புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் உலகளவில் வெளியீடு!! ஸ்போர்டியான மல்டிஸ்ட்ராடா!

மல்டிஸ்ட்ராடா பைக்ஸ் பீக் என்ற பெயரில் புதிய மோட்டார்சைக்கிளை டுகாட்டி நிறுவனம் சர்வதேச அளவில் வெளியீடு செய்துள்ளது. இந்த புதிய டுகாட்டி பைக் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் உலகளவில் வெளியீடு!! ஸ்போர்டியான மல்டிஸ்ட்ராடா!

புதிய மல்டிஸ்ட்ராடா பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் கடந்த அக்.28ஆம் தேதி நடைபெற்ற டுகாட்டி வேர்ல்டு பிரீமியம் என்ற கண்காட்சியில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மோட்டோஜிபி பைக்குகளின் உடையில், பிரத்யேகமான கிராஃபிக்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய டுகாட்டி பைக்கில் 17-இன்ச்சில் புதிய சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் உலகளவில் வெளியீடு!! ஸ்போர்டியான மல்டிஸ்ட்ராடா!

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா பைக்குகளின் வரிசையிலேயே ஸ்போர்டியானதாக இந்த புதிய பைக்ஸ் பீக் மாடல் விளங்குகிறது. மல்டிஸ்ட்ரா வி4-இன் ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்த புதிய தோற்றத்தில் புதிய மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் மறு-ட்யூன் செய்யப்பட்ட சேசிஸ், புத்துணர்ச்சியான இயக்கவியல், எலக்ட்ரானிக் கண்ட்ரோல் போன்றவற்றை பெற்றுள்ளது.

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் உலகளவில் வெளியீடு!! ஸ்போர்டியான மல்டிஸ்ட்ராடா!

இவற்றின் விளைவாக, ஏற்கனவே கூறியதுதான், வழக்கமான மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கை காட்டிலும் இது ஸ்போர்டியானதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய டுகாட்டி பைக்கின் முக்கியமான சிறப்பம்சங்களாக புதிய 17-இன்ச் முன் சக்கரம் மற்றும் ஒற்றை-பக்க ஸ்விங்க் ஆர்ம்-ஐ சொல்லலாம். டைட்டானியம் மற்றும் கார்பனால் உருவாக்கப்பட்டுள்ள இதன் அக்ராபோவிக் சைலன்ஸரில் அதிகளவில் கார்பன் ஃபைபர் பாகங்களை பார்க்க முடிகிறது.

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் உலகளவில் வெளியீடு!! ஸ்போர்டியான மல்டிஸ்ட்ராடா!

இதன் சேசிஸ் முன்பக்கத்தில் 17 இன்ச்சில் சக்கரம் பொருத்துவதற்கு இணக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கமான சாலை டயர்களே முன்பக்கத்தில் 120/70 அளவிலும், பின்பக்கத்தில் 190/55 அளவிலும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டயர்கள், மார்செசினி போலி அலுமினிய ரிம்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பிரத்யேகமான ரிம்களினால் வி4 எஸ்-ஐ காட்டிலும் இந்த பைக்ஸ் பீக் மாடலின் எடை 2.7 கிலோ வரையில் குறைந்துள்ளது.

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் உலகளவில் வெளியீடு!! ஸ்போர்டியான மல்டிஸ்ட்ராடா!

ஒட்டுமொத்தமாக, வழக்கமான மல்டிஸ்ட்ராடா வி4 எஸ் உடன் ஒப்பிடுகையில் புதிய மல்டிஸ்ட்ராடா பைக்ஸ் பீக்கின் எடை கிட்டத்தட்ட 4 கிலோ குறைவு. இதன் ஹோலின்ஸ் ஸ்மார்ட் இசி2.0 சஸ்பென்ஷன் அமைப்பானது ஸ்போர்டியான டிரைவிங்கிற்கு உறுதியளிக்கிறது. மேலும், புதிய வி4 பைக்ஸ் பீக்கில் வழங்கப்பட்டுள்ள ப்ரேக்கிங் அமைப்பு தான் அதன் பிரிவிலேயே சிறந்தது என டுகாட்டி தெரிவித்துள்ளது.

