இரு சைலன்சர்கள் உடன் என்எஸ்200 பைக்கை இதற்குமுன் பார்த்திருக்கீங்களா!! கேரளத்தவரின் மாடிஃபிகேஷன் வேலைகள்...

பல்சர் என்எஸ்200, இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக உள்ள பஜாஜ் ஆட்டோவின் பிரதான நாக்டு ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளாகும்.

விற்பனையில் கேடிஎம் 200, யமஹா ஆர்15 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 உள்ளிட்ட பைக்குகளை எதிர்த்துவரும் இதனை வைத்துள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களில் கேரளாவை சேர்ந்த ஒருவரின் இரு எக்ஸாஸ்ட் குழாய்கள் பொருத்தப்பட்ட கஸ்டமைஸ்ட் என்எஸ்200 பைக்கை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்கப்போகிறோம்.

இரு சைலன்சர்கள் உடன் என்எஸ்200 பைக்கை இதற்குமுன் பார்த்திருக்கீங்களா!! கேரளத்தவரின் மாடிஃபிகேஷன் வேலைகள்...

HTRZ MODZ என்ற தனிப்பயனாக்க நிறுவனத்தின் மூலமாக இந்த என்எஸ்200 பைக்கிற்கு அப்டேட்கள் அனைத்தும் பின்பக்கத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான மோட்டார்சைக்கிள் மாடிஃபிகேஷன் பணிகளை மேற்கொள்வதிலும், கஸ்டம் ரேசிங் எக்ஸாஸ்ட் சிஸ்டங்களை பொருத்துவதிலும் HTRZ MODZ நிறுவனம் கைத்தேர்ந்தது.

இரு சைலன்சர்கள் உடன் என்எஸ்200 பைக்கை இதற்குமுன் பார்த்திருக்கீங்களா!! கேரளத்தவரின் மாடிஃபிகேஷன் வேலைகள்...

இந்த என்எஸ் பைக்கில் முக்கிய அம்சமாக இரு எக்ஸாஸ்ட் குழாய்கள் இருக்கைக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளன. அதேநேரம் வழக்கமான பின்பக்க அலாய் சக்கரத்தில் அகலமான டயர் பொருத்தப்பட்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.

இரு சைலன்சர்கள் உடன் என்எஸ்200 பைக்கை இதற்குமுன் பார்த்திருக்கீங்களா!! கேரளத்தவரின் மாடிஃபிகேஷன் வேலைகள்...

இந்த காம்பினேஷன் தான் பைக்கிற்கு அட்டகாசமான தோற்றத்தை வழங்குகின்றன. கூடுதல் அகலமான பின் டயர் கஸ்டம் ஸ்விங்கார்மில் பொருத்தப்பட்டுள்ளது. இவை தவிர்த்து என்எஸ்200-ன் வழக்கமான என்ஜின் உள்பட இந்த பைக்கின் மற்ற பாகங்கள் எதிலும் கை வைக்கப்படவில்லை.

இரு சைலன்சர்கள் உடன் என்எஸ்200 பைக்கை இதற்குமுன் பார்த்திருக்கீங்களா!! கேரளத்தவரின் மாடிஃபிகேஷன் வேலைகள்...

இதனால் பைக்கின் பின்பக்கத்தில் இவ்வளவு வேலைப்பாடுகள் நடைபெற்று இருப்பினும் டெயில்லைட் மாற்றம் இல்லாமல் உள்ளது. பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்கில் அதிகப்பட்சமாக 9750 ஆர்பிஎம்-ல் 24.5 பிஎஸ் மற்றும் 8000 ஆர்பிஎம்-ல் 18.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 199.5சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்படுகிறது.

https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2F1415416538766177%2Fvideos%2F392644874779022%2F

சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் உராய்வை தடுக்கும் பாஷ் உடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் நைட்ரக்ஸ் மோனோஷாக் அப்சார்பரும் வழங்கப்படுகிறது. இந்த 200சிசி பல்சர் பைக்கில் ப்ரேக்கிங் பணியினை முன் மற்றும் பின் சக்கரங்களில் உள்ள 300மிமீ மற்றும் 230மிமீ டிஸ்க்குகள் கவனிக்கின்றன.

இரு சைலன்சர்கள் உடன் என்எஸ்200 பைக்கை இதற்குமுன் பார்த்திருக்கீங்களா!! கேரளத்தவரின் மாடிஃபிகேஷன் வேலைகள்...

பஜாஜ் நிறுவனம் தற்போதைய பல்சர் என்எஸ்200 பைக்கை ஒரே ஒரு இரட்டை-டிஸ்க் வேரியண்ட்டில் மட்டும்தான் விற்பனை செய்கிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.37 லட்சமாக உள்ளது. இதன் ஸ்போர்ட்ஸ் ரக எடிசனாக பல்சர் ஆர்எஸ்200 பைக்கும் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Customized Bajaj Pulsar NS200 With Dual Underseat Exhausts. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X