ஓலா எஸ்1-ஆ? அல்லது பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1-ஆ? சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சிறந்தது இதுதான்!!

இந்திய சந்தையில் சமீபத்தில் நுழைந்துள்ள இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக பவுன்ஸ் விளங்குகிறது. உள்நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பவுன்ஸ் அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இன்ஃபினிட்டி இ1 மாடலை இந்த டிசம்பர் மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது.

ஓலா எஸ்1-ஆ? அல்லது பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1-ஆ? சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சிறந்தது இதுதான்!!

விற்பனையில் பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஓலா எஸ்1, ஏத்தர் 450 எக்ஸ், பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக், டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன. ஒட்டுமொத்தமாக மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போல், இன்ஃபினிட்டி இ1 மாடலும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஓலா எஸ்1-ஆ? அல்லது பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1-ஆ? சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சிறந்தது இதுதான்!!

இவ்வாறு புதிய புதிய கவர்ச்சிக்கரமான தோற்றத்தினாலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகையினால் மட்டுமின்றி, தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல் விலையினாலும் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் வர ஆரம்பித்துள்ளனர். இவி பயன்பாடு குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இருந்துதான் ஆரம்பித்து வருவதை ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம்.

ஓலா எஸ்1-ஆ? அல்லது பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1-ஆ? சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சிறந்தது இதுதான்!!

சரி மீண்டும் பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வருவோம். இந்த இ-ஸ்கூட்டருக்கு முக்கியமான போட்டி மாடலாக ஓலா எஸ்1 பார்க்கப்படுகிறது. ஏனெனில் இன்ஃபினிட்டி இ1 மாடலை போல் சமீப காலத்தில் மக்கள் பலரை வெகுவாக கவர்ந்துள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டராக ஓலா எஸ்1 விளங்குகிறது. இவை இரண்டிற்கும் இடையேயான வித்தியாசங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஓலா எஸ்1-ஆ? அல்லது பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1-ஆ? சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சிறந்தது இதுதான்!!

தோற்றம்

ரெட்ரோ-மாடர்ன் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட இ-ஸ்கூட்டராக பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 விளங்குகிறது. எல்இடி பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள், ப்ளூடூத் இணைப்புடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், அலாய் சக்கரங்கள், எல்இடி டெயில்லைட்டை பெற்று வந்துள்ள இந்த பவுன்ஸ் தயாரிப்பு வாகனத்தில் 12-இன்ச் அலாய் சக்கரங்களும், அவற்றில் ட்யூப்லெஸ் டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

ஓலா எஸ்1-ஆ? அல்லது பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1-ஆ? சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சிறந்தது இதுதான்!!

780மிமீ உயரத்தில் தரையில் இருந்து ஓட்டுனர் இருக்கையை கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், 155மிமீ உயரத்தில் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மறுப்பக்கம் ஓலா எஸ்1-ஐ பொறுத்தவரையில், இது ஐரோப்பாவை சேர்ந்த எடெர்கோ ஆப்-ஸ்கூட்டரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இரட்டை-பீம் எல்இடி ஹெட்லேம்ப் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் தோற்றம் இந்தியர்கள் பலரை ஏற்கனவே கவர்ந்துவிட்டது.

ஓலா எஸ்1-ஆ? அல்லது பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1-ஆ? சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சிறந்தது இதுதான்!!

7-இன்ச்சில் வழங்கப்பட்டுள்ள இதன் தொடுத்திரை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் ஏகப்பட்ட இணைப்பு வசதிகளை கொண்டுள்ளது. எல்இடி இண்டிகேட்டர்கள், எல்இடி டெயில்லைட்டை கொண்டுள்ள ஓலா எஸ்1 ஸ்கூட்டரில் ஏகப்பட்ட ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. பிரேக்கிங் பணியை கவனிக்க எஸ்1 மாடலில் இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஓலா எஸ்1-ஆ? அல்லது பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1-ஆ? சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சிறந்தது இதுதான்!!

