இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகின்றன டுகாட்டியின் 12 புதிய பைக்குகள்!! 2021ல் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளன

டுகாட்டி நிறுவனம் மொத்தம் 12 புதிய மோட்டார்சைக்கிள்களை இந்த வருடத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய டுகாட்டி பைக்குகளை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகின்றன டுகாட்டியின் 12 புதிய பைக்குகள்!! 2021ல் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளன

டுகாட்டியின் இந்திய சந்தைக்கான இந்த 2021 பைக்குகள் அனைத்தும் பிஎஸ்6 தரத்தில் கொண்டுவரப்படவுள்ளன. இந்த புதிய அறிமுகங்களில் பிரபலமான டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்கும் பிஎஸ்6 அப்டேட் செய்யப்பட்டு ஒன்றாக வழங்கப்படவுள்ளது.

இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகின்றன டுகாட்டியின் 12 புதிய பைக்குகள்!! 2021ல் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளன

கடந்த 2020 இறுதி மாதங்களில் டுகாட்டி அதன் புதிய பிஎஸ்6 பைக்குகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு, நல்லபடியான நேர்மறையான எண்ணங்களுடன் 2020ஐ முடித்துள்ளது. இதில் டுகாட்டி பனிகளே வி2, ஸ்க்ரம்ப்ளர் 1100 ப்ரோ மற்றும் ஸ்போர்ட்ஸ் டூரர் மல்டிஸ்ட்ராடா 950எஸ் போன்ற பைக் மாடல்கள் அடங்குகின்றன.

இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகின்றன டுகாட்டியின் 12 புதிய பைக்குகள்!! 2021ல் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளன

டுகாட்டிக்கு 2020ல் ஓரளவு விற்பனையை இந்தியாவில் பெற்று கொடுத்த பைக் என்று பார்த்தால், அது பனிகளே வி2 தான். ரேஸ் ட்ராக் ஆர்வலர்களின் முதன்மையான தேர்வுகளுள் ஒன்றாக இந்த டுகாட்டி பைக் உள்ளது.

இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகின்றன டுகாட்டியின் 12 புதிய பைக்குகள்!! 2021ல் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளன

டுகாட்டி நிறுவனத்திடம் மான்ஸ்டர், ஸ்க்ரம்ப்ளர், மல்டிஸ்ட்ராடா, பனிகளே உள்ளிட்ட பைக் மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளன. அதிலும் பிஎஸ்6 ஸ்க்ரம்ப்ளர் ஐகான் மற்றும் ஸ்க்ரம்ப்ளர் ஐகான் டார்க் மோட்டார்சைக்கிள்களுக்கு முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகின்றன டுகாட்டியின் 12 புதிய பைக்குகள்!! 2021ல் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளன

வாடிக்கையாளர்கள் இந்த டுகாட்டி பைக்குகளை ரூ.50,000 என்ற முன் தொகையுடன் டுகாட்டி டீலர்ஷிப் மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். டுகாட்டியின் புதிய 2021ஆம் ஆண்டிற்கான வாகனங்கள் படிப்படியாக சந்தையில் நுழையும்.

இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகின்றன டுகாட்டியின் 12 புதிய பைக்குகள்!! 2021ல் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளன

2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முற்றிலும் புதிய பிஎஸ்6 ஸ்க்ராம்ப்ளர், டயாவெல் மற்றும் அதன் புதிய பதிப்பு எக்ஸ்டியாவெல் ஆகியவை அறிமுகமாகவுள்ளன. இதன் பின்னர், வி4 என்ஜின் தளத்தை அடிப்படையாகக் கொண்ட மோட்டார்சைக்கிள்களின் புதிய வகைகளாக மல்டிஸ்ட்ராடா வி4, ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மற்றும் பனிகளே வி4 அறிமுகப்படுத்தப்படும்.

இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகின்றன டுகாட்டியின் 12 புதிய பைக்குகள்!! 2021ல் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளன

ஆண்டின் பிற்பகுதியில் கூட, புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மான்ஸ்டர், சூப்பர்ஸ்போர்ட் 950, மற்றும் ஹைப்பர்மோட்டார்ட் 950 ஆர்.வி.இ போன்ற புதிய டுகாட்டி மாடல்கள் தவிர, ஸ்க்ராம்ப்ளர் வரிசை ஸ்க்ராம்ப்ளர் 1100 டார்க் புரோ போன்ற புதிய மாடல்களின் மூலமும் விரிவடையவுள்ளது.

இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகின்றன டுகாட்டியின் 12 புதிய பைக்குகள்!! 2021ல் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளன

தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் "டுகாட்டி அக்கறை திட்டம்" என்ற திட்டத்தை டுகாட்டி அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் எந்தவொரு பயமுமின்றி தங்களது டுகாட்டி பைக்கை வாங்கலாம்.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati India to launch 12 new motorcycles in 2021, opens bookings for BS6 Scrambler Icon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X