டுகாட்டி டயவெல் 1260எஸ் ப்ளாக் & ஸ்டீல் எடிசன் பைக்கின் தோற்றம் வெளியீடு!! எப்போது விற்பனைக்கு வரும்?

டுகாட்டி டயவெல் 1260எஸ் ப்ளாக் & ஸ்டீல் எடிசன் பைக்கை பற்றிய விபரங்கள் படங்களுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

டுகாட்டி டயவெல் 1260எஸ் ப்ளாக் & ஸ்டீல் எடிசன் பைக்கின் தோற்றம் வெளியீடு!! எப்போது விற்பனைக்கு வரும்?

டுகாட்டி டயவெல் 1260எஸ் மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிசனாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த ப்ளாக் & ஸ்டீல் எடிசன் 2019 மிலன் டிசைன் வாரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட டயவெல் "மெட்டரிகோ" கான்செப்ட்டில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி டயவெல் 1260எஸ் ப்ளாக் & ஸ்டீல் எடிசன் பைக்கின் தோற்றம் வெளியீடு!! எப்போது விற்பனைக்கு வரும்?

பெயருக்கு ஏற்றாற்போல் இந்த ஸ்பெஷல் டயவெல் பைக் சமச்சீரற்ற கிராஃபிக்ஸில் பளபளப்பான க்ரே மற்றும் மேட் ப்ளாக் நிறங்களை முக்கிய நிறங்களாக கொண்டுள்ளது. அதேநேரம் மஞ்சள் நிற ஹைலைட்களையும் பார்க்க முடிகிறது.

டுகாட்டி டயவெல் 1260எஸ் ப்ளாக் & ஸ்டீல் எடிசன் பைக்கின் தோற்றம் வெளியீடு!! எப்போது விற்பனைக்கு வரும்?

இவை எல்லாம் சேர்ந்து தான் பைக்கிற்கு ஸ்போர்டியான தோற்றத்தை வழங்குகின்றன. மஞ்சள் நிறத்தை ஃப்ரேம், பின்பக்க வால்பகுதியின் அடிப்பகுதி, என்ஜின் பாதுகாப்பான் மற்றும் அலாய் சக்கரங்களை பார்க்கலாம்.

டுகாட்டி டயவெல் 1260எஸ் ப்ளாக் & ஸ்டீல் எடிசன் பைக்கின் தோற்றம் வெளியீடு!! எப்போது விற்பனைக்கு வரும்?

மற்ற ஸ்பெஷல் எடிசன் மோட்டார்சைக்கிள்களை போல் டயவெல் 1260எஸ் ப்ளாக் & ஸ்டீல் மோட்டார்சைக்கிளிலும் காஸ்மெட்டிக் அப்கிரேட்கள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளன.

டுகாட்டி டயவெல் 1260எஸ் ப்ளாக் & ஸ்டீல் எடிசன் பைக்கின் தோற்றம் வெளியீடு!! எப்போது விற்பனைக்கு வரும்?

இதனால் டயவெல் 1260எஸ் பைக்கிலும் வழக்கமான 1,262சிசி, வி-ட்வின், லிக்யுடு-கூல்டு என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,500 ஆர்பிஎம்-இல் 157.3 பிஎச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-இல் 129 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

டுகாட்டி டயவெல் 1260எஸ் ப்ளாக் & ஸ்டீல் எடிசன் பைக்கின் தோற்றம் வெளியீடு!! எப்போது விற்பனைக்கு வரும்?

புதிய டயவெல் 1260எஸ் ப்ளாக் & ஸ்டீல் எடிசன் மிமோ மோட்டார் கண்காட்சியின் 2021ஆம் ஆண்டிற்கான எடிசனில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. ஜூன் 10ஆம் தேதியில் ஆரம்பித்த இந்த கண்காட்சி 13ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

டுகாட்டி டயவெல் 1260எஸ் ப்ளாக் & ஸ்டீல் எடிசன் பைக்கின் தோற்றம் வெளியீடு!! எப்போது விற்பனைக்கு வரும்?

இதனை தொடர்ந்து டுகாட்டி டயவெல் 1260எஸ் பைக்கின் இந்த புதிய வெர்சன் 2021 ஜூலை மாதத்தில் இருந்து சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைக்கு செல்லவுள்ளது. இந்திய சந்தையை பொறுத்தவரையில் டுகாட்டி பிராண்டில் இருந்து பனிகாலே வி4 மற்றும் பிஎஸ்6 டயவெல் 1260 சூப்பர்பைக்குகள் சமீபத்தில் அறிமுகமாகின.

டுகாட்டி டயவெல் 1260எஸ் ப்ளாக் & ஸ்டீல் எடிசன் பைக்கின் தோற்றம் வெளியீடு!! எப்போது விற்பனைக்கு வரும்?

இதில் வி4 மற்றும் வி4 எஸ் வெர்சன்களில் களமிறக்கப்பட்டுள்ள பனிகாலே மாடலின் விலைகள் ரூ.23.50 லட்சம் மற்றும் ரூ.28.50 லட்சமாக உள்ளன. பிஎஸ்6 டயவெல் 1260 மோட்டார்சைக்கிளின் ஆரம்ப விலை ரூ.18.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Diavel 1260 S Black and Steel edition revealed. Read Full Details In Tamil.
Story first published: Friday, June 11, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X