டோமினோஸ் பீட்சாக்களை ஆர்டர் செஞ்சா, ரிவோல்ட் இ-பைக் டெலிவிரிக்கு வரும்!! கூட்டணியில் விளைந்த அருமையான விஷயம்

டெலிவிரி பணிகளுக்கு டோமினோஸ் நிறுவனம் ரிவோல்ட்டின் ஆர்வி300 எலக்ட்ரிக் பைக்கை பயன்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டோமினோஸ் பீட்சாக்களை ஆர்டர் செஞ்சா, ரிவோல்ட் இ-பைக் டெலிவிரிக்கு வரும்!! கூட்டணியில் விளைந்த அருமையான விஷயம்

பீட்சா உணவகங்களின் ஒருங்கிணைப்பு நிறுவனமாக விளங்கும் டோமினா, எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான, ரத்தன் இந்தியாவின் ரிவோல்ட் மோட்டார்ஸ் உடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது.

டோமினோஸ் பீட்சாக்களை ஆர்டர் செஞ்சா, ரிவோல்ட் இ-பைக் டெலிவிரிக்கு வரும்!! கூட்டணியில் விளைந்த அருமையான விஷயம்

இந்த கூட்டணியின்படி தற்போதைக்கு உள்ள ரிவோல்ட் மோட்டார்ஸின் ஆர்வி300 எலக்ட்ரிக் பைக்குகளை சொந்தமாக வாங்கியுள்ளது. அவற்றை கஸ்டமைஸ்ட் செய்து டெலிவிரி பணிகளுக்காக பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளதாக ரிவோல்ட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

டோமினோஸ் பீட்சாக்களை ஆர்டர் செஞ்சா, ரிவோல்ட் இ-பைக் டெலிவிரிக்கு வரும்!! கூட்டணியில் விளைந்த அருமையான விஷயம்

தேவையான ஓட்டுனர்களை தேர்வு செய்த பிறகு ரிவோல்டின் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் தங்களது டெலிவிரி பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என டோமினோஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டோமினோஸ் பீட்சாக்களை ஆர்டர் செஞ்சா, ரிவோல்ட் இ-பைக் டெலிவிரிக்கு வரும்!! கூட்டணியில் விளைந்த அருமையான விஷயம்

இதுகுறித்து ரத்தன் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஞ்சலி ரத்தன் கூறுகையில், இந்த கூட்டணியில் டோமினோஸ்வுடன் கைகோர்ப்பதில் ரிவோல்ட் மகிழ்ச்சியடைகிறது. இது சுற்றுச்சூழலுக்கு அர்த்தமுள்ளதாக மட்டுமல்லாமல், நிறுவனத்திற்கு பெரும் செலவையும் சேமித்து கொடுப்பதாக உள்ளது.

டோமினோஸ் பீட்சாக்களை ஆர்டர் செஞ்சா, ரிவோல்ட் இ-பைக் டெலிவிரிக்கு வரும்!! கூட்டணியில் விளைந்த அருமையான விஷயம்

இந்த ரிவோல்ட் ஆர்வி300 இ-பைக்குகளை டோமினா பீட்சாகளின் முதன்மை உரிமையை கொண்டுள்ள, உணவு சேவை நிறுவனமான நொய்டாவை சேர்ந்த ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ் மேற்கொள்ளவுள்ளது. பீட்சா டெலிவிரிக்கு ஏற்ப இந்த எலக்ட்ரிக் பைக்குகள் மாற்றப்பட உள்ளன.

டோமினோஸ் பீட்சாக்களை ஆர்டர் செஞ்சா, ரிவோல்ட் இ-பைக் டெலிவிரிக்கு வரும்!! கூட்டணியில் விளைந்த அருமையான விஷயம்

இதனால் பைக்கின் பின்பக்கத்திலோ, அல்லது பக்கவாட்டில் பீட்சா பாக்ஸை வைத்து செல்ல பெட்டகம் வழங்கப்படும். அதேநேரம் எலக்ட்ரிக் வாகனம் என்பதை வெளிக்காட்டும் வகையில் பைக்கை சுற்றிலும் சில கிராஃபிக்ஸ் வழங்கப்படலாம்.

டோமினோஸ் பீட்சாக்களை ஆர்டர் செஞ்சா, ரிவோல்ட் இ-பைக் டெலிவிரிக்கு வரும்!! கூட்டணியில் விளைந்த அருமையான விஷயம்

வரும் வருடங்களில் டெலிவிரி பைக் சந்தை எலக்ட்ரிக் தான் ஆதிக்கம் செலுத்தும் என நம்பும் ரிவோல்ட், அதற்கு இதுதான் முதல்படி எனவும் கூறுகிறது. அரசாங்கங்களின் சில சலுகைகள் மற்றும் தயாரிப்பு செலவு குறைந்துள்ளதால் இந்த எலக்ட்ரிக் பைக்கின் விலையும் குறைந்துள்ளது.

டோமினோஸ் பீட்சாக்களை ஆர்டர் செஞ்சா, ரிவோல்ட் இ-பைக் டெலிவிரிக்கு வரும்!! கூட்டணியில் விளைந்த அருமையான விஷயம்

இதனால் பசுமையான போக்குவரத்து மட்டுமின்றி பொருளாதாரமும் சிக்கனமாக நடைபெறும். ரிவோல்ட் ஆர்வி300 எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.95 ஆயிரம் அளவில் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ரிவோல்ட் #revolt
English summary
Domino's to replace fleet with Revolt RV300 e-bikes.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X