டுகாட்டியின் புதிய அட்வென்ச்சர் பைக்... டெசர்ட் எக்ஸ்!! உலக வெளியீடு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவதிலும் குறிப்பிடத்தக்க அளவில் கவனத்தை பெற்றுள்ள டுகாட்டி டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் வருகிற டிச.9ஆம் தேதி வெளியீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டுகாட்டியின் புதிய அட்வென்ச்சர் பைக்... டெசர்ட் எக்ஸ்!! உலக வெளியீடு தேதி அறிவிப்பு!

பீரிமியம் மோட்டார்சைக்கிள் பிராண்டான டுகாட்டி அதன் டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிளை 2020 துபாய் எக்ஸ்போவில் காட்சிப்படுத்த உள்ளது. இந்த நிலையில் தற்போது இதன் வெளியீடு தேதி டிசம்பர் 9 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியில் துபாயில் இருந்து உலகளவில் வெளியீடு செய்யப்பட உள்ள புதிய டுகாட்டி பைக்கின் பிரீமியர் வீடியோ ஒன்று வெளியிடப்பட உள்ளது.

டுகாட்டியின் புதிய அட்வென்ச்சர் பைக்... டெசர்ட் எக்ஸ்!! உலக வெளியீடு தேதி அறிவிப்பு!

இந்த உலக பிரீமியர் நிகழ்ச்சி துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கோபுர கட்டிடத்தில் நடத்தப்பட உள்ளது. டுகாட்டி முதன்முதலாக டெசர்ட் எக்ஸ்-ஐ கான்செப்ட் பைக்காக 2019இல் காட்சிப்படுத்தியது. இந்த புதிய டுகாட்டி பைக்கின் டிசைன் 1990களின் துவக்கத்தில் பயன்பாட்டில் இருந்த டக்கர் ராலி மோட்டார்சைக்கிளான காகிவா எலஃபண்ட் 900ஐஇ-இன் தோற்றத்தால் கவரப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

டுகாட்டியின் புதிய அட்வென்ச்சர் பைக்... டெசர்ட் எக்ஸ்!! உலக வெளியீடு தேதி அறிவிப்பு!

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 மோட்டார்சைக்கிளின் வடிவமைப்பிற்கு பயன்படுத்தப்பட்ட ஃப்ரேமில் தான் இந்த புதிய மோட்டார்சைக்கிளும் தயாரிக்கப்படுகிறது. டுகாட்டி 2019இல் வெளியீடு செய்த டெசர்ட் எக்ஸ் கான்செப்ட் மாடலுக்கு பல தரப்பட்ட வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வரவேற்பே டுகாட்டியை தொடர்ந்து இந்த கான்செப்ட்டை தயாரிப்பு வெர்சனில் கொண்டுவர ஊக்குவித்துள்ளது.

டுகாட்டியின் புதிய அட்வென்ச்சர் பைக்... டெசர்ட் எக்ஸ்!! உலக வெளியீடு தேதி அறிவிப்பு!

கான்செப்ட் மாடலின் அதே சேசிஸில் இந்த தயாரிப்பு மாடலும் உருவாக்கப்படுமா அல்லது முற்றிலும் வேறுப்பட்ட புதிய ஒன்றில் இருந்து கொண்டுவரப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை. இதனை அறிய இன்னும் சில நாட்களுக்கு காத்திருந்தாக வேண்டும். ஒரிஜினல் கான்செப்ட் மாடலில் 1,079சிசி இரட்டை-வால்வு, ஏர்-கூல்டு, டெஸ்மோட்ரோமிக் எல்-இரட்டை என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது.

டுகாட்டியின் புதிய அட்வென்ச்சர் பைக்... டெசர்ட் எக்ஸ்!! உலக வெளியீடு தேதி அறிவிப்பு!

அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 86 எச்பி மற்றும் 4,750 ஆர்பிஎம்-இல் 88 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. இத்தகைய ஆற்றல் அளவுகளுடன் டுகாட்டி டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் பல அட்வென்ச்சர் பைக்குகளை முந்த முடியும். இருப்பினும் இத்தாலியன் பிராண்ட்டான டுகாட்டி இந்த பைக்கில் புதிய என்ஜின் அமைப்பை வழங்கவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டுகாட்டியின் புதிய அட்வென்ச்சர் பைக்... டெசர்ட் எக்ஸ்!! உலக வெளியீடு தேதி அறிவிப்பு!