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் உலகளவில் வெளியீடு!! ஸ்போர்டியான மல்டிஸ்ட்ராடா!

இந்த ப்ரேக்கிங் அமைப்பானது நேரடியாக டுகாட்டி பனிகளே வி4 பைக்கில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் இதன் ப்ரேக் அமைப்பானது ப்ரெம்போ ஸ்டைலிம மோனோப்ளாக் ப்ரேக் காலிபர்கள் உடன் 330மிமீ விட்டத்தில் டிஸ்க்குகளையும், பின்பக்கத்தில் ப்ரெம்போ ஃப்ளோட்டிங் காலிபர் உடன் 265மிமீ விட்டத்தில் ஒற்றை டிஸ்க்கையும் கொண்டுள்ளது.

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் உலகளவில் வெளியீடு!! ஸ்போர்டியான மல்டிஸ்ட்ராடா!

அதிக கண்ட்ரோல் வழங்கக்கூடியதாக, உகந்த மெல்லிய கோணங்களுக்கு ஏற்ப சிறப்பான ட்ரைவிங் நிலைப்பாட்டுடன் புதிய மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மல்டிஸ்ட்ராடா பைக்கிலும் வழக்கமான வி4 க்ராண்டூரிஸ்மோ என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. மல்டிஸ்ட்ராடா வி4 மோட்டார்சைக்கிள் குடும்பத்திற்காகவே டுகாட்டி பிரத்யேகமாக உருவாக்கும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 170 எச்பி மற்றும் 8,750 ஆர்பிஎம்-இல் 125 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் உலகளவில் வெளியீடு!! ஸ்போர்டியான மல்டிஸ்ட்ராடா!

மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிளில் புதிய தலைமுறை எலக்ட்ரானிக் தொகுப்புகளிலும் எந்த குறையும் இல்லை. இதன்படி, மல்டிஸ்ட்ராடா வி4 எஸ் பைக்கில் முன் மற்றும் பின்பக்கத்தில் வழங்கப்படும் ரேடார் தொழிற்நுட்பத்தை இந்த புதிய மாடலும் பெற்றுள்ளது. இதன் மூலம் தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் இயக்கத்தின்போது ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை காட்டும் வசதி உள்ளிட்டவற்றை பெறலாம்.

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் உலகளவில் வெளியீடு!! ஸ்போர்டியான மல்டிஸ்ட்ராடா!

இதன் 6.5 இன்ச் டிஎஃப்டி டேஸ்போர்ட் ஆனது நாவிகேஷன் வரைப்படத்தை வழங்கக்கூடியதாக உள்ளது. அதுமட்டுமின்றி டுகாட்டி கனெக்ட் சிஸ்டத்தின் வாயிலாக ஸ்மார்ட்போன் செயல்பாடுகளை கண்ணாடிபோல் பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையில் மேற்கொள்ளலாம். இந்திய சந்தைக்கு புதிய மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிளை டுகாட்டி விற்பனைக்கு கொண்டுவருமா என்பதை தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை.

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் உலகளவில் வெளியீடு!! ஸ்போர்டியான மல்டிஸ்ட்ராடா!

சர்வதேச சந்தைகளில் மல்டிஸ்ட்ராடா பைக்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த டுகாட்டி நிறுவனம் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது. இந்த வகையில் இந்த அக்டோபர் மாத துவக்கத்தில் டுகாட்டி ‘பேபி' அட்வென்ச்சர் என்ற அடைமொழி பெயருடன் மல்டிஸ்ட்ராடா வி2 மோட்டார்சைக்கிள் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது.

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் உலகளவில் வெளியீடு!! ஸ்போர்டியான மல்டிஸ்ட்ராடா!

இந்தியாவிலும் விற்பனையில் உள்ள மல்டிஸ்ட்ராடா 950 மோட்டார்சைக்கிளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள இது முழுவதும் அட்வென்ச்சர் பயணங்களுக்கானதாக மட்டுமில்லாமல், வழக்கமான சாலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் மல்டிஸ்ட்ராடா 950 பைக் விற்பனையில் உள்ளதால், சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ள மல்டிஸ்ட்ராடா வி2 பைக்கும் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
2022 Ducati Multistrada V4 Pikes Peak Unveiled.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X