Just In
- 12 min ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 13 min ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 50 min ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 1 hr ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- News
வளைச்சு வளைச்சு மீட்டிங்.. கடந்த ஆண்டே எச்சரிக்கை.. ஆக்சிஜனை 'கோட்டை' விட்டது யார்?
- Movies
மாரி செல்வாராஜூடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாடும் ரசிகாஸ்!
- Finance
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா?
- Sports
‘சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணிக்காய்’.. நடராஜன் விலகலில் எழுந்த சர்ச்சை.. உண்மை காரணம் என்ன?
- Education
கோவையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? அழைக்கும் ICAR நிறுவனம்!
- Lifestyle
கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ.4 லட்சத்தில் 650சிசி பைக்குகளை இந்தியா கொண்டுவரும் சிஎஃப் மோட்டோ!! கவாஸாகிக்கு தலைவலி ஆரம்பமாக போகுது!
300என்கே, 300எஸ்ஆர் போன்ற 300சிசி மோட்டார்சைக்கிள்களை தொடர்ந்து இந்தியாவில் பெரிய 650சிசி என்ஜினை கொண்ட மோட்டார்சைக்கிள்களை களமிறக்க சிஎஃப் மோட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ என்ற மோட்டார்சைக்கிள் பிராண்ட் இந்தியாவில் காலூன்ற கடந்த சில வருடங்களாக பல முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது. எப்படியோ இந்த சீன பிராண்டின் இந்திய வருகை 2020ல் இருக்கும் என்று உறுதியாக கூறப்பட்டது.

ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் தலைத்தூக்க ஆரம்பித்ததால், அந்த திட்டம் தாமதமானது. இருப்பினும் ஒரு வழியாக சிஎஃப் மோட்டோ நிறுவனம் அதன் முதல் இந்திய பைக் மாடலாக 300என்கே என்ற ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக்கை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

இதற்கு அடுத்து 300எஸ்ஆர் என்ற ஸ்போர்ட்ஸ் ரக பைக் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் கிடைத்திருந்த நிலையில், தற்போது சிஎஃப் மோட்டோ அதன் 650என்கே, 650ஜிடி மற்றும் 650எம்டி என்ற மூன்று 650சிசி பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக ஜிக்வீல்ஸ் செய்திதளம் மூலமாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இவை மூன்றும் சர்வதேச சந்தைகளில் கவாஸாகி இசட்650, நிஞ்சா 650 மற்றும் வெர்ஸஸ்650 பைக்குகளுக்கு முக்கிய போட்டி மாடல்களாக விளங்குகின்றன. தோற்றத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 300என்கே பைக்கின் சாயலை இந்த பைக்குகளில் நிச்சயம் பார்க்க முடியும்.

இந்த மூன்று சிஎஃப் மோட்டோ பைக்குகளிலும் ஒரே மாதிரியான 650சிசி இணையான-இரட்டை, லிக்யூடு-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. ஆனால் என்ஜின் பைக்கின் பண்பை பொருத்து இந்த மூன்று பைக்குகளில் வழங்கப்படுகிறது.

அதாவது 650சிசி பிரிவில் சிஎஃப் மோட்டோவின் நாக்டு மோட்டார்சைக்கிளான 650என்கே-வில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-ல் 61 பிஎஸ் மற்றும் 7,000 ஆர்பிஎம்-ல் 56 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.

அதுவே ஸ்போர்ட்ஸ் டூரரான 650ஜிடி-யில் 9,000 ஆர்பிஎம்-ல் 62.5 பிஎஸ் மற்றும் 7000 ஆர்பிஎம்-ல் 58.5 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலையும், அட்வென்ச்சர் மாடலான 650எம்டி-யில் 8750 ஆர்பிஎம்-ல் 70.7 பிஎஸ் மற்றும் 7000 ஆர்பிஎம்-ல் 62 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இந்த என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்திய சந்தையில் பெரும்பான்மையான தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் விற்பனை மாடல்களின் விலைகளை பிஎஸ்6 மாற்றத்தினால் அதிகரித்து வருகின்றன. ஆனால் சிஎஃப் மோட்டோ பிஎஸ்4 300என்கே பைக்கின் விலையிலேயே அதன் பிஎஸ்6 வெர்சனை அறிமுகப்படுத்தி ஆச்சிரியப்படுத்தியுள்ளது.

இதனால் இந்த வியாபார யுக்தி அப்படியே 650சிசி சிஎஃப் மோட்டோ பைக்குகளுக்கும் பின் தொடரப்படும் என நம்புவோம். நமக்கு தெரிந்தவரை இந்தியாவில் 650என்கே, 650ஜிடி மற்றும் 650எம்டி பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.4 லட்சம், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.5.5 லட்சம் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.