பேட்டரி, ரேஞ்ச் மற்றும் செயல்திறன்

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஐபி67 ரேட்டிங்-ஐ பெற்ற 2 kWh 48 வோல்ட் பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் பின் சக்கரத்திற்கு அருகே வழங்கப்பட்டுள்ள BLDC ஹப் மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ள இந்த பேட்டரி, 85கிமீ ரேஞ்சை சிங்கிள் சார்ஜில் வழங்கக்கூடியதாக உள்ளது. பந்தயம், ஈக்கோ மற்றும் பவர் என்ற 3 விதமான ரைடிங் மோட்களை கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 65kmph ஆகும்.

ஓலா எஸ்1-ஆ? அல்லது பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1-ஆ? சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சிறந்தது இதுதான்!!

இதனை காட்டிலும் சற்று ஆற்றல்மிக்க 2.98kWh பேட்டரி தொகுப்பு ஓலா எஸ்1-இல் பொருத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் மோட்டாருடன் அதிகப்பட்சமாக 8.5 கிலோவாட்ஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக சுமார் 120கிமீ தூரத்திற்கு இயங்கலாம் என ஓலா எலக்ட்ரிக் தெரிவிக்கிறது. எஸ்1 & எஸ்1 ப்ரோ என்கிற விதமான வேரியண்ட்களில் கொண்டுவரப்பட்டுள்ள ஓலாவின் இந்த முதல் இ-ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 90kmph ஆகும்.

ஓலா எஸ்1-ஆ? அல்லது பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1-ஆ? சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சிறந்தது இதுதான்!!

விலை

பவுன்ஸ் நிறுவனம் அதன் இன்ஃபினிட்டி இ1 ஸ்கூட்டரை பேட்டரி-சேவையாக என்ற தேர்வுடனும் விற்பனை செய்யவுள்ளது. மொத்த சேவை தொகுப்பும் அடங்கிய இன்ஃபினிட்டி இ1 இ-ஸ்கூட்டரின் விலை ரூ.68,999 ஆகவும், பேட்டரி-சேவையாக தேர்வில் வெறும் ரூ.36,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பேட்டரி-சேவையாக தேர்வில், வாடிக்கையாளர் பேட்டரி சேவை தொகுப்புகளை பெற கூடுதல் தொகையினை செலுத்த வேண்டி இருக்கும்.

ஓலா எஸ்1-ஆ? அல்லது பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1-ஆ? சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சிறந்தது இதுதான்!!

ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இவ்வாறான பேட்டரி-நீக்க தேர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை. மொத்த தொகுப்பும் அடங்கிய எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.85,099 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாநிலத்தை பொறுத்து அதிகப்பட்சமாக ரூ.1 லட்சம் வரையில் வேறுப்படுகிறது. எஸ்1 ப்ரோ வேரியண்ட்டின் விலை அதிகப்பட்சமாக ரூ.1.30 லட்சம் வரையில் உள்ளது.

ஓலா எஸ்1-ஆ? அல்லது பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1-ஆ? சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சிறந்தது இதுதான்!!

ட்ரைவ்ஸ்பார்க்கின் கருத்து

தோற்றத்தை பொறுத்தவரையில், இன்ஃபினிட்டி இ1 மட்டுமல்ல, தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எந்தவொரு இ-ஸ்கூட்டரை காட்டிலும் ஓலா எஸ்1 ஸ்டைலிஷானதாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி இந்த ஓலா ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்ப வசதிகளும் ஏராளம். விலையை முக்கியமாக கவனிப்பீர்கள் என்றால் பவுன்ஸ் மாடலின் பக்கம் செல்லலாம். ஏனெனில் இந்த ஸ்கூட்டரில் பேட்டரி-சேவையாக என்ற தேர்வும் வழங்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Comprehensive comparison between ola s1 and bounce infinity e1
Story first published: Tuesday, December 7, 2021, 23:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X