பிஎஸ்6 டுகாட்டி டயவெல் 1260 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18.5 லட்சம்

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான டுகாட்டி டயவெல் 1260 பைக் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டுகாட்டி பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎஸ்6 டுகாட்டி டயவெல் 1260 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18.5 லட்சம்

இத்தாலியன் மோட்டார்சைக்கிள் பிராண்டான டுகாட்டி தற்போது பிஎஸ்6 டயவெல் 1260 பைக் உடன் அதன் ‘எஸ்' வேரியண்ட்டையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இவற்றின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.18.49 லட்சம் மற்றும் ரூ.21.49 லட்சமாக (எஸ் வேரியண்ட்) நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பிஎஸ்6 டுகாட்டி டயவெல் 1260 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18.5 லட்சம்

டுகாட்டியின் மோட்டார்சைக்கிள்களிலேயே மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்ட மோட்டார்சைக்கிளுள் ஒன்றான டயவெல் 1260 மாடல் அதன் தோற்றத்திற்கு ஏற்ப ஏகப்பட்ட எலக்ட்ரானிக் தொகுப்புகளை பெறுகிறது.

பிஎஸ்6 டுகாட்டி டயவெல் 1260 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18.5 லட்சம்

புதிய டுகாட்டி டயவெல் 1260 பைக்கின் தோற்றத்தில் சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், பருத்த பெட்ரோல் டேங்க், படிக்கட்டு அமைப்பில் இருக்கை, ரேடியேட்டர் கவசங்கள், ஒற்றை-பக்க ஸ்விங்கார்ம், இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் முதலியவற்றை சொல்லலாம்.

பிஎஸ்6 டுகாட்டி டயவெல் 1260 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18.5 லட்சம்

ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வழங்க இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலில் 3.5 இன்ச்சில் டிஎஃப்டி வண்ண திரை வழங்கப்பட்டுள்ளது. பைக்கை சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் அனைத்தும் எல்இடி தரத்தில் மின்னுக்கின்றன.

பிஎஸ்6 டுகாட்டி டயவெல் 1260 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18.5 லட்சம்

டுகாட்டி டயவெல் 1260 என்ற ஸ்டாண்டர்ட் மாடல் டார்க் ஸ்டீல்த் நிறத்தில் மட்டுமே கிடைக்கும். ஆனால் அதேநேரம் இதன் எஸ் வேரியண்ட்டை டுகாட்டி சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

பிஎஸ்6 டுகாட்டி டயவெல் 1260 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18.5 லட்சம்

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானதாக இந்த டுகாட்டி பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 1,262சிசி, L-இரட்டை, டெஸ்டாஸ்ரெட்டா என்ஜின் அதிகப்பட்சமாக 9,500 ஆர்பிஎம்-இல் 162 பிஎச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-இல் 129 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

பிஎஸ்6 டுகாட்டி டயவெல் 1260 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18.5 லட்சம்

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பிற்கு வீலிங் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், லாஞ்ச் கண்ட்ரோல், ஏபிஎஸ் உடன் டிஸ்க் ப்ரேக்குகள் உள்பட பயண அனுபவத்தை மேம்படுத்த ரைடிங் மோட்களும் கொடுக்கப்படுகின்றன.

பிஎஸ்6 டுகாட்டி டயவெல் 1260 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18.5 லட்சம்

இந்த டுகாட்டி பைக்கில் சஸ்பென்ஷன் பணியினை கவனிக்க முன்பக்கத்தில் 50மிமீ-இல் தலைக்கீழான ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் எஸ் வேரியண்ட்டில் சஸ்பென்ஷனுக்கு ப்ரீமியம் தரத்தில் ஹோலின்ஸ் செட்அப் பொருத்தப்படுகின்றன.

பிஎஸ்6 டுகாட்டி டயவெல் 1260 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18.5 லட்சம்

பிஎஸ்6 டயவெல் 1260 மற்றும் அதன் எஸ் வேரியண்ட்டிற்கான முன்பதிவுகள் இந்தியாவில் உள்ள டுகாட்டி டீலர்ஷிப் மையங்களில் துவங்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் மிக விரைவாகவே தங்களது பைக்கை டெலிவிரி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
All new MY21 Diavel 1260 and 1260 S launched at INR 18.49 Lacs and INR 21.49 Lacs respectively (Ex-Showroom India). Bookings are now open across all Ducati dealerships, deliveries to begin immediately
Story first published: Monday, June 7, 2021, 16:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X