2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்

2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் வரிசை பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த 2021 பைக்குகளை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் வரிசையில் ஐகான், ஐகான் டார்க் மற்றும் 1100 டார்க் ப்ரோ பைக்குகள் அடங்குகின்றன. இவற்றின் விலைகள் முறையே ரூ.7.99 லட்சம், ரூ.8.49 லட்சம் மற்றும் ரூ.10.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்

லேட்டஸ்ட் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானதாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களின் முன்பதிவுகளும் இதன் அறிமுகத்துடன் துவங்கப்பட்டுள்ளன. டெலிவிரிகள் வருகிற ஜனவரி 28ஆம் தேதி துவங்கப்பட உள்ளது.

2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்

டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் வரிசையில் ஆரம்ப நிலை மாடலான ஐகான் டார்க் மேட் ப்ளாக் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் சில்வர் நிறமும் பைக்கின் சில பகுதிகளில் தென்படுகிறது. ரிம்கள் க்ரே நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்

டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் ஐகான் கூடுதல் வசதிகளுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதன் எக்ஸ்ஷோரூம் விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டுகாட்டி சிவப்பு மற்றும் கிளாசிக் ‘62 மஞ்சள்' நிறங்களில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த பைக்கின் சிறப்பம்சம் அதன் கருப்பு நிற ஃப்ரேம் எனலாம்.

2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்

இந்த 800சிசி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகளில் கண்ணீர்த்துளி வடிவில் இரும்பு பெட்ரோல் டேங்க், அலுமினியத்தில் பக்கவாட்டு பேனல்கள், புதிய எல்இடி டிஆர்எல்கள், சவுகரியமாக பொருத்தப்பட்ட ஸ்விட்ச்கியர், அகலமான ஹேண்டில்பார்கள், மென்மையான க்ளட்ச் கண்ட்ரோல் மற்றும் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்

இதில் பொருத்தப்படுகின்ற 803சிசி எல்-ட்வின் என்ஜின் அதிகப்பட்சமாக 8250 ஆர்பிஎம்-ல் 72 பிஎச்பி மற்றும் 5750 ஆர்பிஎம்-ல் 66 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்

ஸ்க்ரம்ப்ளர் 1100 டார்க் ப்ரோ, ‘டார்க் ஸ்டீல்த்' பெயிண்ட்டில் ஏகப்பட்ட எலக்ட்ரானிக் தொகுப்புகளை பெற்று வந்துள்ளது. இதில் கார்னரிங் ஏபிஎஸ், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், 3 ரைடிங் மோட்கள் (ஆக்டிவ், ஜார்னி & சிட்டி) உள்ளிட்டவை அடங்குகின்றன. இதில் 1,079சிசி எல்-இரட்டை என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.

2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 85 பிஎச்பி மற்றும் 4,750 ஆர்பிஎம்-ல் 87 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டுகாட்டி பைக்குகளில் அதன் ஸ்க்ரம்ப்ளர் வரிசை பைக்குகள் இந்தியாவில் பிரபலமானவைகளாக உள்ளன. இதற்கு இந்த பிஎஸ்6 அப்கிரேட் உதவியாக இருக்கும் என்பது உறுதி.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati strengthens its BS6 Scrambler range in India, launches the Scrambler Icon, Icon Dark and Scrambler 1100 Dark Pro
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X