கேடிஎம் ஆர்சி200-க்கு போட்டியாக, சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேஸ் எடிசன்!! சீனாவில் அறிமுகம்

புதிய சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேஸ் எடிசன் மோட்டார்சைக்கிள் சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. கேடிஎம் ஆர்சி200 பைக்கிற்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் இந்த சிஎஃப் மோட்டோ பைக்கின் புதிய ரேஸ் எடிசனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம் ஆர்சி200-க்கு போட்டியாக, சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேஸ் எடிசன்!! சீனாவில் அறிமுகம்

சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேஸ் எடிசன் மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சமே அதன் பிரத்யேக பெயிண்ட் ஆகும். ஏனெனில் பெயிண்ட்டின் மூலமாகவே ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து இந்த ரேஸ் எடிசனை வேறுப்படுத்தி காட்டியுள்ளனர்.

கேடிஎம் ஆர்சி200-க்கு போட்டியாக, சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேஸ் எடிசன்!! சீனாவில் அறிமுகம்

கேடிஎம் ஆர்சி200 பைக்கை போன்று முழுவதும் பேனல்களால் நிரப்பப்பட்ட பைக்கான சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆரின் ரேஸ் எடிசனில் ஆரஞ்ச் மற்றும் நீல நிறங்கள் கலந்த கலவையில் பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது.

கேடிஎம் ஆர்சி200-க்கு போட்டியாக, சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேஸ் எடிசன்!! சீனாவில் அறிமுகம்

இதற்கு முன்னர் இந்த சிஎஃப் மோட்டோ பைக்கிற்கு நீல நிற ரேஸ் எடிசன் வழங்கப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த பெயிண்ட் மிகவும் நேர்த்தியானதாக உள்ளது. இதனால் இந்த புதிய ரேஸ் எடிசன் பைக்கை சாலையில் ஓட்டி சென்றால், அனைவரது கவனமும் இந்த பைக்கின் மீதுதான் இருக்கும் என்பது உறுதி.

கேடிஎம் ஆர்சி200-க்கு போட்டியாக, சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேஸ் எடிசன்!! சீனாவில் அறிமுகம்

சிறப்பு பெயிண்ட் உடன் எல்இடி டிஆர்எல்களுடன் முன்பக்கத்தில் இரட்டை-பீம் எல்இடி ஹெட்லைட்டை கொண்டுள்ள இந்த 250எஸ்ஆர் ரேஸ் எடிசனில் முன் சஸ்பென்ஷன் யுஎஸ்டி-கள் பிரத்யேக பெயிண்ட்டிற்கு ஏற்ப தங்க நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

கேடிஎம் ஆர்சி200-க்கு போட்டியாக, சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேஸ் எடிசன்!! சீனாவில் அறிமுகம்

பைக்கின் பக்கவாட்டில் வளைவுகளும், வெட்டுதல்களும் அதிகளவில் உள்ளன. இவை பைக்கிற்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகின்றன. இவற்றுடன் உள்ள பிளவுப்பட்ட வடிவில் இருக்கை அமைப்பு மற்றும் சற்று பெரியதாக்கப்பட்ட பின்பகுதியினால் மொத்த மோட்டார்சைக்கிளுக்கும் முரட்டுத்தனமான தோற்றம் கிடைத்துள்ளது.

கேடிஎம் ஆர்சி200-க்கு போட்டியாக, சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேஸ் எடிசன்!! சீனாவில் அறிமுகம்

ப்ளூடூத் இணைப்புடன் டிஎஃப்டி வண்ண திரையினை கொண்டுள்ள இந்த புதிய சிஎஃப் மோட்டோ ரேஸ் எடிசன், குழாய் எஃகு சட்டகத்தில், முன் மற்றும் பின் சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் ஆர்சி200-க்கு போட்டியாக, சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேஸ் எடிசன்!! சீனாவில் அறிமுகம்

புதிய 250எஸ்ஆர் ரேஸ் எடிசனிலும் வழக்கமான 249.2சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 9,750 ஆர்பிஎம்-இல் 27.5 பிஎச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-இல் 22 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் ஆர்சி200-க்கு போட்டியாக, சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேஸ் எடிசன்!! சீனாவில் அறிமுகம்

இந்திய சந்தையில் சீன மோட்டார்சைக்கிள் நிறுவனம் அடுத்ததாக இந்த 2021ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் 300எஸ்ஆர் பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மற்றப்படி சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் பைக் நம் நாட்டு சந்தைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.

Most Read Articles

Source: Bikewale

English summary
KTM RC 200 rivalling CFMoto 250SR Race edition revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X