சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேசிங் எடிசன் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் மோட்டார்சைக்கிளின் ரேசிங் எடிசன் பைக்கை பற்றிய விபரங்கள் படங்களுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேசிங் எடிசன் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

சீனாவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் பிராண்டாக சிஎஃப் மோட்டோ விளங்கிறது. சீனா மட்டுமில்லாமல் வேறு சில வெளிநாட்டு சந்தைகளிலும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேசிங் எடிசன் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்த வகையில் இந்திய சந்தையில் களமிறங்க இந்த சீன மோட்டார்சைக்கிள் பிராண்ட் கடந்த சில வருடங்களாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் விளைவாக சில பைக் மாடல்களை சிஎஃப் மோட்டோ இந்தியாவில் சில மாதங்களாக விற்பனை செய்துவருகிறது.

சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேசிங் எடிசன் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

ஆனால் இந்த நிறுவனத்தின் இந்திய வருகை 2020லேயே இருக்கும் என்று எதிர்பார்த்தோம். கொரோனா வைரஸ் பரவல் இதன் வருகையை தாமதப்படுத்திவிட்டது. இந்த நிலையில் தற்போது சிஎஃப் மோட்டோவின் பிரபலமான மோட்டார்சைக்கிள் மாடல்களுள் ஒன்றான 250எஸ்ஆர்-இன் புதிய ரேசிங் எடிசனை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேசிங் எடிசன் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

ரேசிங் எடிசன் என்றாலே பொதுவாக ட்ராக் ரேஸ் பைக்குகளுக்கு உண்டான பெயிண்ட்டில் வழங்கப்படுவை ஆகும். ஆனால் புதிய 250எஸ்ஆர் ரேசிங் எடிசன் பிரத்யேகமான பெயிண்ட் மட்டுமின்றி செயல்திறனை மேம்படுத்தும் வகையில் சஸ்பென்ஷன் அமைப்பிலும் அப்கிரேடை பெற்றுள்ளது.

சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேசிங் எடிசன் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இதன் சஸ்பென்ஷன் அமைப்பில் கயாபாவின் 37மிமீ தலைக்கீழான முன்பக்க ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்க மோனோ-ஷாக் உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த அப்கிரேட்களை தவிர்த்து வழக்கமாக சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் பைக் எப்படி வழங்கப்படுமோ அப்படியே தான் அதன் புதிய ரேசிங் எடிசனும் உள்ளது.

சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேசிங் எடிசன் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

முழுவதும் பேனல்களால் நிரப்பப்பட்ட ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிளான சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் பைக்கில் இரட்டை-ஹெட்லேம்ப், எல்இடி இண்டிகேட்டர்கள், எல்இடி டெயில்லைட், முன்பக்க டூமில் பொருத்தப்பட்ட பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேசிங் எடிசன் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்த சிஎஃப் மோட்டோ பைக்கில் 249.2சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9,750 ஆர்பிஎம்-ல் 27.5 பிஎச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-ல் 22 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேசிங் எடிசன் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்த 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கில் ப்ரேக்கிங் பணியினை கவனிக்க முன் சக்கரத்தில் 292மிமீ-லும், பின் சக்கரத்தில் 220மிமீ-லும் சிங்கிள் டிஸ்க் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் சமீபத்தில் 300என்கே என்ற நாக்டு-மோட்டார்சைக்கிளை பிஎஸ்6 தரத்தில் இந்த சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ரூ.2.29 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்கிற்கு விற்பனையில் கேடிஎம் 390 ட்யூக் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் உள்ளிட்ட பைக் மாடல்கள் போட்டியாக உள்ளன.

Most Read Articles

English summary
CFMoto 250SR Racing Edition revealed. Read In Tamil.
Story first published: Sunday, March 28, 2021, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X