பல்பம் மாதிரி இருக்கு இது மின்சார வாகனமா?.. இதோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

மிகவும் எளிமையான தோற்றத்தில் டட்ச் நாட்டைச் சேர்ந்த ஓர் மின் வாகன உற்பத்தி நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை உருவாக்கியிருக்கின்றது. இந்த வாகனம் குறித்த முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

பல்பம் மாதிரி இருக்கு இது மின்சார வாகனமா?.. இதோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

டட்ச் நாட்டைச் சார்ந்த மின் வாகன உற்பத்தி நிறுவனம் ப்ரெக்ர் (Brekr). இந்நிறுவனம் தனது புதுமுக மின்சார வாகனம் ஒன்றை அந்நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் வாகனம் உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக மின் வாகன பிரியர்களை இவ்வாகனம் வெகுவாக கவரத் தொடங்கியுள்ளது.

பல்பம் மாதிரி இருக்கு இது மின்சார வாகனமா?.. இதோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

இதற்கு முக்கிய காரணம், எலெக்ட்ரிக் வாகனத்தின் முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலான தோற்றம் மட்டுமே ஆகும். இருசக்கர வாகனம் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற என்ற எண்ணத்தை இவ்வாகனம் உடைத்திருக்கின்றது. குறிப்பாக, இதுவரை இல்லாத ஓர் ஸ்டைலில் எலெக்ட்ரிக் வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

பல்பம் மாதிரி இருக்கு இது மின்சார வாகனமா?.. இதோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

எனவேதான் இவ்வாகனம் பலரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய ஓர் வாகனமாக மாறியுள்ளது. 'மாடல் பி' எனும் பெயரிலேயே இவ்வினோத உருவம் கொண்ட எலெக்ட்ரிக் வாகனத்தை ப்ரெக்ர் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் முதல் மின்சார இருசக்கர வாகனமாகும்.

பல்பம் மாதிரி இருக்கு இது மின்சார வாகனமா?.. இதோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

மிக எளிமையான மற்றும் நேரான தோற்றத்தை இந்த வாகனம் பெற்றிருக்கின்றது. ஆகையால், இதன் எடை மிகக் குறைவாக இருக்கின்றது. இதன் ஒட்டுமொத்த எடையுமே வெறும் 75 கிலோ மட்டுமே ஆகும். இதில், 9 கிலோவானது பேட்டரியுடையதாகும். இது ஓர் லித்தியன் அயன் பேட்டரியாகும். இதனை தனியாக கழட்டி எடுக்கலாம்.

பல்பம் மாதிரி இருக்கு இது மின்சார வாகனமா?.. இதோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

ஆகையால், பேட்டரியை தேவைக்கேற்ப கழட்டி எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த பேட்டரியானது இருக்கைக்கு அடிப்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது 40.2Ah திறன் பேட்டரியாகும். இதனை ஒரு முறை முழுமையாாக சார்ஜ் செய்தால் 50 கிமீ தூரம் முதல் 80 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும்.

பல்பம் மாதிரி இருக்கு இது மின்சார வாகனமா?.. இதோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

இப்பேட்டரியை உயர் ரக 18650 செல்லைக் கொண்டு உருவாக்கியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இவ்வானகத்தின் ரேஞ்ஜ் திறனை தேவை என்றால் உயர்த்திக் (அப்கிரேட் செய்து) கொள்ளலாம் எனவும் ப்ரெக்ர் அறிவித்துள்ளது. அவ்வாறு அப்கிரேட் செய்யும்போது 160 கிமீ வரை ரேஞ்ஜ் தரக் கூடிய வாகனமாக மாடல் பி மாறும்.

பல்பம் மாதிரி இருக்கு இது மின்சார வாகனமா?.. இதோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

அதேசமயம், இதன் மிகவும் எளிமையான தோற்றத்தைப் பார்த்துவிட்டு, இதில் சிறப்பு அம்சங்கள் பற்றாக்குறை இருக்கலாம் என நினைக்கலாம். ஆனால் அது சரியல்ல. ஏனெனில், பிற மின்சார வாகனங்களைப் போலவே மாடல்-பி எலெக்ட்ரிக் வாகனத்தில் சிறப்பு வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.

