புதிய டுகாட்டி பனிகளே வி4 எஸ்பி பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டால் மயக்கமே போட்ருவீங்க!

டுகாட்டி நிறுவனம் புதிய பனிகளே வி4 எஸ்பி மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய டுகாட்டி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய டுகாட்டி பனிகளே வி4 எஸ்பி பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டால் மயக்கமே போட்ருவீங்க!

லக்சரி மோட்டார்சைக்கிள் பிராண்டான டுகாட்டி அதன் பனிகளே வி4 எஸ்பி பைக்கினை இந்தியாவில் இன்று (நவ.18) அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் எஸ்பி என்பதன் அர்த்தம் ஸ்போர்ட் பிரோடெக்‌ஷன் என்பதாகும். சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்கான பனிகளே வி4 நீண்ட காலமாக நம் நாட்டில் விற்பனையில் உள்ளது.

புதிய டுகாட்டி பனிகளே வி4 எஸ்பி பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டால் மயக்கமே போட்ருவீங்க!

புதிய பனிகளே வி4 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.36.07 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிமுகத்தோடு இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் டெல்லி-என்சிஆர், மும்பை, புனே, அஹமதாபாத், பெங்களூர், கொச்சி, கொல்கத்தா & சென்னை டீலர்ஷிப்களில் துவங்கப்பட்டுள்ளன.

புதிய டுகாட்டி பனிகளே வி4 எஸ்பி பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டால் மயக்கமே போட்ருவீங்க!

இதனை தொடர்ந்து டெலிவிரிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிகிறது. புதிய பனிகளே வி4 எஸ்பி பிரத்யேகமான பெயிண்ட்டினை பெற்றுள்ளது. அதேபோல் ஸ்டேரிங்கில் ஒவ்வொரு பனிகளே வி4 எஸ்பி பைக்கிற்கும் பிரத்யேகமான எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை தான் வழக்கமான பனிகளே வி4 எஸ் மாடலில் இருந்து புதிய பனிகளே வி4 எஸ்பி பைக்கை வேறுப்படுத்தி காட்டுகின்றன.

புதிய டுகாட்டி பனிகளே வி4 எஸ்பி பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டால் மயக்கமே போட்ருவீங்க!

புதிய பனிகளே வி4 எஸ்பி பைக்கில் மோட்டோஜிபி-யின் 1,103சிசி டெஸ்மோசெடிசி ஸ்ட்ராடெல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 214 பிஎச்பி மற்ற்ம் 124 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. பந்தய களத்திற்கு ஏற்ப என்ஜின் வடிவமைக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, தொழிநுட்பங்களும் சேசிஸில் செறிவூட்டப்பட்டுள்ளன.

புதிய டுகாட்டி பனிகளே வி4 எஸ்பி பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டால் மயக்கமே போட்ருவீங்க!

இந்த ஸ்போர்ட் தயாரிப்பு பைக்கில் ப்ரெம்போ ஸ்டைலிமா காலிபர்கள் மற்றும் எம்சிஎஸ் அமைப்புடன் ப்ரெம்போ ப்ரேக் குழாயும் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுனரின் கால் பாதங்களை பாதுகாக்கும் விதமாக, ஓட்டுனர் கால் வைக்கும் பகுதியானது அலுமினியத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய டுகாட்டி பனிகளே வி4 எஸ்பி பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டால் மயக்கமே போட்ருவீங்க!

இவற்றுடன் ஹோலின்ஸ் நிக்ஸ்-30 ஃபோர்க்குகள், ஹோலின்ஸ் டிடிஎக்ஸ்36 பின்பக்க ஷாக் அப்சார்பர், ஹோலின்ஸ் ஸ்டேரிங் டேம்பர் உள்ளிட்டவற்றை கண்ட்ரோல் செய்யக்கூடிய ஹோலின்ஸ் ஸ்மார்ட் இசி 2.0 சிஸ்டத்தையும் புதிய பனிகளே வி4 எஸ்பி பைக்கில் டுகாட்டி நிறுவனம் வழங்கியுள்ளது. அப்படியே எலக்ரானிக் தொகுப்புகளுக்கு வந்தால், 6-அச்சு போஸ்ச் ப்ளாட்ஃபாரத்தை இந்த புதிய டுகாட்டி பைக் பெற்றுள்ளது.

