டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க! புதிய தலைமுறை RE Classic 350 பைக்கை காத்திருந்து பெற்ற வாடிக்கையாளர்கள்!

Royal Enfield நிறுவனம் புதிய தலைமுறை Classic 350
பைக்கை தனது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்க ஆரம்பித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல் மற்றும் வீடியோவை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க! புதிய தலைமுறை Royal Enfield Classic 350 பைக்கை காத்திருந்து பெற்ற வாடிக்கையாளர்கள்!

மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் Royal Enfield நிறுவனத்தின் புதிய தலைமுறை Classic 350 பைக் நேற்றைக்கு முன் தினம் (செப்டம்பர் 1) விற்பனைக்கு அறிமுகமானது. இதனைத் தொடர்ந்து, புதிய ஸ்டைல் மற்றும் அம்சங்களுடன் உருவாகிய இருசக்கர வாகனத்தை நிறுவனம் அதன் விற்பனையாளர் ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் களமிறங்கியது.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க! புதிய தலைமுறை Royal Enfield Classic 350 பைக்கை காத்திருந்து பெற்ற வாடிக்கையாளர்கள்!

இதுகுறித்த தகவல் வெளியாகி குறுகிய இடைவெளியில் தற்போது விற்பனையாளர்கள் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கை டெலிவரி கொடுக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பைக்கின் அறிமுகத்தை முன்னிட்டு டீலர்கல் சிலர் வாடிக்கையாளர்களிடம் இருந்து புக்கிங்கைப் பெற தொடங்கினர். இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே புக்கிங் செய்து காத்திருந்தவர்களுக்கு புத்தம் புதிய கிளாசிக் 350 வழங்கப்பட்டு வருகின்றது.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க! புதிய தலைமுறை Royal Enfield Classic 350 பைக்கை காத்திருந்து பெற்ற வாடிக்கையாளர்கள்!

இதுகுறித்த தகவல் மற்றும் தற்போது வெளியாக தொடங்கியிருக்கின்றன. முந்தை தலைமுறை கிளாசிக் 350 இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாகும். இதுமாதிரியான வரவேற்பை கிளாசிக் 350 பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முந்தைய தலைமுறை ஒட்டுமொத்தமாக 2021 நிதியாண்டில் 3,61,140 யூனிட் வரை விற்பனையானது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க! புதிய தலைமுறை Royal Enfield Classic 350 பைக்கை காத்திருந்து பெற்ற வாடிக்கையாளர்கள்!

ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கை தனது புதிய 'J' பிளாட்பாரத்தை பயன்படுத்தி கட்டமைத்திருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தை பயன்படுத்தியே மீட்டியோர் 350 பைக்கையும் நிறுவனம் உருவாக்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவே 'ஜே' பிளாட்பாரத்தில் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் இருசக்கர வாகனம் ஆகும்.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க! புதிய தலைமுறை Royal Enfield Classic 350 பைக்கை காத்திருந்து பெற்ற வாடிக்கையாளர்கள்!

ஜே பிளாட்பாரத்தை பயன்படுத்தி இருப்பதால் மீட்டியோர் 350 இல் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை கிளாசிக் 350-யிலும் இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் குறித்த தகவலை வழங்கும் வசதி, ப்யூவல் கேஜ், நடுத்தர டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் அலாய் வீல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க! புதிய தலைமுறை Royal Enfield Classic 350 பைக்கை காத்திருந்து பெற்ற வாடிக்கையாளர்கள்!

இத்துடன், எல்இடி பேனல், ப்ளூடூத் இணைப்பு, யுஎஸ்பி சார்ஜர், வட்ட வடிவ பின் பக்க இருக்கை, 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட ப்யூவல் டேங்க் உள்ளிட்ட அம்சங்களும் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி புதிய வகையிலான நிற தேர்வுகளாலும் இப்பைக் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க! புதிய தலைமுறை Royal Enfield Classic 350 பைக்கை காத்திருந்து பெற்ற வாடிக்கையாளர்கள்!

அந்தவகையில், Chrome Red , Chrome Bronze, Dark Stealth Black, Dark Gunmetal Grey, Signals Marsh Grey, Signals Sandstorm, Halcyon Green, Halcyon Black, Halcyon Grey, Redditch Green மற்றும் Redditch Grey ஆகிய நிற தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Image Courtesy: Pratip Vlogs

இத்துடன், ஐந்து ட்ரிம்களில் இப்பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. Redditch, Halcyon, Signals, Dark மற்றும் Chrome ஆகிய ட்ரிம்களிலேயே புதிய தலைமுறை கிளாசிக் 350 விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், உயர்நிலை தேர்வாக க்ரோம் ட்ரிம் இருக்கின்றது. இதன் விலை ரூ. 2.15 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க! புதிய தலைமுறை Royal Enfield Classic 350 பைக்கை காத்திருந்து பெற்ற வாடிக்கையாளர்கள்!

அதேவேலையில் ஆரம்ப நிலை வேரியண்டான ரெட்டிட்ச் விலை ரூ. 1.84 லட்சமாக இருக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இப்பைக்கில் நிறுவனம் 349சிசி சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 20 எச்பி மற்றும் 28 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் இந்த எஞ்ஜினில் புதிய வகை ஷாப்ட் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க! புதிய தலைமுறை Royal Enfield Classic 350 பைக்கை காத்திருந்து பெற்ற வாடிக்கையாளர்கள்!

இது அதிகப்படியான அதிர்வை கட்டுப்படுத்த உதவும். ஆகையால், பழைய தலைமுறைகளைக் காட்டிலும் மிக குறைவான அதிர்வே புதிய தலைமுறை கிளாசிக் 350இல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், மிக சிறந்த இயக்க அனுபவத்தை பெற முடியும் என்பது தெளிவாக தெரிகின்றது.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க! புதிய தலைமுறை Royal Enfield Classic 350 பைக்கை காத்திருந்து பெற்ற வாடிக்கையாளர்கள்!

இத்துடன் மேலும் சிறந்த ரைடு அனுபவத்திற்காக பைக்கின் முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி டிஸ்க் மற்றும் இரட்டை ஏபிஎஸ் வசதி வழங்கப்படுகின்றது. இவை மிக சிறந்த பிரேக்கிங் வசதியை வழங்க உதவும்.

Most Read Articles
English summary
Dealers started royal enfield new gen classic 350 delivery
Story first published: Friday, September 3, 2021, 15:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X