என்ன சொல்றீங்க!! வாகனங்களின் விலை மீண்டும் உயர போகிறது... ஏன் தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க!!

வாகனங்களின் விலை மீண்டும் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வாகனங்களின் விலை மீண்டும் உயர போகிறது... ஏன் தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க!!

2020ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னரே வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளின் விலை உயர்வு பற்றிய தகவலை வெளியிட ஆரம்பித்திருந்தன. இதனைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டை புதிய விலையுயர்வுடனேயே அவை வரவேற்றன.

வாகனங்களின் விலை மீண்டும் உயர போகிறது... ஏன் தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க!!

இதனால் பெரும்பாலான நிறுவனங்களின் புதிய வாகனங்கள் தற்போது புதிய விலையுயர்வுடனே விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மீண்டும் ஒரு முறை வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

வாகனங்களின் விலை மீண்டும் உயர போகிறது... ஏன் தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க!!

உற்பத்தி செலவு அதிகரித்த காரணத்தினால் முன்னதாக விலையுயர்வை நிறுவனங்கள் செய்திருந்தன. இந்த நிலையில், தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பிற உள்ளீட்டு செலவுகளைக் காரணம் காட்டி மீண்டும் விலையுயர்வை செய்ய நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது.

வாகனங்களின் விலை மீண்டும் உயர போகிறது... ஏன் தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க!!

வாகன உற்பத்தியில் முக்கிய பங்களிக்கும் உலோகத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இதனைச் சமாளிக்கும் விதமாகவே தற்போது மீண்டும் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் விலையுயர்வை கையிலெடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனங்களின் விலை மீண்டும் உயர போகிறது... ஏன் தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க!!

இந்த புதிய விலையுயர்வால் வர்த்த வாகனங்களின் விற்பனைப் பெரிதும் பாதிக்கும் என தெரிகின்றன. கடந்த இரு ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதே வர்த்த வாகனங்களின் விற்பனைச் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையில் தொடர் விலையுயர்வு செய்யப்பட்டு வருவது, விற்பனை வளர்சிக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என நம்பப்படுகின்றது.

வாகனங்களின் விலை மீண்டும் உயர போகிறது... ஏன் தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க!!

இதுமட்டுமின்றி, பயணிகள் வாகன பிரிவுகளிலும் இது லேசான பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் தெரிகின்றது. புதிய வாகன அழிப்பு கொள்கை மற்றும் மலையளவு உயர்ந்து நிற்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக புதிய எரிபொருள் வாகனங்களை எதிர்காலத்தில் பராமரிப்பது கடினமான ஒன்றாக மாறியிருக்கின்றது.

வாகனங்களின் விலை மீண்டும் உயர போகிறது... ஏன் தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க!!

இதுபோன்ற காரணங்களால் ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனங்களின் விற்பனையும் வரும் காலங்களில் கணிசமாக பாதிக்கக்கூடும் என நம்பப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போதைய வாகனங்களின் தொடர் விலையுயர்வு அமைகின்றது. விலையுயர்வுகுறித்து தற்போது வெளியாகியிருக்கும் இத்தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

வாகனங்களின் விலை மீண்டும் உயர போகிறது... ஏன் தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க!!

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டாடா, மாருதி சுசுகி, ஹூண்டாய், மஹிந்திரா உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்களும், ஹீரோ, பஜாஜ், ஹோண்டா, ராயல் என்பீல்டு ஆகிய நிறுவனங்களும் வாகனங்களின் விலையை ஏற்கனவே மிகப்பெரியளவில் செய்துவிட்டன. இந்த நிலையில் இவை மீண்டும் விலையுயர்வைச் செய்யுமானால், அவற்றின் தயாரிப்புகள் காஸ்ட்லியான வாகனங்களாக மாறிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Most Read Articles

English summary
Due To Rising Steel Costs, Automakers To Hike Prices Again Soon. Read In Tamil.
Story first published: Saturday, February 20, 2021, 17:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X