சிஎஃப் மோட்டோ 650என்கே எஸ்பி எடிசன் பைக் வெளியீடு!! செம்ம ஸ்டைலா இருக்கு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

சிஎஃப் மோட்டோ 650என்கே மோட்டார்சைக்கிளின் புதிய எஸ்பி எடிசன் பற்றிய விபரங்கள் படங்களுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சிஎஃப் மோட்டோ 650என்கே எஸ்பி எடிசன் பைக் வெளியீடு!! செம்ம ஸ்டைலா இருக்கு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

சீனாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் பிராண்டான சிஎஃப் மோட்டோவின் மிடில்வெய்ட் நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டராக 650என்கே உள்ளது. இதன் புதிய ‘எஸ்பி' எடிசன் தான் தற்போது ஆஸ்திரேலியா நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிஎஃப் மோட்டோ 650என்கே எஸ்பி எடிசன் பைக் வெளியீடு!! செம்ம ஸ்டைலா இருக்கு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்த ஸ்பெஷல் எடிசன் வழக்கமான சிஎஃப் மோட்டோ 650என்கே பைக்கின் ப்ரீமியம் வெர்சனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காகவே பைக்கின் வெளிப்புற பகுதி கூடுதல் பாகங்களுடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

சிஎஃப் மோட்டோ 650என்கே எஸ்பி எடிசன் பைக் வெளியீடு!! செம்ம ஸ்டைலா இருக்கு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இதன் விளைவாக பைக்கின் மொத்த தோற்றமும் மேம்பட்ட ஸ்டைலிற்கு மாறியுள்ளது. குறிப்பாக ஹெட்லைட் அமைப்பு மற்றும் பெட்ரோல் டேங்க் நீட்டிப்புகள் அடங்கிய 650என்கே பைக்கின் முன்பகுதியில் சிஎஃப் மோட்டோ நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

சிஎஃப் மோட்டோ 650என்கே எஸ்பி எடிசன் பைக் வெளியீடு!! செம்ம ஸ்டைலா இருக்கு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இவற்றுடன் 5-இன்ச்சில் முழு-வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்விட்ச்கியரில் பேக்லிட் பொத்தான்கள் ப்ரீமியம் தோற்றத்தை வழங்கும் நோக்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

சிஎஃப் மோட்டோ 650என்கே எஸ்பி எடிசன் பைக் வெளியீடு!! செம்ம ஸ்டைலா இருக்கு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

அதேநேரம் ப்ரீமியம் தரத்திலான சஸ்பென்ஷன் அமைப்பாக கயாபா சஸ்பென்ஷன், மென்மையான கியர் மாற்றத்திற்காக புதிய ஸ்லிப்பர் க்ளட்ச், திருத்தப்பட்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் புதிய ரிம்கள் உள்ளிட்டவற்றையும் இந்த சிஎஃப் மோட்டோ 650என்கே எஸ்பி எடிசனில் வழங்கப்பட்டுள்ளன.

சிஎஃப் மோட்டோ 650என்கே எஸ்பி எடிசன் பைக் வெளியீடு!! செம்ம ஸ்டைலா இருக்கு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

பைக்கின் 17 இன்ச் அலாய் சக்கரங்களில் நன்கு பிடிமானத்தை வழங்கக்கூடிய பைரெல்லி ஏஞ்சேல் எஸ்டி டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்றப்படி 650என்கே பைக்கில் வழங்கப்படும் 649சிசி, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

சிஎஃப் மோட்டோ 650என்கே எஸ்பி எடிசன் பைக் வெளியீடு!! செம்ம ஸ்டைலா இருக்கு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

அதிகப்பட்சமாக 60.3 பிஎச்பி மற்றும் 56 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியது. இந்திய சந்தையை பொறுத்தவரையில், கடந்த ஆண்டில் புதிய மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வரும் வரையில் சிஎஃப் மோட்டோ 650 என்கே பைக் விற்பனையில் இருந்தது.

சிஎஃப் மோட்டோ 650என்கே எஸ்பி எடிசன் பைக் வெளியீடு!! செம்ம ஸ்டைலா இருக்கு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

அதன் பின்புதான் இதன் 650சிசி பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டது. சிஎஃப் மோட்டோ பிராண்டில் இருந்து தற்சமயம் 300என்கே பிஎஸ்6 என்ற பைக் மாடல் மட்டுமே விற்பனையில் உள்ளது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.29 லட்சமாக உள்ளது.

Most Read Articles
English summary
CF Moto launched New 650NK SP edition in Australia. Read In Tamil.
Story first published: Thursday, April 1, 2021, 23:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X