டுகாட்டியின் புதிய ‘பேபி’ அட்வென்ச்சர் பைக்- மல்டிஸ்ட்ராடா வி2!! உலகளவில் வெளியீடு!

டுகாட்டி நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட அதன் மல்டிஸ்ட்ராடா வி2 மோட்டார்சைக்கிள் பற்றிய விபரங்களையும், படங்களையும் வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய டுகாட்டி 'பேபி' அட்வென்ச்சர் பைக்கை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டுகாட்டியின் புதிய ‘பேபி’ அட்வென்ச்சர் பைக்- மல்டிஸ்ட்ராடா வி2!! உலகளவில் வெளியீடு!

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா, ‘பேபி' அட்வென்ச்சர் என அழைக்கப்படுவதற்கு காரணம், இந்த பைக் அட்வென்ச்சர் பயணங்களுக்கும், அதேசமயம் அன்றாட நகர்புற பயன்பாட்டிற்கும் ஏற்றது என்கிறது டுகாட்டி. இது டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 950 மோட்டார்சைக்கிளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.

டுகாட்டியின் புதிய ‘பேபி’ அட்வென்ச்சர் பைக்- மல்டிஸ்ட்ராடா வி2!! உலகளவில் வெளியீடு!

இந்தியாவிலும் விற்பனையில் உள்ள மல்டிஸ்ட்ராடா 950 பைக் முழுவதும் அட்வென்ச்சர் பயணங்களை சார்ந்தது ஆகும். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் தோற்றத்தில் சில வித்தியாசங்கள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது உங்களுக்கே நன்றாக தெரியும். மல்டிஸ்ட்ராடா 950-இல் பெட்ரோல் டேங்க் பகுதியில் கூர்மையான லைன்கள் வழங்கப்படுகின்றன.

டுகாட்டியின் புதிய ‘பேபி’ அட்வென்ச்சர் பைக்- மல்டிஸ்ட்ராடா வி2!! உலகளவில் வெளியீடு!

புதிய மல்டிஸ்ட்ராடா வி2 பைக்கில் இந்த பகுதி, ஒரே மாதிரியாக தட்டையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து தோற்றத்தில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால் மல்டிஸ்ட்ராடா 950 பைக்கின் என்ஜின் அப்டேட் செய்யப்பட்டு புதிய மல்டிஸ்ட்ராடா வி2-இல் பொருத்தப்பட்டுள்ளது.

டுகாட்டியின் புதிய ‘பேபி’ அட்வென்ச்சர் பைக்- மல்டிஸ்ட்ராடா வி2!! உலகளவில் வெளியீடு!

அதேபோல், அதிகப்பட்சமாக 113 எச்பி மற்றும் 94 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த அப்டேட் செய்யப்பட்ட என்ஜின் உடன் மேம்படுத்தப்பட்ட கியர்பாக்ஸ் மற்றும் க்ளட்ச் சிறிய மாற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. 94 என்எம் டார்க் திறன் என்பது 950 மாடலின் என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் டார்க் திறனை காட்டிலும் 2 என்எம் குறைவாகும்.

டுகாட்டியின் புதிய ‘பேபி’ அட்வென்ச்சர் பைக்- மல்டிஸ்ட்ராடா வி2!! உலகளவில் வெளியீடு!

மேலும், 94 என்எம் டார்க் திறனை இந்த புதிய மல்டிஸ்ட்ராடா பைக் 1000 ஆர்பிஎம்-மிற்கு முன்பாகவே எட்டிவிடும். இந்த புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள மற்றொரு முக்கிய அம்சம் எதுவென்றால், எடை. மல்டிஸ்ட்ராடா 950-ஐ காட்டிலும் மல்டிஸ்ட்ராடா வி2 எடை குறைவானது. இதன் டுகாட்டி டெஸ்டாஸ்டிரெட்டா 937சிசி என்ஜின் அப்டேட் செய்யப்பட்டதினால் 2 கிலோ எடை குறைந்துள்ளது.

டுகாட்டியின் புதிய ‘பேபி’ அட்வென்ச்சர் பைக்- மல்டிஸ்ட்ராடா வி2!! உலகளவில் வெளியீடு!

