சீனர்களின் லேட்டஸ்ட் காப்பியடிப்பு பைக்! என்னதான் காப்பிடியச்சாலும் ஃபினிஷிங் சரியில்லையேப்பா!!

ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் ஸ்வர்ட்பிளன் 250 பைக்கை சீன நிறுவனம் ஒன்று காப்பியடித்து உருவாக்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

சீனர்களின் லேட்டஸ்ட் காப்பியடிப்பு பைக்! என்னதான் காப்பிடியச்சாலும் ஃபினிஷிங் சரியில்லையேப்பா!!

பிரபல நிறுவனத்தின் இருசக்கர வாகனம் ஒன்றை சீன நிறுவனம் ஒன்று டூப்ளிகேட் செய்திருப்பது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எந்தவொரு பொருளையும் டூப்ளிகேட் செய்வதில் சீன நிறுவனங்கள் கை தேர்ந்தவையாக இருக்கின்றன. கடந்த காலங்களில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை டூப்ளிகேட் செய்து வந்த சீன நிறுவனங்கள் சமீப காலமாக வாகனங்களை அதிகளவில் காப்பியடித்து தயாரித்து வருகின்றன.

சீனர்களின் லேட்டஸ்ட் காப்பியடிப்பு பைக்! என்னதான் காப்பிடியச்சாலும் ஃபினிஷிங் சரியில்லையேப்பா!!

இந்த போக்கை பல வருடங்களாக சீன நிறுவனங்கள் கையாண்டு வந்தாலும், கடந்த சில வருடங்கள் மிக அதிகளவில் டூப்ளிகேட் செய்யும் சம்பவங்களை அவை அரங்கேற்றி வருகின்றன. இந்த நிலையிலேயே ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகன மாடலான ஸ்வர்ட்பிளன் 250 மாடலை சீன நிறுவனம் டூப்ளிகேட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனர்களின் லேட்டஸ்ட் காப்பியடிப்பு பைக்! என்னதான் காப்பிடியச்சாலும் ஃபினிஷிங் சரியில்லையேப்பா!!

எஃப்கே மோட்டார்ஸ் எனும் சீன நிறுவனமே ஸ்வர்ட்பிளன் 250 பைக்கை டூப்ளிகேட் செய்த நிறுவனம் ஆகும். ஃபெய்கன் டிடி250 எனும் பெயரில் அந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. டிசைன், ஸ்டைல் என அனைத்திலும் இந்த பைக் ஸ்வர்ட்பிளன் 250 பைக்கை தழுவிய ஓர் மாடலாகவே காட்சியளிக்கிறது.

சீனர்களின் லேட்டஸ்ட் காப்பியடிப்பு பைக்! என்னதான் காப்பிடியச்சாலும் ஃபினிஷிங் சரியில்லையேப்பா!!

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 250 ஓர் குவார்டர்-லிட்டர் ட்வின் ரக பைக்காகும். இந்த ஸ்டைலையே அப்படியே தழுவி உருவாகியிருக்கின்றது ஃபெய்கன் டிடி250 பைக். இதை உறுதிப்படுத்தும் வகையில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், தங்க நிறத்திலான யுஎஸ்டி ஃபோர்க் (முன்பக்கத்தில்), வட்ட வடிவ முழு டிஜிட்டல் திறனிலான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், சமதள தோற்றம் கொண்ட எரிபொருள் தொட்டி உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கின்றன.

சீனர்களின் லேட்டஸ்ட் காப்பியடிப்பு பைக்! என்னதான் காப்பிடியச்சாலும் ஃபினிஷிங் சரியில்லையேப்பா!!

அதேசமயம், சிறு சிறு வித்தியாசங்களையும் இப்பைக் பெற்றிருக்கின்றது. குறிப்பாக ஃபெய்கன் டிடி250 பைக்கின் பக்கவாட்டு பகுதியில் அந்த வித்தியாசங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், இருக்கைக்கு அடியில் எக்சாஸ்ட் சிஸ்டம், ஒற்றை பக்க ஸ்விங்கர்ம் ஆகியவை உள்ளன.

சீனர்களின் லேட்டஸ்ட் காப்பியடிப்பு பைக்! என்னதான் காப்பிடியச்சாலும் ஃபினிஷிங் சரியில்லையேப்பா!!

இத்துடன், லேசான வித்தியாசங்களை வழங்கும் வகையில் சிறப்பு வண்ண பூச்சு வேலை செய்யப்பட்டிருக்கின்றன. எஞ்ஜின் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் அந்த சிறப்பு நிற வேலை செய்யப்பட்டிருக்கின்றது. ஃபெய்கன் டிடி250 பைக்கில் 17 இன்சிலான வீல் இரு முனைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சீனர்களின் லேட்டஸ்ட் காப்பியடிப்பு பைக்! என்னதான் காப்பிடியச்சாலும் ஃபினிஷிங் சரியில்லையேப்பா!!

இதில் 110/70 அளவுள்ள டயர் முன் பக்கத்திற்கும், 150/60 அளவுள்ள டயர் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டயர்கள் எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் திறன் கொண்டதைப் போல் காட்சியளிக்கின்றது. தொடர்ந்து, சிறந்த பிரேக்கிங் வசதிக்காக இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

சீனர்களின் லேட்டஸ்ட் காப்பியடிப்பு பைக்! என்னதான் காப்பிடியச்சாலும் ஃபினிஷிங் சரியில்லையேப்பா!!

முன் பக்க வீலில் இருப்பது 300மிமீ அளவிலும், பின் பக்க வீலில் இருப்பது 260 மிமீ அளவிலும் டிஸ்க் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஃபெய்கன் டிடி250 பைக்கில் 249 சிசி திறன் கொண்ட 4வால்வ், லிக்யூடு கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 28 எச்பி மற்றும் 21.7 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.

சீனர்களின் லேட்டஸ்ட் காப்பியடிப்பு பைக்! என்னதான் காப்பிடியச்சாலும் ஃபினிஷிங் சரியில்லையேப்பா!!

Source: Moto.it

இந்த எஞ்ஜினை சீன நிறுவனம், ஜெஜியாங் சுங்ஃபெங் (Zhejiang Chungfeng) எனும் நிறுவனத்திடம் இருந்தே பெறுகின்றது. இதில், சுவாரஷ்ய என்னவென்றால் இது சிஎஃப் மோட்டோவின் தாய் நிறுவனம் ஆகும். என்னதான் பைக் காப்பியடித்து உருவாக்கப்பட்டிருந்தாலும் ஹஸ்க்வர்னாவின் ஸ்வர்ட்பிளன் 250 பைக்கின் பரீமியம் தரத்துடன் ஒப்பிடுகையில் பல மடங்கு பின் தங்கிய மாடலாகவே அது இருக்கின்றது.

Most Read Articles

English summary
Chinese Latest Copy Cat Bike Feiken TT250: Here Is Full Details.
Story first published: Wednesday, July 21, 2021, 13:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X