ஜெர்மன் நிறுவனத்தின் கை வண்ணத்தில், மொத்தமாக உருமாறிய டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்!!

புதிய போல்ட்-ஆன் உடற் தொகுப்புகள் டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் டெஸார்ட் ஸ்லெட் பைக்கிற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜெர்மன் நிறுவனத்தின் கை வண்ணத்தில், மொத்தமாக உருமாறிய டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்!!

டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்கிற்கான போல்ட்-ஆன் ஆக்ஸஸரீகள் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆக்ஸஸரீகளை பொருத்தினால் ஏற்கனவே பயங்கரமான தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த டுகாட்டி பைக் கூடுதலாக மெருக்கேற்றப்படும்.

ஜெர்மன் நிறுவனத்தின் கை வண்ணத்தில், மொத்தமாக உருமாறிய டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்!!

இந்த போல்ட்-ஆன் ஆக்ஸஸரீ தொகுப்புகள், ஸ்கார்பியன் மோட்டோ கிட் என அழைக்கப்படுகிறது. இந்த தொகுப்பில் சில ப்ளக் & ப்ளே பாடி பேனல்கள் மற்றும் பைக் உரிமையாளர்களே தாமாக பொருத்தி கொள்ளும் வகையில் சில பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜெர்மன் நிறுவனத்தின் கை வண்ணத்தில், மொத்தமாக உருமாறிய டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்!!

இந்த ஸ்கார்பியன் மோட்டோ தொகுப்பை ஸ்க்ரம்ப்ளர் டெஸார்ட் ஸ்லெட் பைக்கில் பொருத்திய பிறகு வேறெந்த மாடிஃபிகேஷன் பணியினையும் பைக்கின் மீது மேற்கொள்ள தேவையில்லை என இந்த ஆக்ஸஸரீ தொகுப்பை வடிவமைத்த ஜெர்மனியை சேர்ந்த ஹூக்கி கோ என்ற மோட்டார்சைக்கிள் வடிவமைப்பு நிறுவனம் கூறுகிறது.

ஜெர்மன் நிறுவனத்தின் கை வண்ணத்தில், மொத்தமாக உருமாறிய டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்!!

இதற்காக இந்த நிறுவனம் 3டி பிரிண்டிங் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது. ஸ்கார்பியன் மோட்டோ கிட்-இல் முன்பக்க ஃபெண்டர், பெட்ரோல் டேங்க் நீட்டிப்புகள், பின்பக்க கௌல் மற்றும் புதிய எல்இடி ஹெட்லேம்ப் என சில பாடி பேனல்கள் அடங்குகின்றன.

இந்த கூடுதல் ஆக்ஸஸரீகள் எதிர்பாராத மோதலிலும் எளிதில் பதிப்படையாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக வடிவமைப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பியன் மோட்டோ தொகுப்பில் மிக முக்கிய அம்சமாக பெட்ரோல் டேங்க் பேனல்களில் எல்இடி விளக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதை கூறலாம்.

ஜெர்மன் நிறுவனத்தின் கை வண்ணத்தில், மொத்தமாக உருமாறிய டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்!!

அதேபோல் ஹெட்லைட் மட்டும் தனியாக தெரிவது நம்மை கவர்கிறது. உண்மையில் இதுதான் உண்மையான பாலைவன பைக்குகளுக்கான தோற்றத்தை டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் டெஸார்ட் ஸ்லெட் பைக்கிற்கு வழங்குகிறது.

ஜெர்மன் நிறுவனத்தின் கை வண்ணத்தில், மொத்தமாக உருமாறிய டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்!!

ஹூக்கி கோ நிறுவனம் ஸ்கார்பியன் மோட்டோ தொகுப்பிற்கு வழங்கியுள்ள நிறத்தை தைரியமான பர்பிள் என அழைக்கிறது. இந்த நிறம் மட்டுமின்றி டுகாட்டி சிவப்பு மற்றும் பளபளப்பான கருப்பு நிறத்திலும் அவர்கள் இந்த ஆக்ஸஸரீ தொகுப்புகளை உருவாக்கியுள்ளனர்.

ஜெர்மன் நிறுவனத்தின் கை வண்ணத்தில், மொத்தமாக உருமாறிய டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்!!

இந்த ஜெர்மன் நிறுவனம் இவ்வாறான போல்ட்-ஆன் உடற் தொகுப்புகளை புதியதாக உருவாக்கி எதிர்காலத்தில் டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் டெஸார்ட் ஸ்லெட் பைக்கிற்கு வழங்க திட்டமிட்டுள்ளது. ஆனால் இத்தகைய தொகுப்புகளுடன் வழங்கப்படும் பைக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படும்.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Scrambler Desert Sled Transformed Using Bolt-on Body Kit
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X