இந்தியா கொண்டுவரப்படும் அடுத்த பிஎஸ்6 டுகாட்டி பைக்... முழு விபரம் இதோ!!

பிஎஸ்6 டுகாட்டி டயாவெல் 1260 மோட்டார்சைக்கிளின் அறிமுகத்தை டுகாட்டி இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான அந்த நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பதிவை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியா கொண்டுவரப்படும் அடுத்த பிஎஸ்6 டுகாட்டி பைக்... முழு விபரம் இதோ!!

டுகாட்டி இந்தியா நிறுவனம் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முழுவதும் கருப்பு என டயாவெல் 1260 பைக்கை மறைமுக குறிப்பிட்டு #மிகவிரைவில் என்ற ஹேஸ்டேக்கையும், பைக்கின் பெட்ரோல் டேங்கை மட்டுமே காட்டும் படத்தினையும் பதிவிட்டுள்ளது.

இந்தியா கொண்டுவரப்படும் அடுத்த பிஎஸ்6 டுகாட்டி பைக்... முழு விபரம் இதோ!!

இதில் இருந்து இந்த பைக் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்பட உள்ளதை அறியலாம். பிஎஸ்6 தரத்தில் கொண்டுவரப்படும் இந்த டுகாட்டி பைக்கின் சிறப்பம்சமே அதன் 1262சிசி, வி-இரட்டை என்ஜின் தான். இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 162 பிஎச்பி மற்றும் 129 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

இந்தியா கொண்டுவரப்படும் அடுத்த பிஎஸ்6 டுகாட்டி பைக்... முழு விபரம் இதோ!!

இதனுடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. பிஎஸ்6 அப்கிரேடினால் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய டார்க் திறனில் எந்த மாற்றமும் இல்லை. ஹார்ஸ் பவர் மட்டுமே 3 எச்பி அதிகரித்துள்ளது. அதேபோல் பைக்கின் எடையும் 5 கிலோ வரையில் அதிகரித்து கிட்டத்தட்ட 250 கிலோவாக கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியா கொண்டுவரப்படும் அடுத்த பிஎஸ்6 டுகாட்டி பைக்... முழு விபரம் இதோ!!

ஸ்டாண்டர்ட் & எஸ் என டுகாட்டி டயாவெல்லின் வேரியண்ட்கள் இரண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை இரண்டிலும் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல், என்ஜின் ப்ரேக் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் என அனைத்து தொழிற்நுட்பங்களும் வழங்கப்படுகின்றன.

இந்தியா கொண்டுவரப்படும் அடுத்த பிஎஸ்6 டுகாட்டி பைக்... முழு விபரம் இதோ!!

இவை மட்டுமின்றி பயண அனுபவத்தை எப்போதும் சிறப்பானதாகவே வைத்திருக்க, பல ரைடிங் மோட்கள், லாஞ்ச் கண்ட்ரோலையும் இந்த டுகாட்டி பைக் பெறுகிறது. ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டை காட்டிலும் டயாவெல் எஸ் வேரியண்ட்டின் எடை 2 கிலோ குறைவாகவே இருக்கும்.

இந்தியா கொண்டுவரப்படும் அடுத்த பிஎஸ்6 டுகாட்டி பைக்... முழு விபரம் இதோ!!

ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து வேறுப்படுத்தி காட்ட இதில் டுகாட்டி பை-டைரக்ஷ்னல் விரைவு கியர்மாற்றி வழங்கப்படுகிறது. பிஎஸ்6 என்ஜினை தவிர்த்து புதிய டயாவெல் 1260 பைக்கின் தோற்றத்தில் பெரியளவில் எந்த வித்தியாசமும் இருக்காது. முந்தைய டயாவெல் 1260 பைக் ரூ.17.70 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்தியா கொண்டுவரப்படும் அடுத்த பிஎஸ்6 டுகாட்டி பைக்... முழு விபரம் இதோ!!

இதனால் புதிய டயாவெல் 1260 இன் விலை ரூ.18 லட்சமாக நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது. இந்த 1260சிசி பைக்கில் ஒரு-பக்க ஸ்விங்கார்ம், நீளமான பெட்ரோல் டேங்க் & எல்இடி டெயில்-லைட்கள் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்டவற்றையும் டுகாட்டி நிறுவனம் வழங்குகிறது.

இந்தியா கொண்டுவரப்படும் அடுத்த பிஎஸ்6 டுகாட்டி பைக்... முழு விபரம் இதோ!!

இவற்றுடன் ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வழங்க 3.5 இன்ச்சில் டிஎஃப்டி வண்ண திரையும் கொடுக்கப்படுகிறது. மேலும் ஹேண்டில்பார் ஸ்விட்ச்களுடன் ஏகப்பட்ட எலக்ட்ரானிக் ரைடர் தொகுப்புகளும் இந்த டுகாட்டி பைக்கில் வழங்கப்பட உள்ளன.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Diavel 1260 BS6 Teased Ahead Of India Launch: Here Are All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X