ரூ.10.99 லட்சத்தில் அறிமுகமான டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் ஃபாஸ்ட்ஹௌஸ்!! அனைத்தும் விற்று தீர்ந்தது

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் ஃபாஸ்ட்ஹௌஸ் மோட்டார்சைக்கிள் ரூ.10.99 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய டுகாட்டி பைக் குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ரூ.10.99 லட்சத்தில் அறிமுகமான டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் ஃபாஸ்ட்ஹௌஸ்!! அனைத்தும் விற்று தீர்ந்தது

இத்தாலிய மோட்டார்சைக்கிள் பிராண்டான டுகாட்டி தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஃபாஸ்ட்ஹௌஸ் மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. அதாவது உலகளவிலேயே வெறும் 800 யூனிட்கள் தான் விற்பனை செய்யப்பட உள்ளதாம்.

ரூ.10.99 லட்சத்தில் அறிமுகமான டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் ஃபாஸ்ட்ஹௌஸ்!! அனைத்தும் விற்று தீர்ந்தது

டுகாட்டி ஸ்க்ராம்பளர் பிராண்டிற்கும், பைக் அலங்கரிப்பு பிராண்டான ஃபாஸ்ட்ஹௌஸிற்கும் இடையேயான கூட்டணியை கொண்டாடும் விதமாக இந்த லிமிடெட் எடிசன் டுகாட்டி பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெறும் 800 யூனிட்களில் மட்டுமே உலகளவில் களம் இறக்கப்பட்டுள்ள இந்த புதிய பைக்கின் இந்தியாவிற்கான யூனிட்கள் அனைத்தும் விற்று தீர்க்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரூ.10.99 லட்சத்தில் அறிமுகமான டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் ஃபாஸ்ட்ஹௌஸ்!! அனைத்தும் விற்று தீர்ந்தது

டுகாட்டி நிறுவனமும் ஃபாஸ்ட்ஹௌஸ் நிறுவனமும் கடந்த ஆண்டில் இருந்து கூட்டணியில் இருந்து வருகின்றன. இந்த கூட்டணியின் சார்பில் பழம்பெரும் அமெரிக்க ஆஃப்-ரோடு பந்தயமான மின்ட் 400-இல் பங்கேற்ற அமெரிக்கன் ரைடர் ஜோர்டன் கிரஹாம், ஹூலிகன் பட்டத்தை வென்றுள்ளார்.

ரூ.10.99 லட்சத்தில் அறிமுகமான டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் ஃபாஸ்ட்ஹௌஸ்!! அனைத்தும் விற்று தீர்ந்தது

இந்த புதிய மோட்டார்சைக்கிளின் அறிமுகம் குறித்து டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிபுள் சந்த்ரா கருத்து தெரிவிக்கையில், ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் இந்த பிரிவில் மிகவும் திறமை வாய்ந்த ஆஃப்-ரோடு பைக்குகளில் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள எங்களது வாடிக்கையாளர்கள் அதை உணர்ந்துள்ளனர்.

ரூ.10.99 லட்சத்தில் அறிமுகமான டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் ஃபாஸ்ட்ஹௌஸ்!! அனைத்தும் விற்று தீர்ந்தது

ஃபாஸ்ட்ஹௌஸ் சமீப காலங்களில் முற்றிலும் தனித்துவமாக தோற்றமளிக்கும் ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் உடைகளை கொண்டுள்ளது. மற்றும் இது சிறந்த பாலைவன இயந்திரமாகும். அதனால் தான் உலகில் இதனை 800 பேர் மட்டுமே வைத்திருக்க முடியும். நாங்கள் எங்கள் டீலர் நெட்வொர்க்கில் முன்பதிவுகளை திறந்த போது, இந்திய சந்தைக்கான ஆரம்ப ஒதுக்கீடு சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிட்டது.

ரூ.10.99 லட்சத்தில் அறிமுகமான டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் ஃபாஸ்ட்ஹௌஸ்!! அனைத்தும் விற்று தீர்ந்தது

வழக்கமான ஸ்க்ராம்ப்ளர் ஸ்லெட் மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் ஃபாஸ்ட்ஹௌஸ் கடந்த ஆண்டில் நடைபெற்ற மின்ட் 400 ஆஃப்-ரோடு பந்தயத்தில் பயன்படுத்தப்பட்ட பைக்கிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பெயிண்ட்டை பெற்றுள்ளது.

இதன் வெளிப்பக்கம் பெரும்பான்மையாக கருப்பு மற்றும் க்ரே நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் பைக்கின் ஃப்ரேம் ஆனது டுகாட்டி சிவப்பு நிறத்தில், பைக்கின் எண்ணை வெளிக்காட்டும் (800 வரையில்) அலுமினியம் தட்டுடன் காட்சியளிக்கிறது. இரு மட்கார்ட்களும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.10.99 லட்சத்தில் அறிமுகமான டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் ஃபாஸ்ட்ஹௌஸ்!! அனைத்தும் விற்று தீர்ந்தது

பெட்ரோல் டேங்கில் ஸ்க்ராம்ப்ளர் டுகாட்டி லோகோ உடன் கூட்டணி ஃபாஸ்ட்ஹௌஸ் நிறுவனத்தின் லோகோவும் வழங்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து இந்த புதிய டுகாட்டி பைக்கில் ஓட்டுனர் இருக்கை கிட்டத்தட்ட 840மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் கால் வைக்கும் பகுதியில் தேவைக்கு நீக்கக்கூடிய ரப்பர் பேட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் ஃபாஸ்ட்ஹௌஸ் மோட்டார்சைக்கிளில் ஏர் கூல்டு 803சிசி எல்-இரட்டை என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 8,250 ஆர்பிஎம்-இல் 71.8 பிஎச்பி மற்றும் 5,750 ஆர்பிஎம்-இல் 66.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் ஆனது நேரடி கட் கியர்கள் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச்சை கொண்ட 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரூ.10.99 லட்சத்தில் அறிமுகமான டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் ஃபாஸ்ட்ஹௌஸ்!! அனைத்தும் விற்று தீர்ந்தது

குழாய் இரும்பு ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலைவன பைக்கில் சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் 46மிமீ-இல் தலைக்கீழான ஃபோர்குகளும், பின்பக்கத்தில் 200மிமீ டிராவல் உடன் கயாபா மோனோ ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில் ப்ரீலோடு மற்றும் ரீபாண்ட் அட்ஜெஸ்ட்மெண்ட் வசதி உடன் வடிவமைக்கப்பட்டுள்ள பின்பக்க கயாபா மோனோஷாக் அமைப்பில் இரு-பக்க அலுமினியம் ஸ்விங்க்கார்ம் சேர்க்கப்பட்டுள்ளது.

ரூ.10.99 லட்சத்தில் அறிமுகமான டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் ஃபாஸ்ட்ஹௌஸ்!! அனைத்தும் விற்று தீர்ந்தது

ப்ரேக்கிங் பணியை கவனிக்க இருசக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகளுடன் போஸ்ச் நிறுவனத்தின் டபுள்-சேனல் ஏபிஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த லிமிடெட் எடிசன் பைக்கின் முன் சக்கரம் 19 இன்ச்சிலும், பின் சக்கரம் 17 இன்ச்சிலும் உள்ளன. இவற்றில் பைரெல்லியின் ஸ்கார்பியன் ராலி எஸ்டிஆர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஆஃப்-ரோடிற்கு மட்டுமின்றி நகர்புற சாலைகளுக்கும் ஏற்றதாகும்.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati launches the Scrambler Desert Sled Fasthouse.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X