ஒரே ஒரு வீலுடைய மின்சார பைக்... விலையை கேட்ட தலை தெறிக்க ஒடுவீங்க... இது எந்த நாட்டு தயாரிப்பு தெரியுமா?

ஒற்றை வீல் கொண்ட மின்சார பைக்கை சீன நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் பிற முக்கிய தகவலைக் கீழே காணலாம்.

ஒரே ஒரு வீலுடைய மின்சார பைக்... விலையை கேட்ட தலை தெறிக்க ஒடுவீங்க... இது எந்த நாட்டு தயாரிப்பு தெரியுமா?

பார்ப்பதற்கு முன் சக்கரத்தை இழந்தது போன்று காட்சியளிக்கும் இந்த வாகனம் ஓர் சீன நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனத்தின் தயாரிப்பாகும். இதுவே இதன் உருவம் ஆகும். ஒற்றை வீலில் மட்டுமே இது இயங்கும் என்பது இதன் தனி சிறப்பு.

ஒரே ஒரு வீலுடைய மின்சார பைக்... விலையை கேட்ட தலை தெறிக்க ஒடுவீங்க... இது எந்த நாட்டு தயாரிப்பு தெரியுமா?

நகர போக்குவரத்திற்கு உதவியளிக்கும் வகையில் இதற்கு ஒற்றை வீல் உருவத்தை தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருக்கின்றது. அலிபாபா யுனிபைக் எனும் பெயரே இப்பைக்கிற்கு வைக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான வாகனங்களைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட தோற்றம் மற்றும் அம்சங்களுடன் தயாராகியிருக்கின்றது.

ஒரே ஒரு வீலுடைய மின்சார பைக்... விலையை கேட்ட தலை தெறிக்க ஒடுவீங்க... இது எந்த நாட்டு தயாரிப்பு தெரியுமா?

இந்த வாகனத்தின் முன் பக்கத்தில் வீல் இல்லை என்றாலும் இதனை வழக்கமான இரு சக்கர வாகனங்களைப் போன்று பயன்படுத்த முடியும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். குறிப்பாக, வளைவுகளில் திருப்புவது போன்ற முக்கிய செயல்களை மேற்கொள்வது மிகவும் சுலபம் என தயாரிப்பு நிறுவனம் கூறுகின்றது.

ஒரே ஒரு வீலுடைய மின்சார பைக்... விலையை கேட்ட தலை தெறிக்க ஒடுவீங்க... இது எந்த நாட்டு தயாரிப்பு தெரியுமா?

ஆகையால், இந்த வாகனத்தின் முன்பக்கத்தில் சக்கரம் இல்லையே ஆகையால் இதனை கையாள்வது மிகக் கடினமானதாக இருக்குமோ நினைத்துக் கொள்ள வேண்டாம். தொடர்ந்து, இந்த ஒற்றை வீல் மின்சார வாகனத்தின் உறுதியான கட்டமைப்பிற்காக ட்ரெல்லிஸ் ஃப்ரேமை நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றன.

ஒரே ஒரு வீலுடைய மின்சார பைக்... விலையை கேட்ட தலை தெறிக்க ஒடுவீங்க... இது எந்த நாட்டு தயாரிப்பு தெரியுமா?

மேலும், இவ்வாகனத்தின் முரட்டு தனமான தோற்றத்திற்காக கட்டுமஸ்தான அமைப்புடைய ப்யூவல் டேங்கையும் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இத்தைகைய உருவத்திற்கு ஏற்ற சூப்பர் திறன் கொண்ட மின் மோட்டாரே இந்த வாகனத்தில் பயனப்டுத்தப்பட்டிருக்கின்றது.

ஒரே ஒரு வீலுடைய மின்சார பைக்... விலையை கேட்ட தலை தெறிக்க ஒடுவீங்க... இது எந்த நாட்டு தயாரிப்பு தெரியுமா?

அலிபாபா யுனிபைக்கில் 2,000 வாட் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக மணிக்கு 48 கிமீ எனும் வேகத்தில் செல்லக் கூடியது. இதன் ஒட்டுமொத்த எடையும் வெறும் 40 கிலோ மட்டுமே ஆகும். யுனி பைக்கின் முன் பகுதியை தரையை தொடாமல் இருப்பதற்காக கைரோஸ்கோப்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஒரே ஒரு வீலுடைய மின்சார பைக்... விலையை கேட்ட தலை தெறிக்க ஒடுவீங்க... இது எந்த நாட்டு தயாரிப்பு தெரியுமா?

இதையடுத்து, சூப்பர் ரேஞ்ஜை வழங்கும் வகையில் இந்த வாகனத்தில் 1,360 கிலோவாட் திறன் கொண்ட பானாசோனிக் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது ஒரு முழுமையான சார்ஜில் 60 கிமீ முதல் 100 ரேஞ்ஜை வழங்கும். அதாவது, வெவ்வேறு விதமான ரேஞ்ஜ் திறனில் இவ்வாகனம் விற்பனைக்கு வர இருக்கின்றது.

ஒரே ஒரு வீலுடைய மின்சார பைக்... விலையை கேட்ட தலை தெறிக்க ஒடுவீங்க... இது எந்த நாட்டு தயாரிப்பு தெரியுமா?

இந்த பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்ய 3 முதல் 12 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும் வரை எடுத்துக் கொள்ளுமாம். பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் மையங்களைப் பொருத்து இதன் நேர நீடிப்பு அமையும்.

விலை:

அலிபாபா யுனிபைக் அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது ஆன்லைனில் புக்கிங் நடைபெற்று வருகின்றது. 1,800 அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் இவ்வாகனம் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்திய மதிப்பில் ரூ. 1.30 லட்சம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் இந்திய வருகை சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கின்றது. இவ்வாகனத்தின் இயக்கத்திற்கு இந்திய சாலைகள் சற்றும் பொருந்தாது என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

Source: Electrek

Most Read Articles

English summary
பசுமை வாகனங்கள், green vehicles,
Story first published: Thursday, March 18, 2021, 17:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X