வெளிநாட்டு இ-ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்க உரிமம் பெற்றது eBikeGo! IoT மற்றும் AI அம்சங்களுடன் தயாராகிறது!

ஸ்பானிஷ் நிறுவனத்தின் தயாரிப்பை இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை இ-பைக்-கோ (eBikeGo) நிறுவனம் பெற்றிருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் இன்டர்நெட் மற்றும் செயற்கை நுண்ணறிவு வசதிகளுடன் இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையைக் களம் காண இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

வெளிநாட்டு இ-ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்க உரிமம் பெற்றது eBikeGo! இன்டர்நெட், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் தயாராகிறது!

ஸ்பானிஷ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் டோர்ரோட் (TORROT). இந்நிறுவனத்தின் அதிகம் புகழ்கொண்ட தயாரிப்பாக முவி (Muvi) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கின்றது. அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பை இந்த வாகனம் பெற்று வருகின்றது.

வெளிநாட்டு இ-ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்க உரிமம் பெற்றது eBikeGo! இன்டர்நெட், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் தயாராகிறது!

இத்தகைய ஓர் வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது இ-பைக்-கோ (eBikeGo) நிறுவனம். நிறுவனம், இந்தியாவில் முவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியை மேற்கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் தற்போது பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டு இ-ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்க உரிமம் பெற்றது eBikeGo! இன்டர்நெட், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் தயாராகிறது!

ஆகையால், மிக விரைவில் இபைக்கோ நிறுவனம் முவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை இந்தியாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு ஏற்றுமதி செய்யவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

வெளிநாட்டு இ-ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்க உரிமம் பெற்றது eBikeGo! இன்டர்நெட், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் தயாராகிறது!

நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், "தனது உற்பத்தியின் வாயிலாக உலகளாவிய மின்சார இரு சக்கர வாகன சந்தையில் 5 சதவீதத்தை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டிருப்பது" தெரியவந்திருக்கின்றது. மேலும், முவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் சிறப்பாக செயல்படும் என்றும், இதன் வாயிலாக இந்திய மின் வாகன சந்தையில் பெரும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு இ-ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்க உரிமம் பெற்றது eBikeGo! இன்டர்நெட், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் தயாராகிறது!

முவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் உரிமத்தைப் பெற்றிருப்பது குறித்து நிறுவனம் மேலும் கூறியதாவது, "சர்வதேச ஆட்டோமோட்டிவ் நிறுவனமான டோரோட்டின் முன்னணி எலக்ட்ரிக் வாகனங்களில் ஒன்றான முவி-யை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தைப் பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

வெளிநாட்டு இ-ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்க உரிமம் பெற்றது eBikeGo! இன்டர்நெட், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் தயாராகிறது!

முவி, ஒரு தொழில்நுட்பத்தில் மேம்பட்ட இருசக்கர வாகனம் ஆகும். ஏற்கனவே, 12 நாடுகளில் இந்த இருசக்கர வாகனம் இயங்கி வருகின்றது. ஆகையால், இதற்கான சந்தை உலகளாவிய அளவில் பரந்து விரிந்திருப்பதாக" தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு இ-ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்க உரிமம் பெற்றது eBikeGo! இன்டர்நெட், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் தயாராகிறது!

முவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் இலகு ரக வாகனமாகும். ஒட்டுமொத்தமாகவே இதன் எடை 83 கிலோவாக இருக்கின்றது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 3கிலோவாட் வரை திறனை வெளியேற்றக் கூடியது. இது 125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்களுக்கு இணையான திறன் வெளியேற்றம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வெளிநாட்டு இ-ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்க உரிமம் பெற்றது eBikeGo! இன்டர்நெட், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் தயாராகிறது!

மேலும், இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 60 கிமீ ஆகும். இதுமட்டுமின்றி இது ஒற்றை முழுமையான சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் வாகனமாகும் காட்சியளிக்கின்றது. 100 கிமீ ரேஞ்ஜ் திறனை இது வழங்கும். ஈகோ மோடில் இயங்கும் போதே இந்த அதிகபட்ச ரேஞ்ஜை முவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கும்.

வெளிநாட்டு இ-ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்க உரிமம் பெற்றது eBikeGo! இன்டர்நெட், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் தயாராகிறது!

இதன் பேட்டரிகள் கழட்டி மாட்டும் வசதிக் கொண்டவை. ஆகையால், இதனை எங்கு வைத்து வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, பெரும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்டர்நெட் மற்றும் செயற்கை நுண்ணறிவு வசதிகளும் இந்த ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கின்றன.

வெளிநாட்டு இ-ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்க உரிமம் பெற்றது eBikeGo! இன்டர்நெட், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் தயாராகிறது!

இந்த வசதிகளுடன் இந்தியாவை நோக்கி வரவிருக்கும் முதல் மின்சார ஸ்கூட்டர் இது மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆம், இதுவரை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் எந்தவொரு இருசக்கர வாகனமும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இன்டர்நெட் இணைப்பு வசதியுடன் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தொழில்நுட்பங்களின் வாயிலாக ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் கண்கானிப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்களை நம்மால் மேற்கொள்ள முடியும்.

வெளிநாட்டு இ-ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்க உரிமம் பெற்றது eBikeGo! இன்டர்நெட், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் தயாராகிறது!

இபைக்கோ நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் ரக்கட் எனும் மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மின்சார இருசக்கர வாகனத்திற்கான புக்கிங் பணிகள்்இந்தியாவில் தொடங்கிய இரண்டே மாதங்களில் ஒரு லட்சம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கைப் பெற்றது குறிப்பிடத்தகுந்தது. அந்தளவிற்கு மிக அதிக வரவேற்பைப் பெறும் மின்சார டூவீலராக அது மாறியிருக்கின்றது. இதுகுறித்த மேலும் விபரங்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
Ebikego acquired license rights to manufacture the muvi electric scooter from torrot
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X