புதிய டுகாட்டி பனிகளே வி4 எஸ்பி பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டால் மயக்கமே போட்ருவீங்க!

இந்த ப்ளாட்ஃபாரத்தில் போஸ்ச் எவோ கார்னரிங் ஏபிஎஸ், டுகாட்டி டிராக்‌ஷன் கண்ட்ரோல் எவோ 3, டுகாட்டி ஸ்லைட் கண்ட்ரோல், டுகாட்டி வீலிங் கண்ட்ரோல் எவோ, டுகாட்டி பவர் லாஞ்ச், டுகாட்டி விரைவான கியர் மாற்றி எவோ2, என்ஜின் ப்ரேக் கண்ட்ரோல் எவோ, டுகாட்டி எலக்ட்ரானிக் சஸ்பென்ஷன் எவோ மற்றும் தன்னிச்சையான டயர் அளவுத்திருத்தம் உள்ளிட்டவை அடங்குகின்றன. ஓட்டுனருக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் 5-இன்ச் முழு-டிஎஃப்டி வண்ண இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் பெறலாம். இவை மட்டுமின்றி, ஜிபிஎஸ் தொகுதி உடன் டுகாட்டி டேடா அனலைஸர்+ (டிடிஏ+) தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய டுகாட்டி பனிகளே வி4 எஸ்பி பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டால் மயக்கமே போட்ருவீங்க!

புதிய பனிகளே வி4 எஸ்பி மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தி இருப்பது குறித்து டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிபுள் சந்த்ரா பேசுகையில், புதிய பனிகளே வி4 எஸ்பி பைக்கினை அறிமுகம் செய்வதன் மூலம் இந்தியாவில் பனிகளே குடும்பத்தை விரிவுப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது உயர்தரமான பனிகளே மாடலாகும்.

புதிய டுகாட்டி பனிகளே வி4 எஸ்பி பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டால் மயக்கமே போட்ருவீங்க!

புதிய பனிகளே வி4 எஸ்பி ஆனது அதன் அர்பணிப்பு மற்றும் "குளிர்கால சோதனை" லைவரி, உலர் க்ளட்ச், மெக்னீசியம் சக்கரங்கள் மற்றும் ஸ்டைலிமா பிரேக் காலிப்பர்கள் ஆகியவற்றிற்கு நன்றி செலுத்தும் ஒரு தனித்துவமான இயந்திரமாகும். மேலும் பந்தய பாதையில் சிறந்ததை விரும்புவோருக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய அதிவேகமான பைக் இப்போது இந்திய பந்தய கள ஆர்வலர்களுக்கு கிடைக்கிறது என்பது உற்சாகமளிக்கிறது.

புதிய டுகாட்டி பனிகளே வி4 எஸ்பி பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டால் மயக்கமே போட்ருவீங்க!

விரைவில் BIC மற்றும் MMRT போன்ற இந்திய பந்தய களங்களில் இதனை காண ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றார். பந்தய களத்திற்கு ஏற்ற பைக் என டுகாட்டி சார்பில் திரும்ப திரும்ப சொல்லப்படுவதற்கு காரணம், புதிய பனிகளே வி4 எஸ்பி மூடப்பட்ட பகுதிக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மோட்டார்சைக்கிளாகும். இதனை பொது சாலைகளில் இயக்க இந்திய சட்டம் அனுமதிக்காது.

புதிய டுகாட்டி பனிகளே வி4 எஸ்பி பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டால் மயக்கமே போட்ருவீங்க!

முன்னதாக டுகாட்டி நிறுவனம் 2022 ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 மோட்டார்சைக்கிளை உலகளவில் வெளியீடு செய்திருந்தது. தோற்றத்தை பொறுத்தவரையில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 உடன் ஒப்பிடுகையில் பனிகளே வி2 ஆனது அளவில் சற்று சிறியது. இதற்கு முன்னதாக ஹைப்பர்மோட்டார்ட் 950 மோட்டார்சைக்கிளை இரு விதமான வேரியண்ட்களில், ரூ.12.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் நம் நாட்டு சந்தையில் டுகாட்டி அறிமுகப்படுத்தி இருந்தது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati india launches panigale v4 sp superbike in domestic market details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X