பல்பம் மாதிரி இருக்கு இது மின்சார வாகனமா?.. இதோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

செல்போனை இணைக்கும் வசதி, போக்குவரத்து நெரிசல் அல்லது பாதசாரிகள் குறித்த எச்சரிக்கை வழங்க ஏதுவாக 8வாட் திறன் இரு ஸ்பீக்கர்கள், பல்வேறு தகவல்களை வழங்கக் கூடிய சிறிய திரை மற்றும் எல்இடி மின் விளக்குகள் உள்ளிட்டவை மாடல்-பி இல் இடம் பெற்றிருக்கின்றன.

பல்பம் மாதிரி இருக்கு இது மின்சார வாகனமா?.. இதோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

ஆகையால், மிகவும் எளிமையான தோற்றத்திலான அதிக சிறப்பு வசதிகள் கொண்ட வாகனமாகும் இது காட்சியளிக்கின்றது. குறிப்பாக இதன் இயக்கம் நாம் எதிர்பார்த்திராத வகையில் மிகவும் அமைதியானதும் என்றும் கூறப்படுகின்றது. இதில் இடம் பிடித்திருக்கும் 2.5 கிலோவாட் மின் மோட்டார் இதனை உறுதி செய்கின்றது.

பல்பம் மாதிரி இருக்கு இது மின்சார வாகனமா?.. இதோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

இது இயங்கும் பெரியளவில் சப்தத்தை வெளியேற்றாது. நேரடியாக பின் வீலில் இணைக்கப்பட்டிருக்கும் இந்த மின் மோட்டார் 4kW மற்றும் 140 என்எம் டார்க் வரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 45 கிமீ வேகம் ஆகும். ஒரு வேலை உங்களுக்கு தேவைப்பட்டால் இவ்வாகனத்தை மணிக்கு 25 கிமீ வேகம் என்ற திறன் மாற்றி வழங்க இருப்பதாக ப்ரெக்ர் தெரிவித்துள்ளது.

பல்பம் மாதிரி இருக்கு இது மின்சார வாகனமா?.. இதோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

இவ்வளவு குறைந்த வேகம் கொண்ட வாகனங்களை இயக்க இந்தியாவில் ஓட்டுநர் உரிமம், பதிவெண் போன்ற எந்தவொரு ஆவணங்களும் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதை உறுதிப்படுத்தும் ஓர் சம்பவம் அண்மையில் இந்தியாவில் அரங்கேறியது.

பல்பம் மாதிரி இருக்கு இது மின்சார வாகனமா?.. இதோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

மின்சார இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு கவசம் ஏதும் இன்றி ஓர் சிறுவனம் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அவரை மடக்கிய போலீஸார், சிறிது நேரத்தில் எந்தவொரு அபராதமும் இன்றி வழி அனுப்பி வைத்தனர். தான் ஓட்டி வந்தது மிகக் குறைந்த வேக வாகனம் என்றும், இதனை இயக்க ஓட்டுநர் அனுமதி தேவையில்லை என்றும் அந்த சிறுவன் உறுதியாகக் கூறியதை அடுத்து போலீஸார் அவர்களை அனுப்பி வைத்தனர்.

பல்பம் மாதிரி இருக்கு இது மின்சார வாகனமா?.. இதோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

பொதுவாக, இந்தியாவில் சிறுவர்கள் (உரிய அனுமதி இன்றி) வாகனங்களை இயக்கினால், அந்த வாகனத்தின் உரிமையாளர் அல்லது அவர்களை இயக்க அனுமதிக்கும் நபர்களுக்கே அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பது விதியாகும். இதன்படி, சிறைத் தண்டனை அல்லது பல ஆயிரங்கள் மதிப்பிலான அபராதம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றது.

பல்பம் மாதிரி இருக்கு இது மின்சார வாகனமா?.. இதோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

இந்த மாதிரியான எந்தவொரு சிக்கலையும் ஏற்படுத்தாத ஓர் வாகனமாக ப்ரெக்ர் மாடல் பி மின்சார வாகனம் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் அறிமுகம் தற்போது ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இந்திய அறிமுகம் மிக கடினம்தான்.

பல்பம் மாதிரி இருக்கு இது மின்சார வாகனமா?.. இதோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

மாடல் பி எலெக்ட்ரிக் வாகனத்திற்கு 4,499 யூரோக்கள் என்ற உச்சபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 3.92 லட்சம் ஆகும். தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கைக் காட்டிலும் மிக அதிகபட்ச விலையாகும். இந்த அதிகபட்ச விலையிலேயே ஐரோப்பிய நாடுகளில் ப்ரெக்ர் மாடல்பி விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Most Read Articles

English summary
Dutch based ev startup brekr revealed model b lightweight e moped with 160km range
Story first published: Saturday, August 14, 2021, 16:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X