டக்கார் ராலி முதல் ஸ்டேஜ் பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய வீரர்கள்!

டக்கார் ராலி முதல் நாள் (ஸ்டேஜ்-1) பந்தயத்தை மூன்று இந்திய வீரர்களும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். டக்கார் ராலியில் முதல் ஸ்டேஜ் பந்தயத்தின் முடிவுகள் குறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டக்கார் ராலி முதல் ஸ்டேஜ் பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய வீரர்கள்!

2021ம் ஆண்டுக்கான டக்கார் ராலி பந்தயம் சவூதி அரேபியாவில் துவங்கி இருக்கிறது. முதல் ஸ்டேஜ் பந்தயமானது ஜெத்தா நகரில் இருந்து பிஷா வரையில் 623 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தது.

இதில், 277 கிலோமீட்டர் தூரம் ஸ்பெஷல் ஸ்டேஜ் போட்டியாக இருந்தது. ஸ்பெஷல் ஸ்டேஜ் பகுதியானது 48 சதவீதம் மணற்பாங்கான பகுதியாகவும், 48 சதவீதம் மண் சார்ந்த பகுதியாகவும் இருந்தது.

டக்கார் ராலி முதல் ஸ்டேஜ் பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய வீரர்கள்!

முதல் நாளான நேற்றைய பந்தயமே அனைத்து வீரர்களுக்கும் மிக சவாலான பாதையாக அமைந்த நிலையில், இந்திய வீரர்கள் தீரத்துடன் செயல்பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இந்த ஸ்டேஜில் விரைவாக செல்ல வாய்ப்பு கிடைத்தாலும், முன்னால் செல்லும் வீரரின் வாகனம் புழுதியை கிளப்பியதால், பின்தொடர்ந்து செல்லும் வீரர்கள் சிரமத்தை சந்தித்தனர்.

டக்கார் ராலி முதல் ஸ்டேஜ் பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய வீரர்கள்!

பந்தயத்தை துவங்குவதற்கான இடத்தை உறுதி செய்வதற்கான புரோலாக் பிரிவில் முதல் இடம் பிடித்த மான்ஸ்ட்டர் எனெர்ஜி ஹோண்டா ராலி டீம் அணி வீரர் ரிக்கி பிராபெக் ஸ்பெஷல் ஸ்டேஜில் பின் தங்கினார்.

டக்கார் ராலி முதல் ஸ்டேஜ் பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய வீரர்கள்!

முதல் ஸ்டேஜ் பந்தயத்தில் ரெட்புல் கேடிஎம் ஃபேக்டரி டீம் அணி வீரர் டோபி பிரைஸ் முன்னிலை பெற்றார். டக்கார் ராலியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் பெற்ற இவர் 277 கிமீ தூரத்திற்கான ஸ்பெஷல் ஸ்டேஜை 3 மணி 18 நிமிடங்கள் 26 நொடிகளில் முதல் ஸ்டேஜ் பந்தயத்தை நிறைவு செய்து அசத்தினார்.

டக்கார் ராலி முதல் ஸ்டேஜ் பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய வீரர்கள்!

மான்ஸ்ட்டர் எனெர்ஜி ஹோண்டா ராலி டீம் வீரர் கெவின் பெனவிட்ஸ் இரண்டாம் இடத்தை பிடித்தார். 31 வினாடிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தை இவர் இழந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். ரெட்புல் கேடிஎம் ஃபேக்டரி டீம் வீரர் மேத்தியாஸ் வாக்னர் மூன்றாவது இடத்தை பிடித்தார். ஒரு வினாடி வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தை இழந்தார்.

டக்கார் ராலி முதல் ஸ்டேஜ் பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய வீரர்கள்!

ஷெர்கோ ஃபேக்டரி அணி சார்பில் பங்கேற்றுள்ள இந்திய அணி வீரர் ஹரீத் நோவா முதல் ஸ்டேஜ் பந்தயத்தில் 31வது இடத்தை பிடித்தார். 3 மணி 54 நிமிடங்கள் 35 வினாடிகளில் முதல் ஸ்டேஜ் பந்தயத்தை நிறைவு செய்தார். முதல் இடத்தை பிடித்த டோபி பிரைஸைவிட 53 வினாடிகள் வித்தியாசத்தில் இவர் நிறைவு செய்தார்.

டக்கார் ராலி முதல் ஸ்டேஜ் பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய வீரர்கள்!

டிவிஎஸ் ஸ்பான்சர் செய்து வரும் ஷெர்கோ ராலி டீம் அணி வீரர் லாரென்ஸோ சான்டோலினோ மற்றும் ரூய் கான்காவ்ல்வ்ஸ் ஆகியோர் முதல் ஸ்டேஜ் போட்டியில் முறையே 5வது மற்றும் 27வது இடங்களை பிடித்தனர்.

டக்கார் ராலி முதல் ஸ்டேஜ் பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய வீரர்கள்!

இந்தியாவின் முன்னணி ராலி பந்தய வீரரும், ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி சார்பில் பங்கேற்றுள்ள சி.எஸ்.சந்தோஷ் முதல் ஸ்டேஜ் போட்டியில் 42வது இடத்தை பிடித்தார். முதல் ஸ்டேஜ் பந்தயத்தின் ஸ்பெஷல் ஸ்டேஜ் தூரத்தை 4 மணி 8 நிமிடங்கள் 21 வினாடிகளில் நிறைவு செய்தார். ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணியின் சார்பில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்களான ஜாக்கியம் ரோட்ரிகஸ் மற்றும் செபாஸ்டியன் பஹ்லர் ஆகியோர் முறையே 23 மற்றும் 29வது இடங்களை பிடித்தனர்.

டக்கார் ராலி முதல் ஸ்டேஜ் பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய வீரர்கள்!

தனிநபர்களுக்கான மல்லே மோட்டோ க்ளாஸ் என்ற பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய வீரர் ஆசிஷ் ராவ்ரேன் முதல் ஸ்டேஜ் போட்டியில் ஒட்டுமொத்த பைக் பந்தய பிரிவில் 84து இடத்தை பிடித்தார். எனினும், தனிநபர் பிரிவில் இவர் 24வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. 6 மணி 8 நிமிடங்கள் 27 வினாடிகளில் முதல் ஸ்டேஜ் போட்டியை நிறைவு செய்தார்.

டக்கார் ராலி முதல் ஸ்டேஜ் பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய வீரர்கள்!

டக்கார் ராலியின் முதல் ஸ்டேஜ் போட்டியில் கார் பிரிவில் டொயோட்டா கஸூ ரேஸிங் அணி வீரர் நஸீர் அல் அதியாய மேத்யூ பாமெல் ஜோடி முதல் இடத்தையும், டிரக் பிரிவில் சியார்ஹெ வியாஸோவிக் முதல் இடத்தையும், சிறப்பு வாகன பிரிவில் ஆஸ்டின் ஜோன்ஸ்0/ குஸ்டாவ் குகெல்மின் ஜோடி முதல் இடத்தையும், க்வாட் வாகன பிரிவில் அலெக்ஸான்ரி கிரவுட் முதல் இடத்தையும் பிடித்தனர்.

Most Read Articles
English summary
The Stage 1 of the 2021 Dakar Rally has concluded. All three Indian riders participating in the world's toughest rally has managed to complete the stage successfully. However, owing to the harsh terrain and tough conditions some riders have retired from the race.
Story first published: Monday, January 4, 2021, 10:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X