டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கிற்கு காத்திருந்தது போதும்!! இந்த ஜூலையில் விற்பனைக்கு வருகிறது!

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கின் இந்திய வருகைக்காக காத்திருப்போருக்கு ஓர் நற்செய்தி. டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களில் புதியதாக டீசர் படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கிற்கு காத்திருந்தது போதும்!! இந்த ஜூலையில் விற்பனைக்கு வருகிறது!

இதில் டுகாட்டி அட்வென்ச்சர் பைக்கின் அறிமுகம் இந்த ஜூலை மாதத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கில் 1,158சிசி வி4 க்ராண்டூரிஸ்மோ, லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கிற்கு காத்திருந்தது போதும்!! இந்த ஜூலையில் விற்பனைக்கு வருகிறது!

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10,500 ஆர்பிஎம்-இல் 168 பிஎச்பி மற்றும் 8,750 ஆர்பிஎம்-இல் 125 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜினின் சிறப்பம்சம், 60 ஆயிரம் கிமீ வால்வு சேவை இடைவெளியை கொண்டுள்ளது என்பதாகும்.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கிற்கு காத்திருந்தது போதும்!! இந்த ஜூலையில் விற்பனைக்கு வருகிறது!

வி4, வி4 எஸ் மற்றும் வி4 ஸ்போர்ட் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 50மிமீ தலைக்கீழான ஃபோர்க்குகளையும், பின்பக்கத்தில் மார்சோச்சியின் காண்டிலீவர் தளவமைப்பையும் கொண்டுள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கிற்கு காத்திருந்தது போதும்!! இந்த ஜூலையில் விற்பனைக்கு வருகிறது!

அதேநேரம் வி4 எஸ் மற்றும் வி4 எஸ் ஸ்போர்ட் மாடல்கள் தானாக சமன் செய்யும் செயல்பாட்டுடன் செமி-ஆக்டிவ் டுகாட்டி ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் அமைப்பிற்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ளன.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கிற்கு காத்திருந்தது போதும்!! இந்த ஜூலையில் விற்பனைக்கு வருகிறது!

நிறுவனத்தின் மல்டிஸ்ட்ராடா 950 மற்றும் மல்டிஸ்ட்ராடா 1260 மோட்டார்சைக்கிள்களின் வரிசையில் இணையவுள்ள இந்த வி4 மாடல்கள் மிக முக்கிய அம்சமாக முன் மற்றும் பின்பக்கத்தில் ரேடார்களை பெற்றுவரவுள்ளன.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கிற்கு காத்திருந்தது போதும்!! இந்த ஜூலையில் விற்பனைக்கு வருகிறது!

அடாப்டிப் க்ரூஸ் கண்ட்ரோலிற்கு (ACC) தரவுகளை வழங்கும் முன் ரேடார்கள் முன்னால் செல்லும் வாகனத்தில் இருந்து ஓட்டுனர் நிர்ணயித்த தூரத்தை மோட்டார்சைக்கிள் 30kmph- 160kmph வேகத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்க உதவிகரமாக இருக்கும்.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கிற்கு காத்திருந்தது போதும்!! இந்த ஜூலையில் விற்பனைக்கு வருகிறது!

அதேநேரம் பின் ரேடார்கள் ஓட்டுனரால் உடனடியாக திரும்பி பார்க்க முடியாத, மோட்டார்சைக்கிள் நெருக்கமான பகுதியில் ஏதாவது வாகனம் வந்தால் கண்டறிந்து உடனே ஓட்டுனருக்கு தெரிவிக்கும். இவற்றுடன் கார்னரிங் ஏபிஎஸ், டுகாட்டி வீலிங் கண்ட்ரோல் மற்றும் டுகாட்டி டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவையும் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கில் வழங்கப்பட உள்ளன.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Multistrada V4 teased ahead of India launch, All about world’s most powerful ADV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X