சீனர்கள் எதை தான் விட்டு வைக்கிறார்கள்? அச்சு அசல் கவாஸாகி நிஞ்சா பைக்கின் தோற்றத்தில் சீனாவின் பின்ஜா 500...

பின்ஜா 500 என்கிற பெயரில் கிட்டத்தட்ட கவாஸாகி நிஞ்சா பைக்குகளின் தோற்றத்தில் மோட்டார்சைக்கிள் ஒன்று சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த சீன பைக்கை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சீனர்கள் எதை தான் விட்டு வைக்கிறார்கள்? அச்சு அசல் கவாஸாகி நிஞ்சா பைக்கின் தோற்றத்தில் சீனாவின் பின்ஜா 500...

மற்ற நாட்டு சந்தைகளில் பிரபலமாக இருக்கும் மோட்டார்சைக்கிள்களின் போலி மாடல்களை உருவாக்குவதினாலேயே சீன தயாரிப்புகளில் சில வாகனங்களை தவிர்த்து பெரும்பான்மையானவை வரவேற்பை பெறாமலே உள்ளன.

சீனர்கள் எதை தான் விட்டு வைக்கிறார்கள்? அச்சு அசல் கவாஸாகி நிஞ்சா பைக்கின் தோற்றத்தில் சீனாவின் பின்ஜா 500...

ராயல் என்பீல்டு பைக்குகள், டொயோட்டா கார்கள் என உலகளவில் விற்பனையாகும் பிரபலமான வாகனங்களை சீன தயாரிப்பு நிறுவனங்கள் விட்டு வைப்பதே இல்லை. அதற்கு உதாரணங்களை நமது செய்திதளத்தில் கூட பார்த்துள்ளோம்.

சீனர்கள் எதை தான் விட்டு வைக்கிறார்கள்? அச்சு அசல் கவாஸாகி நிஞ்சா பைக்கின் தோற்றத்தில் சீனாவின் பின்ஜா 500...

இந்த வகையில் கவாஸாகியின் நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் பைக்கின் தோற்றத்தில் பின்ஜா 500 என்கிற பைக் உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த கவாஸாகியின் இந்த 1000சிசி சூப்பர்பைக் நடப்பு ஆண்டு துவக்கத்தில் தான் சில காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் அப்கிரேடை பெற்றிருந்தது.

சீனர்கள் எதை தான் விட்டு வைக்கிறார்கள்? அச்சு அசல் கவாஸாகி நிஞ்சா பைக்கின் தோற்றத்தில் சீனாவின் பின்ஜா 500...

பின்ஜா 500 பைக்கை பொறுத்தவரையில், இதனை எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும், கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் பைக்கையே ஞாபகப்படுத்துகிறது. அதற்கேற்றாற்போல் கவாஸாகியின் அடையாளமான பச்சை நிறத்தில் வேறு இந்த சீன பைக் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளதால், பைக்குகளை பற்றி அவ்வளவாக தெரியாதவர்களிடம் இது கவாஸாகி பைக் என்று சொன்னால் நிச்சயம் நம்பிவிடுவர்.

சீனர்கள் எதை தான் விட்டு வைக்கிறார்கள்? அச்சு அசல் கவாஸாகி நிஞ்சா பைக்கின் தோற்றத்தில் சீனாவின் பின்ஜா 500...

பின்ஜா 500 இரட்டை-ஸ்பார் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றத்தில் முக்கியமான சிறப்பம்சங்கள் என்று பருமனான பெட்ரோல் டேங்க், நீட்டிக்கப்பட்ட முன்பக்க எதிர்காற்று தடுப்பு கண்ணாடி, பிளவுப்பட்ட ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல் உடன் காட்சித்தரும் காற்று ஏற்பு துளை, சற்று உயரமான பின் இருக்கை மற்றும் மேல் நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாயினை சொல்லலாம்.

சீனர்கள் எதை தான் விட்டு வைக்கிறார்கள்? அச்சு அசல் கவாஸாகி நிஞ்சா பைக்கின் தோற்றத்தில் சீனாவின் பின்ஜா 500...

இவை எல்லாவற்றையும் விட வாடிக்கையாளர்களை கவர்வதற்காக டர்ன் இண்டிகேட்டர்கள் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடியின் பின்பக்க மூடியில் பொருத்தப்பட்டுள்ளன. என்ன தான் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருந்தாலும், செயல்திறனில் நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர், பின்ஜா 500 பைக்கை காட்டிலும் பல படிகள் முன்னோக்கியே இருக்கும்.

சீனர்கள் எதை தான் விட்டு வைக்கிறார்கள்? அச்சு அசல் கவாஸாகி நிஞ்சா பைக்கின் தோற்றத்தில் சீனாவின் பின்ஜா 500...

ஏனெனில் அந்த கவாஸாகி பைக்கில் வழங்கப்படும் 998சிசி என்ஜின் அதிகப்பட்சமாக சுமார் 200 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆனால் பின்ஜா 500 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 500சிசி, இணையான இரட்டை என்ஜின் 49.3 பிஎச்பி வரையில் மட்டுமே வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனர்கள் எதை தான் விட்டு வைக்கிறார்கள்? அச்சு அசல் கவாஸாகி நிஞ்சா பைக்கின் தோற்றத்தில் சீனாவின் பின்ஜா 500...

இந்த சீன பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் ஷோவாவின் பேலன்ஸ் ப்ரீ ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க டிஸ்க் ப்ரேக்குகள் இரு சக்கரங்களிலும் வழங்கப்பட்டுள்ளன. ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பது தெரியவில்லை.

சீனர்கள் எதை தான் விட்டு வைக்கிறார்கள்? அச்சு அசல் கவாஸாகி நிஞ்சா பைக்கின் தோற்றத்தில் சீனாவின் பின்ஜா 500...

எல்இடி தரத்தில் ஹெட்லைட்டை கொண்டுள்ள பின்ஜா 500 டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலையும், பின்பக்கத்தில் நேர்த்தியான வடிவத்தில் டெயில்லேம்பையும் பெற்றுள்ளது. இவ்வாறு சூப்பர்பைக்கை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சீன பைக்கின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் ரூ.1.46 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Kawasaki Ninja Copycat From China Called Finja 500. Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X