கு இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்படுகின்றன.

கூடுதலாக பயணிகளின் பாதுகாப்பிற்கு ட்யுல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ள புதிய 300என்கே பைக்கில் மிக முக்கியமான அப்கிரேட் அதன் என்ஜினில்தான் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் 292.4சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பிஎஸ்4 வெர்சனில் 33.5 பிஎச்பி மற்றும் 20.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருந்தது.

ஆனால் பிஎஸ்6 வெர்சனில் சற்று கூடுதலான ஆற்றலையே இந்த என்ஜின் வெளிப்படுத்தும். இந்தியாவில் இந்த 300சிசி சீன பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.30 லட்சம் என்ற அளவில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.