ஹஸ்க்வர்னா பைக்கை வாங்கினால் இப்படி கஸ்டமைஸ்ட் செய்யனும்!! சும்மா தாறுமாறா இருக்கு...

இந்திய சந்தையில் சில வருடங்களுக்கு முன்புதான் அறிமுகமான ஹஸ்க்வர்னா விட்பிளேன் 250 பைக் பிரத்யேகமான மஞ்சள் நிறத்துடன் ஸ்போர்டியரான தோற்றத்திற்கு கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோக்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹஸ்க்வர்னா பைக்கை வாங்கினால் இப்படி கஸ்டமைஸ்ட் செய்யனும்!! சும்மா தாறுமாறா இருக்கு...

இந்தியாவில் தற்சமயம் விட்பிளேன் 250 மற்றும் ஸ்வார்ட்பிளேன் 250 என்ற இரு ஹஸ்க்வர்னா பைக்குகள் மட்டும்தான் விற்பனையில் உள்ளன. இவை இரண்டும் சிறிது வெவ்வேறான தோற்றத்தினால் வெவ்வேறான பயணங்களுக்கு பயன்படுத்தக்கூடியவைகளாக பார்க்கப்படுகின்றன.

ஹஸ்க்வர்னா பைக்கை வாங்கினால் இப்படி கஸ்டமைஸ்ட் செய்யனும்!! சும்மா தாறுமாறா இருக்கு...

ஸ்போர்டியர் தன்மையில் க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் உள்ளிட்டவற்றால் ஸ்வார்ட்பிளேன் பைக்கை காட்டிலும் விட்பிளேன் மாடலே முன்னிலை வகிக்கிறது. ஏனெனில் இவ்வாறான மாற்றங்களினால் விட்பிளேன் 250 பைக்கில் ரைடிங் நிலைபாடு வேறுப்படுகிறது.

இருப்பினும் வாடிக்கையாளர் ஒருவர் புதிய மஞ்சள் நிறத்தின் மூலமாக அவரது விட்பிளேன் 250 பைக்கை மேலும் மெருக்கேற்றியுள்ளார். ஸ்டாண்டர்ட் ஹஸ்க்வர்னா விட்பிளேன் 250 பைக் சில்வர் நிறத்தில் வழங்கப்படுகிறது. இந்த நிறம் மற்ற கருப்பு நிற பாகங்களுக்கு மிகவும் எடுப்பாக உள்ளது.

ஹஸ்க்வர்னா பைக்கை வாங்கினால் இப்படி கஸ்டமைஸ்ட் செய்யனும்!! சும்மா தாறுமாறா இருக்கு...

இருப்பினும் கவர்ச்சிகரமான தோற்றம், விட்பிளேன் மட்டுமின்றி 250சிசி ஹஸ்க்வர்னா பைக்குகள் இரண்டிலும் சற்று குறைவு என்பதை சொல்லிதான் ஆக வேண்டும். இதனால் தான் என்னவோ இந்த உரிமையாளர் அவரது விட்பிளேன் 250 பைக்கை கவர்ச்சிக்கரமான மஞ்சள் நிறத்திற்கு மாற்றியுள்ளார்.

ஹஸ்க்வர்னா பைக்கை வாங்கினால் இப்படி கஸ்டமைஸ்ட் செய்யனும்!! சும்மா தாறுமாறா இருக்கு...

இந்த மஞ்சள் நிறம் பெயிண்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளதா அல்லது வ்ராப்-ஆல் மூடப்பட்டுள்ளதா என்பது சரியாக தெரியவில்லை. அது எதுவாக இருப்பினும் ரிசல்ட் அருமையானதாக வந்துள்ளது. சில்வர் நிறத்தைபோல் இந்த மஞ்சள் நிறமும் கருப்பு நிற என்ஜின், அலாய் சக்கரங்கள், ஃப்ரேம், யுஎஸ்டி முன்பக்க ஃபோர்க்குகள் மற்றும் ஸ்விங்கார்ம் உடன் கச்சிதமாக பொருந்துகிறது.

ஹேண்டில்பாரில், புதியதாக வாங்கப்பட்ட கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் பின்பக்கத்தில் டயர் கட்டிப்பிடித்திருப்பான் உடன் சாரி பாதுகாப்பான் புதியதாக பொருத்தப்பட்டுள்ளது. இவை தவிர்த்து பைக்கின் 248.76சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜினிலோ அல்லது சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் அமைப்புகளிலோ மாற்றமும் எதுவும் கொண்டுவரப்பட்டுள்ளது போல் தெரியவில்லை.

ஹஸ்க்வர்னா பைக்கை வாங்கினால் இப்படி கஸ்டமைஸ்ட் செய்யனும்!! சும்மா தாறுமாறா இருக்கு...

கேடிஎம் 250சிசி பைக்குகளின் என்ஜின் அமைப்பை பெற்றுவரும் ஹஸ்க்வர்னா விட்பிளேன் 250 பைக்கின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.86 லட்சம் என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Husqvarna Vitpilen 250 Looks Sportier in Custom Yellow Colour
Story first published: Wednesday, February 17, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X