இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா!! டுகாட்டி தயாரிக்கிறது

ஸ்க்ராம்ப்ளர் டெசார்ட் எக்ஸ் கான்செப்ட்டின் விற்பனை மாடல் வருகிற 2021 டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாக டுகாட்டி அறிவித்துள்ளது. இந்த புதிய டுகாட்டி பைக்கில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா!! டுகாட்டி தயாரிக்கிறது

2019ஆம் ஆண்டில் நடைபெற்ற EICMA கண்காட்சியில் டுகாட்டி நிறுவனம் சார்பில் ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் எக்ஸ் என்ற பெயரிலான மோட்டார்சைக்கிள் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அதன்பின் இந்த கான்செப்ட் மாடலை பற்றி டுகாட்டி மூச்சு விடாமல் இருந்தது.

இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா!! டுகாட்டி தயாரிக்கிறது

ஆனால் தற்போது இந்த மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு இறுதிக்குள் உலகளவில் வெளியிடப்படும் என டுகாட்டி அறிவித்துள்ளது. இவ்வளவு பெரிய இடைவெளிக்கு காரணம் நிச்சயமாக கொரோனா வைரஸ் தான். எப்படியோ இந்த அட்டகாசமான தோற்றம் கொண்ட ஆஃப்-ரோடு பைக்கை தயாரிக்கும் முடிவிற்கு டுகாட்டி வந்துவிட்டது.

பாரிஸ்-டக்கார் போன்ற 1990களில் நடைபெற்ற ராலி போட்டிகளில் போட்டியாளர்கள் பயன்படுத்திய டுகாட்டியின் ஐகானிக் மோட்டார்சைக்கிள்களின் தோற்றத்தால் கவரப்பட்டு, இந்த டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் கான்செப்ட் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த பைக்கை நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதாக தயாரிப்பதாக டுகாட்டி தெரிவித்துள்ளது.

இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா!! டுகாட்டி தயாரிக்கிறது

அதேநேரம் இந்த டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் எந்தவொரு சாலையிலும் இயங்கும் திறனையும் பெறலாம் என கூறப்படுகிறது. இதனால் இந்த புதிய டுகாட்டி பைக் தோற்றத்தால் மட்டுமில்லாமல், உண்மையான ஆஃப்-ரோடு திறன்களினாலும் வாடிக்கையாளர்களை கவர உள்ளதாக இப்போதே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா!! டுகாட்டி தயாரிக்கிறது

டிசைனை பொறுத்தவரையில், 2019 EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த டுகாட்டி டெசர்ட் எக்ஸ் கான்செப்ட் மாடல் நன்கு நிமிர்ந்த தோற்றத்தில், ஆஃப்-ரோட்டிற்கான உடலமைப்பை கணக்கச்சிதமாக கொண்டிருந்தது. பைக்கின் முன்பக்கத்தில் வட்ட வடிவில் இரட்டை எல்இடி ஹெட்லைட்களுடன், பெரிய அளவிலான எதிர்காற்று தடுப்பு கண்ணாடி வழங்கப்பட்டு இருந்தது.

பெட்ரோல் டேங்க் பகுதி கூர்மையான லைன்களுடன் எந்தவொரு கிராஃபிக்ஸும் இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்தது. இந்த டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் முக்கிய சிறப்பம்சங்களுள் ஒன்றாக, அதன் இரட்டை பெட்ரோல் டேங்க்கை குறிப்பிட்டு இருந்தனர். இவை இரண்டின் மொத்த கொள்ளளவு கிட்டத்தட்ட 30 லிட்டராம்.

இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா!! டுகாட்டி தயாரிக்கிறது

இதனால் தான் ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் எக்ஸ் பைக் நீண்ட தூர பயணத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என டுகாட்டி கூறுகிறது போல. அதேநேரம் விற்பனைக்கு வரும் இதன் தயாரிப்பு மாடலில் இரு பெட்ரோல் டேங்க்குகள் வழங்கப்படாமலும் போகலாம் எனவும் செய்திகள் கூறுகின்றன.

இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா!! டுகாட்டி தயாரிக்கிறது

இந்த ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் முன் சக்கரம் 21 இன்ச்சிலும், பின் சக்கரம் 18 இன்ச்சிலும் வழங்கப்பட உள்ளன. இவ்வாறான அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள்களுக்கு ஸ்போக்டு சக்கரங்கள் தான் எடுப்பாக இருக்கும். இதனால் டுகாட்டியின் இந்த ஸ்க்ராம்ப்ளர் பைக்கிலும் ஸ்போக்டு சக்கரங்களை எதிர்பார்க்கிறோம்.

இந்த சக்கரங்களில் ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற பைரெல்லி ஸ்கார்பியன் ராலி டயர்கள் பொருத்தப்பட உள்ளன. டுகாட்டி டெசர்ட் எக்ஸ் கான்செப்ட் மாடலில் சஸ்பென்ஷன் டிராவல்கள் நன்கு நீளமானதாக இருந்தன. அதே அளவிலான சஸ்பென்ஷன்களை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உடன் இதன் தயாரிப்பு வெர்சனிலும் எதிர்பார்க்கலாம்.

இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா!! டுகாட்டி தயாரிக்கிறது

அதேபோல் கான்செப்ட் மாடலின் அதே 275மிமீ க்ரவுண்ட் க்ளியரென்ஸில் தான் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் எக்ஸ் பைக்கும் உருவாக்கப்படும். கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் எக்ஸ் கான்செப்ட் மாடலில் அதிகப்பட்சமாக 84 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1,079சிசி, L-இரட்டை என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது.

இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா!! டுகாட்டி தயாரிக்கிறது

இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸை இணைத்திருந்தனர். ஆனால் இதன் விற்பனை மாடலில் 937சிசி, L-இரட்டை, லிக்யூடு-கூல்டு டெஸ்டாஸ்ட்ரெட்டா என்ஜின் வழங்கப்படவே வாய்ப்புள்ளது. இந்த என்ஜின் 9,000 ஆர்பிஎம்-இல் 113 எச்பி-ஐ அதிகப்பட்சமாக பைக்கிற்கு வழங்கக்கூடியது.

இதே என்ஜின் தான் இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட், ஹைப்பர்மோடார்ட் மற்றும் புதிய மான்ஸ்டர் பைக்குகளிலும் வழங்கப்படுகின்றது. டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் எக்ஸ் கான்செப்ட் மாடலின் தயாரிப்பு வெர்சன் இந்திய சந்தைக்கு வருவதற்கு இன்னும் சில ஆண்டுகளுக்கு வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் கொண்டுவரப்படலாம்.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Scrambler DesertX To Make Its Global Debut In December 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X