சிஎஃப் மோட்டோ 650என்கே பிஎஸ்-6 பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

ஆர்ப்பரிக்கும் டிசைனில் இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்றுள்ள சிஎஃப் மோட்டோ நிறுவனம் தனது பிஎஸ்-6 மாடல்களை களமிறக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதன்படி, தனது 650என்கே பிஎஸ்-6 பைக்கிற்கு ஆன்லைனில் புக்கிங்கை துவங்கி இருக்கிறது.

சிஎஃப் மோட்டோ 650என்கே பிஎஸ்-6 பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனம் பிரிமீயம் ரக பைக்குகள் மற்றும் ஆல் டெர்ரெயின் வாகனங்களை தயாரிப்பதில் பிரபலமாக உள்ளது.. சீனாவில் முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும் சிஎஃப் மோட்டோ இரு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலும் பைக் விற்பனையை துவங்கியது. ஆனால், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, விற்பனையை நிறுத்தி வைத்திருந்தது.

சிஎஃப் மோட்டோ 650என்கே பிஎஸ்-6 பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

இந்த நிலையில், தனது பைக்குகளை பிஎஸ்-6 எஞ்சினுடன் ஒன்றன் பின் ஒன்றாக களமிறக்கத் துவங்கி இருக்கிறது. அண்மையில் தனது 300 என்கே பிஎஸ்-6 பைக்கின் விலையை அறிவித்தது. இதைத்தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் 650 எம்டி பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவை துவங்கியது.

சிஎஃப் மோட்டோ 650என்கே பிஎஸ்-6 பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

தற்போது 650என்கே பிஎஸ்-6 மாடலுக்கும் இந்தியாவில் முன்பதிவை துவங்கி இருக்கிறது. அதாவது, சிஎஃப் மோட்டோ இந்தியா நிறுவனத்தின் ஆன்லைன் பக்கத்தின் மூலமாக இந்த பைக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சிஎஃப் மோட்டோ 650என்கே பிஎஸ்-6 பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

ஆனால், தற்போது இணையதளத்தில் பிஎஸ்-4 மாடலின் விலைப் பட்டியல்தான் இடம்பெற்றுள்ளது. இன்னும், பிஎஸ்-6 மாடலின் விலைப் பட்டியல் வெளியிடப்பவில்லை. ஆனால், புக்கிங் மட்டும் துவங்கப்பட்டு இருக்கிறது.

சிஎஃப் மோட்டோ 650என்கே பிஎஸ்-6 பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

விருப்பம் உள்ள இந்திய வாடிக்கையாளர்கள் சிஎஃப் மோட்டோ 650 என்கே பைக்கின் பிஎஸ்-6 மாடலுக்கு ரூ.5,000 முன்தொகை செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். பிற முக்கிய விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. கொரோனா பிரச்னை ஓரளவு கட்டுக்குள் வந்தவுடன் விலை அறிவிப்புடன் டெலிவிரிப் பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஃப் மோட்டோ 650என்கே பிஎஸ்-6 பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

புதிய சிஎஃப் மோட்டோ 650என்கே பைக் மாடலானது நேக்கட் ரக பைக் மாடலாக உள்ளது. கூர்மையான டிசைன் அம்சங்களுடன் கேடிஎம் பைக் டிசைன் தாத்பரியங்களை நினைவூட்டினாலும், பிரத்யேக வண்ணக் கலவை உள்ளிட்டவற்றுடன் அசத்தலாக இருக்கிறது.

சிஎஃப் மோட்டோ 650என்கே பிஎஸ்-6 பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. முன்சக்கரத்தில் இரண்டு ரோட்டர்கள் கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மிக முக்கிய பாதுகாப்பு அம்சமாக இருக்கும்.

சிஎஃப் மோட்டோ 650என்கே பிஎஸ்-6 பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

இந்த பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர் கொண்ட 649சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ள இந்த பைக்கின் பவர், டார்க் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், பெரிய வித்தியாசங்கள் இருக்காது என்று நம்பலாம்.

Most Read Articles

English summary
CFMoto has commenced online bookings for 650NK BS6 model in India.
Story first published: Wednesday, May 12, 2021, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X