இது பைக்கின் மொத்த எடை 5 கிலோ வரையில் குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனால் சிறந்த எடை-என்ஜின் ஆற்றல் விகிதத்தை பைக் பெற்றுள்ளது. இந்த புதிய பைக்கின் பெட்ரோல் டேங்க் 24 லிட்டர்கள் கொள்ளளவில் வழங்கப்பட்டுள்ளது. மல்டிஸ்ட்ராடா வி2 மட்டுமின்றி மல்டிஸ்ட்ராடா வி2 எஸ் மாடலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

டுகாட்டியின் புதிய ‘பேபி’ அட்வென்ச்சர் பைக்- மல்டிஸ்ட்ராடா வி2!! உலகளவில் வெளியீடு!

இதன் எடை வி2 மாடலை (221 கிலோ) காட்டிலும் நான்கு கிலோ குறைவானதாக உள்ளது. மல்டிஸ்ட்ராடா வி2 எஸ் பைக்கில் செமி-ஆக்டிவ் சஸ்பென்ஷன், 5-இன்ச் எல்சிடி திரை, விரைவான கியர் மாற்றங்கள் மற்றும் ஒளியூட்டப்பட்ட ஸ்டேரிங் சக்கர ஸ்விட்ச்கள் போன்ற சில கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

டுகாட்டியின் புதிய ‘பேபி’ அட்வென்ச்சர் பைக்- மல்டிஸ்ட்ராடா வி2!! உலகளவில் வெளியீடு!

மல்டிஸ்ட்ராடா 950 பைக்குடன் ஒப்பிடுகையில் இந்த இரு மல்டிஸ்ட்ராடா வி2 பைக்குகளும் 10மிமீ தாழ்வான ஓட்டுனர் இருக்கை அமைப்பை பெற்றுள்ளன. இந்த மாற்றத்தால் பைக்கின் இருக்கை அமைப்பு முன்பை காட்டிலும் நேர்த்தியானதாக மாறியுள்ளது. இதனால் உயரம் குறைவானவர்களுக்கும் இந்த டுகாட்டி மல்டிஸ்ட்ராடா பைக் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

டுகாட்டியின் புதிய ‘பேபி’ அட்வென்ச்சர் பைக்- மல்டிஸ்ட்ராடா வி2!! உலகளவில் வெளியீடு!

அத்துடன் புதிய மல்டிஸ்ட்ராடா வி2 பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 790மிமீ ஓட்டுனர் இருக்கை தேர்வும் வழங்கப்பட உள்ளது. உயரம் அதிகம் கொண்ட உரிமையாளர்கள் கால் வைக்கும் பகுதியை 10மிமீ தாழ்வாகவும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி2 பைக்கின் ஆரம்ப விலை 15,295 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 11.35 லட்சமாகும்.

டுகாட்டியின் புதிய ‘பேபி’ அட்வென்ச்சர் பைக்- மல்டிஸ்ட்ராடா வி2!! உலகளவில் வெளியீடு!

எஸ் வெர்சனின் விலை 17,895 டாலர்களாக (ரூ.13.28 லட்சம்) கொண்டுவரப்பட்டுள்ளது. டுகாட்டி மல்டிஸ்ட்ராடா பெயர் கடந்த 10 ஆண்டுகளில் அட்வென்ச்சர் பைக் ஆர்வலர்களிடையே பிரபலமானதாக விளங்குகிறது. மல்டிஸ்ட்ராடா பிராண்டில் முழுக்க முழுக்க ஆஃப்-ரோடை சேர்ந்த எண்டூரோ மாடல்களில் இருந்து பந்தய களத்தில் பயன்படுத்தப்படும் பீக் திறன் அதிகமாக கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகள் வரையில் உள்ளன.

டுகாட்டியின் புதிய ‘பேபி’ அட்வென்ச்சர் பைக்- மல்டிஸ்ட்ராடா வி2!! உலகளவில் வெளியீடு!

ஏற்கனவே கூறியதுதான், மல்டிஸ்ட்ராடா 950 மோட்டார்சைக்கிள் நம் இந்தியாவில் விற்பனையில் உள்ளது. இதனால் தற்போது உலகளவில் வெளியிடப்பட்டுள்ள மல்டிஸ்ட்ராடா வி2 பைக்குகளும் நம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படலாம். இவற்றின் அறிமுகத்தை அடுத்த 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
New Ducati Multistrada V2 revealed.
Story first published: Sunday, October 3, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X