Just In
- 3 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 4 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 5 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 6 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டக்கார் ராலி ஸ்டேஜ் 2 முடிவுகள்... 3வது ஸ்டேஜுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்!
டக்கார் ராலியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். நேற்று நடந்த இரண்டாவது ஸ்டேஜ் பந்தயத்தை இந்திய வீரர்கள் சிறப்பாக நிறைவு செய்து அடுத்த கட்ட பந்தயத்திற்கு முன்னேறி உள்ளனர்.

டக்கார் ராலியின் ஸ்டேஜ்-2 பந்தயம் நேறறு நடந்தது. பிஷா என்ற இடத்தில் இருந்து வதி அத் தவாசிர் வரையில் இந்த பந்தயம் நடந்தது. பெரும்பான்மையான பகுதி மணல் மடிப்புகள் நிறைந்த பாலைவனப் பகுதியாக அமைந்தது. மொத்தம் 685 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்த இந்த பந்தயத்தில் 457 கிமீ தூரம் ஸ்பெஷல் ஸ்டேஜ் வழித்தடமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஸ்பெஷல் ஸ்டேஜ் வழித்தடத்தில் 82 சதவீதம் மணல்பாங்கான பகுதியாக அமைந்தது. 13 சதவீதம் மணல் மடிப்புகள் நிறைந்ததாக இருந்ததாகவும், 5 சதவீதம் மண் சார்ந்த வழித்தடமாக அமைந்தது. ஆரம்பத்திலேயே மணல் மடிப்புகளை கொண்ட பாலைவனமாக இருந்ததால், அதனை தாண்டுவதில் வீரர்கள் பல சவால்களை சந்தித்தனர்.

முதல் ஸ்டேஜ் பந்தயத்தை போலவே, இரண்டாவது ஸ்டேஜ் பந்தயமும் மிக சவாலாக இருந்ததால், பல வீரர்கள் விலகினர். ஆனால், இந்தியாவிலிருந்து பங்கேற்றுள்ள பைக் பந்தய வீரர்கள் இரண்டாவது ஸ்டேஜையும் வெற்றிகரமாக நிறைவு செய்து, அடுத்து மூன்றாவது ஸ்டேஜ் போட்டிக்கு முன்னேறினர்.

டக்கார் ராலியின் இரண்டாவது ஸ்டேஜ் பந்தயத்தில் பைக் பிரிவில் மான்ஸ்ட்டர் எனெர்ஜி ஹோண்டா ராலி டீம் வீரர் ஜோன் பரேடா முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை முதல் ஸ்டேஜ் போட்டியில் அதே அணியின் மற்றொரு வீரரான ரிக்கி பிராபெக் பிடித்தார். முதல் ஸ்டேஜ் போட்டியில் இவர் முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்தை ராக்ஸ்டார் எனெர்ஜி ஹஸ்க்வர்னா ஃபேக்டரி ரேஸிங் அணி வீரர் பாப்லோ குயின்டானில்லா மூன்றாவது இடத்தை பிடித்தார்.

இரண்டாவது ஸ்டேஜ் பந்தயத்தில் ஷெர்கோ ஃபேக்டரி ராலி டீம் சார்பில் பங்குகொண்டுள்ள இந்திய வீரரான ஹரீத் நோவா 32வது இடத்தை பிடித்தார். இவர் ஸ்பெஷல் ஸ்டேஜ் பகுதியை 4 மணி 56 நிமிடங்கள் 5 வினாடிகளில் கடந்தார். முதல் இடத்தை பிடித்தவருடன் ஒப்பிடும்போது 38 நிமிடங்கள் 9 வினாடிகள் வித்தியாசத்தில் கடந்திருக்கிறார்.

இந்தியாவின் முன்னணி ராலி பந்தய வீரரும், ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி சார்பில் பங்குகொண்டுள்ள சி.எஸ்.சந்தோஷ் 36வது இடத்தை பிடித்தார். ஸ்பெஷல் ஸ்டேஜ் வழித்தடத்தை 5 மணி 2 நிமிடங்கள் 17 வினாடிகளில் எட்டினார். இரண்டாவது ஸ்டேஜ் பந்தயம் குறித்து சி.எஸ்.சந்தோஷ் கூறுகையில்,"இன்றைய போட்டியை நேர்மறை எண்ணத்துடனும், ஊக்கத்துடனும் துவங்கினேன். மணல் மடிப்புகளில் எனது பைக் சிறப்பானதாக இருந்தது. இந்த ஸ்டேஜ் மனதுக்கு நிறைவாக அமைந்தது," என்று கூறி இருக்கிறார்.

ஹீரோ மோட்டோகார்ப் அணியின் மற்ற வெளிநாட்டு வீரர்களான ஜாக்கம் ரோட்ரிக்கஸ் 12வது இடத்தையும், செபாஸ்டியன் பஹ்லர் 14வது இடத்தையும் பிடித்து அசத்தினர். இந்த முறை ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்கள் சிறப்பான முன்னேற்றத்தை பெற்று வருகின்றனர். தனிநபர்களுக்கான பைக் பிரிவில் பங்குகொண்டுள்ள இந்திய வீரர் ஆசிஷ் ராவ்ரேன் 85வது இடத்தை பிடித்தார்.