தயார் நிலையில் eBikeGo-வின் அதி-வேக எலெக்ட்ரிக் வாகனம்... எப்போது அறிமுகம் தெரியுமா?

eBikeGo நிறுவனத்தின் உயர்-வேக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் அறிமுகத்திற்கு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

தயார் நிலையில் eBikeGo-வின் அதி-வேக எலெக்ட்ரிக் வாகனம்... எப்போது அறிமுகம் தெரியுமா?

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் eBikeGo. இந்நிறுவனம் மின்சார இருசக்கர வாகன இயக்கத்தை மையமாகக் கொண்டு நாட்டில் இயங்கி வருகின்றது. இந்நிலையில், eBikeGo மிக விரைவில் அதி-திறன் வெளிப்பாடு வசதிக் கொண்ட மின்சார இருசக்கர வாகனத்தை வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தயார் நிலையில் eBikeGo-வின் அதி-வேக எலெக்ட்ரிக் வாகனம்... எப்போது அறிமுகம் தெரியுமா?

இதுகுறித்த தகவலை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வரும் ஆகஸ்டு 25ம் தேதி அன்று Rugged என பெயரிடப்பட்டிருக்கும் அந்த மோட்டோ-ஸ்கூட்டர் நாட்டில் அறிமுகமாக இருக்கின்றது. இந்த வெளியீட்டு நிகழ்வை முன்னிட்டு eBikeGo நிறுவனம் Rugged எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் டீசர் படத்தை வெளியிட்டிருக்கின்றது.

தயார் நிலையில் eBikeGo-வின் அதி-வேக எலெக்ட்ரிக் வாகனம்... எப்போது அறிமுகம் தெரியுமா?

eBikeGo புதிய Rugged வாகனத்தை முழுவதுமாக இந்தியாவில் வைத்தே கட்டமைத்து இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது, மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்புகளை மட்டுமே கொண்டு Rugged எலெக்ட்ரிக் பைக் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

தயார் நிலையில் eBikeGo-வின் அதி-வேக எலெக்ட்ரிக் வாகனம்... எப்போது அறிமுகம் தெரியுமா?

Rugged Teaser Pic

இந்த வாகனத்திற்கு தற்போது ICAT அமைப்பின் சான்றிதழ் கிடைத்திருப்பதாக eBikeGo அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்தே வரும் 25ம் தேதி அன்று எலெக்ட்ரிக் வாகனத்தின் அறிமுகத்தை நிகழ்த்த நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. மேலும், அன்றைய தினம் இருசக்கர வாகனத்திற்கான புக்கிங் தொடங்கலாம் என தெரிகின்றது.

தயார் நிலையில் eBikeGo-வின் அதி-வேக எலெக்ட்ரிக் வாகனம்... எப்போது அறிமுகம் தெரியுமா?

மிகக் குறைந்த அளவிலேயே இருசக்கர வாகனத்திற்கான புக்கிங் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், விரைவில் அறிமுகமாக இருக்கும் Rugged அதிகபட்சமாக மணிக்கு 45 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது கூறப்படுகின்றது.

தயார் நிலையில் eBikeGo-வின் அதி-வேக எலெக்ட்ரிக் வாகனம்... எப்போது அறிமுகம் தெரியுமா?

இதுபோன்ற அனைத்து முக்கிய விபரங்களும் வரும் 25ம் தேதி எதிர்பார்க்கப்படுகின்றது. eBikeGo இந்தியாவில் மின் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான பணியை 2017ம் ஆண்டில் இருந்தே மேற்கொள்ள தொடங்கிவிட்டது. இந்த நடவடிக்கையின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள Rugged எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தையே தற்போது அறிமுகம் செய்யும் பணியில் நிறுவனம் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.

தயார் நிலையில் eBikeGo-வின் அதி-வேக எலெக்ட்ரிக் வாகனம்... எப்போது அறிமுகம் தெரியுமா?

இந்தியாவில் அண்மைக் காலங்களாக மின் வாகனங்களுக்கான தேவை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையை உணர்ந்தே eBikeGo இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்குவதாக தெரிவித்துள்ளது. மேலும், தற்போது போட்டி குறைந்து காணப்படுவதாகவும் அது கருத்து தெரிவித்துள்ளது.

தயார் நிலையில் eBikeGo-வின் அதி-வேக எலெக்ட்ரிக் வாகனம்... எப்போது அறிமுகம் தெரியுமா?

மேலும், பல ஆய்வு மற்றும் புள்ளி விபரங்களை பகுப்பாய்வு செய்து, இதன் தரவுகளைக் கொண்டே eBikeGo, Rugged எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், இந்தியர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இவ்வாகனத்தின் அறிமுகம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இவ்வாகனத்தை தங்கள் நிறுவனம், நாட்டின் மிகவும் நிலையான, புத்திசாலித்தனமான மற்றும் வலுவான வாகனமாகவும் உருவாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

Most Read Articles

English summary
Ebikego announced rugged electric moto scooter launch details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X