2022 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 உலகளவில் வெளியீடு!! பைக்கை பற்றி தெரிஞ்சிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

2022 ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 மோட்டார்சைக்கிளை பற்றிய விபரங்களை டுகாட்டி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 உலகளவில் வெளியீடு!! பைக்கை பற்றி தெரிஞ்சிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

டுகாட்டி பிராண்டின் ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளுக்கு உலகம் முழுவதில் இருந்தும் ரசிகர்கள் உள்ளனர். தோற்றத்தை பொறுத்தவரையில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 உடன் ஒப்பிடுகையில், தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ள பனிகளே வி2 ஆனது அளவில் சற்று சிறியதாக காணப்படுகிறது.

2022 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 உலகளவில் வெளியீடு!! பைக்கை பற்றி தெரிஞ்சிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

இருப்பினும் ஸ்டைலை பொறுத்தவரையில், இரண்டிற்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. இதனால் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4-இன் அடிப்படையில் தான் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூற வேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன்.

2022 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 உலகளவில் வெளியீடு!! பைக்கை பற்றி தெரிஞ்சிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

ஆனால் டுகாட்டி பனிகளே வி2 பைக்கின் ஃப்ளாட்பாரத்தில் 2022 ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 2022 டுகாட்டி பைக்கின் முன்பக்கத்தில் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4-இன் ஹெட்லேம்ப் அமைப்பு அப்படியே பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. அதுவே, பெட்ரோல் டேங்க், பின்பக்க முனை பகுதி மற்றும் சக்கரங்களின் சத்தம் உள்ளிட்டவை பனிகளே வி2 மாடலில் இருந்து பகிரப்பட்டுள்ளன.

2022 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 உலகளவில் வெளியீடு!! பைக்கை பற்றி தெரிஞ்சிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

குறிப்பாக இந்த புதிய பைக்கில் அலாய் சக்கரங்கள் கிட்டத்தட்ட பனிகளே வி2 பைக்கை ஒத்து காணப்படுகின்றன. இந்த அலாய் சக்கரங்களில் பைரெல்லி டயப்லோ ரோஸ்ஸோ-4 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் கூடுதல் இறக்கை தேர்வுகளையும் இந்த டுகாட்டி பைக் பெற்று வந்துள்ளது. இந்த இறக்கைகள் மணிக்கு 265கிமீ வேகத்திலும் 27 கிலோ கீழ்நோக்கிய அழுத்தலுக்கு வழிவகுக்கின்றன.

2022 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 உலகளவில் வெளியீடு!! பைக்கை பற்றி தெரிஞ்சிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

2022 ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்கில் 955சிசி, சூப்பர் குவாட்ரோ, இரட்டை-சிலிண்டர் என்ஜினை டுகாட்டி நிறுவனம் பொருத்தியுள்ளது. இதே என்ஜின் தான் பனிகளே வி2-விலும் வழங்கப்படுகிறது. ஆனால் நாக்டு வெர்சனில் (ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2) சற்று குறைவான ஆற்றலை (153 எச்பி மற்றும் 101.5 என்எம்) வெளிப்படுத்தும் வகையில் இந்த என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

2022 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 உலகளவில் வெளியீடு!! பைக்கை பற்றி தெரிஞ்சிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

டிரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் மேல்/கீழ் விரைவு கியர்மாற்றி நிலையான தேர்வாக வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் & டிரான்ஸ்மிஷன் அமைப்பு பைக்கின் அலுமினியம் மோனோகாக் ஃப்ரேமில் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்கில் வழங்கப்பட்டுள்ள ஒற்றை-பக்க ஸ்விங்கார்ம் ஆனது பனிகளே வி2-வில் உள்ளதை காட்டிலும் 16மிமீ பெரியதாகும்.

2022 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 உலகளவில் வெளியீடு!! பைக்கை பற்றி தெரிஞ்சிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்கின் எடை 178 கிலோ ஆக கொண்டுவரப்பட்டுள்ளது. இது பனிகளே வி2-ஐ காட்டிலும் 2 கிலோ அதிகமாகும். மற்ற எலக்ட்ரானிக் தொகுப்புகளாக, கார்னரிங் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், 3 பவர் மோட்கள் (ஹை, மீடியம், லோ) மற்றும் 3 ரைட் மோட்கள் (மழை, சாலை மற்றும் ஸ்போர்ட்), வீலிங் கண்ட்ரோல் மற்றும் என்ஜின் ப்ரேக்கிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

2022 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 உலகளவில் வெளியீடு!! பைக்கை பற்றி தெரிஞ்சிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

இந்த டுகாட்டி பைக்கின் மீட்டர் கன்சோலில் 4.3 இன்ச்சில் வண்ண டிஎஃப்டி க்ளஸ்ட்டர் அனைத்து செட்டிங்ஸ் மற்றும் மோட்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் 43மிமீ ஷோவா பிக் பிஸ்டன் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்பக்கத்தில் சாக்ஸ் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன.

2022 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 உலகளவில் வெளியீடு!! பைக்கை பற்றி தெரிஞ்சிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

புதிய டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டரிலும் பிரேக்கிங் பணியினை பனிகளே வி2-இன் வழக்கமான பிரெம்போ எம்4.32 மோனோப்ளாக் செட்அப் தான் கவனித்து கொள்கின்றன. இந்திய சந்தையை பொறுத்தவரையில், டுகாட்டி நிறுவனம் ஹைப்பர்மோட்டார்ட் 950 மோட்டார்சைக்கிளின் இரு புதிய வேரியண்ட்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

2022 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 உலகளவில் வெளியீடு!! பைக்கை பற்றி தெரிஞ்சிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

ஹைப்பர்மோட்டார்ட் 950 ஆர்விஇ மற்றும் ஹைப்பர்மோட்டார்ட் 950 எஸ்பி என்ற இந்த இரு புதிய வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.99 லட்சத்தில் இருந்து ரூ.16.24 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதிநவீன எலக்ட்ரானிக் தொகுப்புகளுடன் நகர்புறங்களில் மகிழ்ச்சியான பயணத்திற்கும், வளைவுகளில் எளிமையான திருப்பலுக்கும் அனுமதிக்கக்கூடியவைகளாக இந்த புதிய வேரியண்ட்கள் விளங்கும் என டுகாட்டி தெரிவித்துள்ளது.

2022 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 உலகளவில் வெளியீடு!! பைக்கை பற்றி தெரிஞ்சிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

டுகாட்டி ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்குகளின் வழக்கமான தோற்றத்தை அப்படியே பெற்றுவந்துள்ள இவற்றிலும் இரட்டை எக்ஸாஸ்ட் குழாய் அமைப்பு தொடரப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய வேரியண்ட்களில் சில பேனல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பின்பக்க ட்ரெல்லிஸ் ஃப்ரேம் ஆனது வெளியே தெரியும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
2022 Ducati Streetfighter V2 Officially Revealed.
Story first published: Saturday, November 13, 2021, 22:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X