இந்த வகையில் டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக்கில் 937சிசி டெஸ்டஸ்ட்ரெட்டா எல்-இரட்டை நீர்-குளிர்விப்பான் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 950 பைக்கில் பொருத்தப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-இல் 113 எச்பி மற்றும் 7,750 ஆர்பிஎம்-இல் 96.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டுகாட்டியின் புதிய அட்வென்ச்சர் பைக்... டெசர்ட் எக்ஸ்!! உலக வெளியீடு தேதி அறிவிப்பு!

கான்செப்ட் மாடலின் 1000சிசி அளவிற்கு இல்லை என்றாலும், ஒரு பக்கா அட்வென்ச்சர் பைக்கிற்கு தேவையான ஆற்றலை இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியது. டுகாட்டியின் மற்ற மல்டிஸ்ட்ராடா பைக்குகளில் வழங்கப்படும் 19-இன்ச் சக்கரங்களை போல் அல்லாமல், 21-இன்ச்சில் இந்த பைக் முன் சக்கரத்தை பெற்று வரவுள்ளது. ஆனால் பின் சக்கரம் அளவில் சிறியதாக 18-இன்ச்சில் வழங்கப்பட உள்ளன.

கான்செப்ட் மாடலின் பல-ஸ்போக் சக்கரங்கள் ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற அகலமான டயர்களுடன் விரைவில் வெளியீடு செய்யப்பட உள்ள தயாரிப்பு வெர்சனிலும் பொருத்தப்பட உள்ளன. முன்சக்கரத்தில் இரட்டை டிஸ்க் ப்ரேக்குகளும், பின்சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க் ப்ரேக்கும் வழங்கப்படலாம். தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக், கான்செப்ட் மாடலை ஒத்திருக்கும் என்பது உறுதி.

டுகாட்டியின் புதிய அட்வென்ச்சர் பைக்... டெசர்ட் எக்ஸ்!! உலக வெளியீடு தேதி அறிவிப்பு!

இந்த புதிய டுகாட்டி பைக்கின் முன்பக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்களுடன் வட்ட வடிவ இரட்டை எல்இடி ஹெட்லேம்ப்கள், உயரமாக பொருத்தப்பட்ட அகலமான ஹேண்டில்பார் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கிறோம். மற்ற டிசைன் பாகங்கள் மற்றும் வசதிகளாக, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பருத்த பெட்ரோல் டேங்க், தாழ்வான ஓட்டுனர் இருக்கை, தடிமனான என்ஜின் பாதுகாப்பான் மற்றும் மேல்நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் முதலியவை அடங்குகின்றன.

அறிமுகத்திற்கு பிறகு டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக்கிற்கு சர்வதேச சந்தைகளில் கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர், ட்ரையம்ப் டைகர் 900 ராலி ப்ரோ உள்ளிட்டவை போட்டியாக விளங்கவுள்ளன. இதற்கிடையில் முன்னதாக நவீன தொழிற்நுட்ப அம்சங்களுடன் பனிகளே வி4 சூப்பர்பைக்கை கடந்த நவம்பர் மாத இறுதியில் டுகாட்டி வெளியீடு செய்தது.

டுகாட்டியின் புதிய அட்வென்ச்சர் பைக்... டெசர்ட் எக்ஸ்!! உலக வெளியீடு தேதி அறிவிப்பு!

மோட்டோ ஜிபி பந்தய பைக்குகளுக்கு இணையான தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் இயக்க ஆற்றலுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய டுகாட்டி பனிகளே வி4 கால மாற்றத்திற்கு தக்கவாறு தற்போது மீண்டும் பல்வேறு கூடுதல் தொழிற்நுட்ப அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. 2022 மாடலாக வெளிவர இருக்கும் இந்த சூப்பர் பைக் கையாளுமையிலும், வேகத்திலும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati at Expo 2020 Dubai with the world preview of the DesertX .
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X